நான் சிறுவனாக இருந்த காலத்தில் பல கதாகாலாட்சேபங்கள் நாங்கள் தங்கியிருந்த தெருவில் நடக்கும்.தெருவை அடைப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது.தெருவின் ஒரு மூலையில் நாலைந்து பெஞ்ச் போட்டால் முடிந்தது.இப்படிப் பட்ட மேடைகளில் தான் திரு கீரன் போன்றோர்கள் பேசிக்கேட்டிருக்கேன்.பல சம்ஸ்கிருத பாடல்களை கேட்டு கேட்டே ஓரளவுக்கு அம்மொழியின் பரிட்ச்சயம் ஏற்பட்டது.இப்படி ஏற்பட்ட பரிட்சயம் மற்ற மாநிலங்களில் வேலைக்கு போகும் போது அம்மொமி திறன் விரைவாக வந்தது.
இப்படி கேட்ட சம்ஸ்கிருத பாடல்கள் மூலம் மந்திர சொற்கள் கூட காதில் விழுந்திருக்குமோ என்னவோ அதன் பலனாக இன்று வரை பெரிய பிரச்சனை என்று மாட்டாமல் வாழ்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
1970 களில் நாகைக்கு வந்த திருமுருக கிருபானந்த வாரியர் சொற்பொழிவையும் கேட்டுள்ளேன்.நாகை உயர் நிலை பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டில் தான் தங்கியிருந்தார்.அவரைக்காண காலை அந்த வீட்டுக்கு போன போது அவர் பூஜை செய்யும் காட்சியும் காணக்கிடைத்தது அதெல்லாம் இப்போது புகை மூட்டத்தில் பார்ப்பது போல் மெலிதாக ஞாபகம் இருக்கு.மைக் இல்லாத காலக்கட்டத்தில் இவர் வந்ததால் குரலும் கூட்டத்தின் கடைசி நபருக்கும் கேட்கும் விதத்தில் இருக்கும்.அவ்வப்போது கேள்வி கேட்டு சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசும் கொடுப்பார்.அப்படிப்பட்டவரை மறுபடியும் காண ஒரு விசிடி கிடைத்தது.இதில் இராமகிருஷ்ணர் பற்றி பேசுகிறார்.அதில் இருந்து ஒரு சிறிய காட்சி உங்களுக்காக ஏற்றியிருக்கேன்.பார்த்து மகிழுங்கள்.
திடிரென்று ஏறும் குரல் கூட்டத்தில் யாராவது தூங்கிக்கொண்டிருந்தால் மறுபடியும் தூக்கம் வராதமாதிரி செய்துவிடும்.
நன்றி: இதை விசிடி யாக போட்டவர்களுக்கு.
3 comments:
//பல சம்ஸ்கிருத பாடல்களை கேட்டு கேட்டே ஓரளவுக்கு அம்மொழியின் பரிட்ச்சயம் ஏற்பட்டது.இப்படி ஏற்பட்ட பரிட்சயம் மற்ற மாநிலங்களில் வேலைக்கு போகும் போது அம்மொமி திறன் விரைவாக வந்தது.//
அண்ணா, இது ஓரளவு சரி என்றாலும், ஒரு மொழியில் ஆர்வம் இல்லை என்றால் அந்த மொழிப் பேசும் இடங்களில் வசித்தாலும் அதன் ஒரு சொல்லைக் கூட நம்மால் அறிய முடியாது. எனக்கு கன்னடம் கற்றுக் கொள்ள ஒரே ஒரு மாதம் தான் பிடித்தது.
//இப்படி கேட்ட சம்ஸ்கிருத பாடல்கள் மூலம் மந்திர சொற்கள் கூட காதில் விழுந்திருக்குமோ என்னவோ அதன் பலனாக இன்று வரை பெரிய பிரச்சனை என்று மாட்டாமல் வாழ்கை ஓடிக்கொண்டிருக்கிறது.//
:) இது 'அல்லாஹூ அப்பர்' என்ற மசூதிகளில் ஓதுவதைக் கேட்டதாலும் நடந்திருக்கலாம். அதாவது 'இறைவனே மிகப் பெரியவன்' என அரபி மொழியின் மந்திரச் சொல்
நீங்கள் எப்படியும் வருவீர்கள் என்று இப்பதிவு எழுதும் போதே தோனியது.....வந்துவிட்டீர்கள். நாகையில் மும்மதமும் சம்மதம் தானே அல்லாஹூ என்ன அல்லேலுயா என்ற சத்தத்தில் கூட அம்மாதிரி நேர்ந்திருக்கலாம்.
//வடுவூர் குமார் said...
நீங்கள் எப்படியும் வருவீர்கள் என்று இப்பதிவு எழுதும் போதே தோனியது.....வந்துவிட்டீர்கள். நாகையில் மும்மதமும் சம்மதம் தானே அல்லாஹூ என்ன அல்லேலுயா என்ற சத்தத்தில் கூட அம்மாதிரி நேர்ந்திருக்கலாம்.
//
இறைத் தூதிரின் தூதராக எனக்கு அமானுஷ்ய அழைப்பு வருகிறது, நானென்ன செய்ய !
:)
Post a Comment