Wednesday, July 29, 2009

காட்டுக்குள் நடை

இன்னும் சில வருடங்களில் சிங்கைக்குள் நடப்பது காட்டுக்குள் நடப்பது போலாகிவிடும் போல் இருக்கு.இப்போது பெரிய பெரிய மரங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் கூட புதிய அல்லது சிறிய பூஞ்செடிகளை நட ஆரம்பித்துவிட்டார்கள்.
கீழே உள்ள படம் நான் தினசரி மெது நடை போகும் இடம்.



கீழே உள்ள படத்தை பாருங்கள் வேகப்பாதைக்கு அருகில் இருக்கும் சாய்வு பகுதியை கூட வீணாக்காமல் மரக்கன்றை வைக்கிறார்கள்.



இப்படி வைப்பதால் என்னவோ மூன்று நாட்களுக்களுக்கு ஒரு முறையாவது மழை வந்துவிடுகிறது போலும்.

3 comments:

துளசி கோபால் said...

நல்ல விஷயம்தான்.

நாம் காட்டுக்குப்போகலைன்னா என்ன....காடே நாட்டுக்குள் வருதுல்லே:-))

கிரி said...

இவர்களை பார்த்தால் ரொம்ப பொறாமையாக இருக்கிறது..

எத்தனை ஆர்வமாக நல்ல எண்ணங்களோடு இதை செயல்படுத்துகிறார்கள்....என்னமோ போங்க :-(

வடுவூர் குமார் said...

ஆமாங்க கிரி.நாட்டை அதன் தலவர்கள் எப்படி வழி நடத்த வேண்டும் என்பதை இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.