கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் போன முடிவு செய்யும் போதே திரும்பி வரும் வழியில் "பாசக்கார மக்ககளின்" தலைநகரான மதுரையையும் சுற்ற வேண்டும் முடிவு செய்திருந்தோம்.பதிவர்கள் திரு சீனா & திரு தருமி போன்றோர்கள் ஞாபகம் வந்தாலும் சரியான நேரம் சொல்ல முடியுமா என்ற தயக்கத்தில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
கோவியாரின் பதிவு இங்கு.
இரவு சென்னையை விட்டு கிளம்பி விடியற்காலை 4.15க்கெல்லாம் மதுரை வந்துவிட்டோம்.பயண முகவரின் ஆள் வண்டி நிற்கும் பிளாட்பாரத்துக்கே வந்து சந்தித்து அழைத்துச்சென்றார்.மதுரையில் பிளாட்பாரம் டிக்கெட்டெல்லாம் கிடையாதா?மக்கள் ஏதோ கடைத்தெருவுக்குள் வந்து போவது போல் தோன்றியது.மதுரை மண்ணை மிதிக்கும் போதே ரயில் நிலையத்தில் இருக்கும் மரத்தில் இருந்து குயிலின் குரல் வரவேற்றது.விடியற்காலை என்பதால் அதன் சத்தமும் அதிகமாகவே கேட்டது.
ஸ்டே ஷனில் சந்தித்தித்த முகவர் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மகிழுந்து ஓட்டுனரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.அங்கிருந்து எங்களை அவர் தான் கொடைக்கானலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.மதுரையில் இருந்து கொடைக்கானல் எப்படியும் 3.5 மணி ஆகும் என்பதாலும் மற்றும் எங்கள் Check-in நேரம் மதியம் 12 மணி என்பதாலும் அவ்வளவு அவசரம் காட்டவில்லை.மதுரையிலேயே ஒரு கடையில் நிறுத்தி டீ/காபி அருந்திவிட்டு கிளம்பினோம்.என்ன தான் தாமதமாக கிளம்பினாலும் கொடைக்கானலுக்கு வந்து சேரும் போது மணி 9 தான் ஆகியிருந்தது.ஹோட்டல் எங்களுக்கு உடனே அறையை ஒதுக்கிக்கொடுத்தது.கொடைக்கானல் படங்கள் இங்கே.
3 நாட்கள் கொடைக்கானலை அனுபவித்த பிறகு காலை 8 மணிக்கு அங்கிருந்து கிளம்பி கொடைக்கானல் நோக்கி பயணப்பட்டோம்.மலை இறக்கம் முடிந்த பிறகு மகிழுந்து உள்ளே ஏர்கான் போட்டால் வேலை செய்யவில்லை,ஏதோ பிரச்சனை.ஓட்டுனர் யாரிடமோ பேசினார் ஆனால் பிரச்சனை சரியாகமலேயே பயணத்தை தொடர்ந்தோம்.
முதலில் திருப்பரங்குன்றம் போனோம்.கோவிலின் வெளியில் காலை கீழே வைக்கமுடியாத அளவுக்கு 11 மணி வெய்யில் தகித்தது.கோவிலின் ஸ்பெசல் தரிசனத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த்தது.எனக்கு பக்கத்தில் இருந்த ஒரு பெரியம்மா முருகன் பாடல்களை மனமுருகி பாடிக்கொண்டிருந்தார்.தரிசனத்தை முடித்த போது சாப்பாட்டு வேளை வந்துவிட்டது.சாப்பிட்ட பிறகு அடுத்த இடம் “திருமலை நாயக்கர் மஹால்”. மேம்பாட்டு வேலைகள் நடந்துவருவதால் ஒரு நல்ல இடத்தை பார்த்த அனுபவம் கிடைக்காமல் போனது.இதன் முழு அளவை அங்கு எழுதிவைத்திருப்பதை பார்த்ததும் இப்போது இருக்கும் அளவு மிகவும் சிறியதாகப்பட்டது.சுமார் 400 வருடங்கள் பழமையான கட்டிடம்.
அடுத்து போன இடம் காந்தி மியூசியம்.சுமார் 2 மணி நேரம் பொழுது போனது அங்கு.பல அரிய புகைப்படங்கள் பார்க்க முடிந்தது.Round Table Conference படத்தில் காந்தி முகத்தை யாரோ கிழித்து வைத்திருக்கார்கள்,இதே போல் சுபாஸ் சந்திர போஸ் முகமும் ஒரு படத்தில் குடையப்பட்டுள்ளது.சுற்றுலாப்பயணிகள் சிலரே வருகின்றனர்.
கடைசியாக மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்.மாலை 5.30 மணிக்கு தான் தரிசனம் கிடைக்கிறது அதனால் 4 மணிக்கு போய் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை.
பல காலங்களாக வலைப்பக்கங்களை படித்து வருவதாலும் நான் எழுத ஆரம்பித்த நாட்களில் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் “கால்கரி சிவா” எழுதிய ஜிகர்தண்டா பதிவு அப்போது ஞாபகத்தில் இருந்ததாலும் எங்கள் ஓட்டுனரிடம் சொல்லி இந்த கடையில் சாப்பிட்டோம்.வேறு நல்ல கடை இருக்குமோ என்னவோ! டேஸ்ட் என்னை அவ்வளவாக கவரவில்லை.
மிக முக்கியமாக, எப்போதே எழுதிய என் நண்பனின் முகவரியை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று போய் அந்த சாலையை பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.அது முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான்.
ஓரளவு சுற்றிய பிறகு சாலை ஓர கடையின் டேஸ்டையும் பார்த்துவிடலாம் என்றாலும் அதுவும் முடியாமல் போனது.
படமாக போட்டுக் கொல்லாமல் நகர் படமா கொடுத்துள்ளேன் பார்த்து மகிழவும்.
6 comments:
படங்கள் அருமை :)
அதிலும் அந்த சிக்னல் படம் என்னை ரொம்பவே கவர்ந்தது. நான் ஜனவரியில் சென்ற போது பார்க்க வில்லை அல்லது கவனிக்க வில்லை என்று நினைக்குறேன்.
மதுரை மாநகர் முழுவதும் நிரம்பி வழியும் அஞ்சாநெஞ்சனின் ஒரு படம் கூட இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழகம் மட்டுமில்லாமல், ஏற்படும் பல மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன், சிவா.
சிவா இதற்கு முன் எப்படி என்று தெரியவில்லை நான் பார்த்த வரையில் கண்ணில் படவில்லை.
thanx 4 u r comment my frd
shiyamsena
free-funnyworld.blogspot.com
welcome shiyamsena.
Post a Comment