சிங்கை இந்தியர்களின் ஒரு மைல் கல் என்றால் “முஸ்தாபா” கடை தொகுதிக்கு கட்டாயம் ஒரு இடம் இருக்கும்.இந்நாட்டின் பிரதமரே தேசிய தின உரையில் சொல்கிறார் என்றால் அதன் பிரபல்யம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.ஒரு சின்ன இடம் என்று ஆரம்பித்த கடை இன்று ஒரு தெருவைத்தாண்டி அடுத்த தெருவையும் தாண்டிப்போய் கொண்டிருக்கிறது.வெளியூரில் இருந்து வருபவர்கள் அனைவரும் செல்ல விரும்பும் கடைத்தொகுதியாக விளங்கி வருகிறது முஸ்தாபா.
போன வாரம் அந்த பகுதிக்கு போய்கொண்டிருக்கும் போது கடந்த ஒரு வருடமாக நடந்து வரும் இந்த கட்டுமானத்தொகுதி பக்கம் பார்க்க நேர்ந்த போது கண்ணில் பட்டது இப்பணி முஸ்தாபாவுக்காக நடக்கிறது என்று தெரிந்தது.
இப்போது போனாலே அரை நாள் உள்ளே இருந்தாலும் போத மாட்டேன் என்கிறது அதோடு இதுவும் சேர்ந்துக்கொண்டால் ஒரு முழு நாளும் போவதே தெரியாது.
இப்போதெல்லாம் கான்கிரீட்டுக்கு பதில் அதிகமாக இரும்பை உபயோகிப்பதை இக்கட்டுமானத்திலும் காணலாம்.மணல் தட்டுப்பாட்டை இப்படி கட்டுவதன் மூலம் ஓரளவு இதனை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம்.
6 comments:
Ohhh. Is it for Mustafa? I thought it is some other building..they started long back....
வாங்க அதிலை
இவ்வேலை ஆரம்பிக்கும் போது தெரியவில்லை ஆனால் இப்போது அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் தெரிந்தது.
அப்படியா!
ஆமாம் கிரி.அப்படித்தான் தோன்றுகிறது.
திட்டமிட்ட சீரான வளர்ச்சி இந்த முஸ்தாஃபா நிறுவனத்துக்கு இருக்கு.
நேற்றைய இடுகையில்தான் முஸ்தாஃபாவைப் பத்திக் கொஞ்சம் சொல்லி இருந்தேன்.
கிச்சனர் ரோடும் சிராங்கூன் ரோடும் சந்திக்குமிடத்தில் இன்னொரு மால் வந்துக்கிட்டு இருக்கு பார்த்தீங்களா?
ஆனா எப்பேர்ப்பட்டக் கட்டிடங்கல் என்றாலும் பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வேலை நடக்குது இங்கெல்லாம்.
நம்ம சிங்காரச் சென்னையில்?
வீடு கட்டறோமுன்னு பப்ளிக் ரோடு பூராவையும் வளைச்சு மணலும் கல்லும் போட்டு வச்சு வேலை நடக்குது. இதையெல்லாம் கேக்கமாட்டாங்களா? நெட்டாவது ஒன்னாவது. பாதி சிமெண்ட் மணல் தூள்கள் தெருமுழுக்கப் பகிர்வுதான்.
துளசி இன்னும் நாம் போகவேண்டிய தூரம் மிகவும் அதிகம் அதுவும் இத்துறையில்.
மக்களுக்கு விழிப்புணர்வு வந்திடாத மாதிரி அரசாங்கம் நடத்துவது அவ்வளவு எளிதல்ல. :-))
Post a Comment