இந்த SQL பற்றி போன வருடம் வரை எதுவுமே தெரியாது.சில வருடங்களுக்கு முன்பு நண்பர் மா.சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது Data Base பற்றி பேச்சு வந்தது,பேசி முடித்ததும் ஓரளவு தான் புரிந்த மாதிரி இருந்தது பிறகு அந்த நினைப்பும் போய்விட்டது.
போன வருடம் நம் பதிவர் தமிழ் நெஞ்சம் கொஞ்சம் விலாவாரியாக எழுதியதும் ஆர்வம் பிறந்து என் கணினியில் நிறுவி (கொஞ்சம் அவஸ்தைபட வேண்டியிருந்தது) முயன்று பார்த்தேன்.மென்பொருள் தயார் அதை முயன்று பார்த்ததில் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தது அதை அப்படியே தொடரலாம் என்று பார்த்தால் என்னிடம் அவ்வளவாக Data இல்லாதது புரிந்தது.இது நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் போல் இருக்கு.
சிங்கை வந்த பிறகு நூலகம் போகும் பழக்கம் தொடருகிறது அப்படி இருக்கும் நேரத்தில் ஞாயிறு Choa Chu Kang நூலகம் போயிருந்தேன்.புது இடத்தில் நிறைய வசதிகளுடன் இருந்தது.நுழைவாயிலிலேயே புது வரவுகள் என்று போட்டு கீழ்கண்ட புத்தகம் கண்ணில் பட்டது.ஏற்கனவே அனுபவம் இருந்ததால் புரிவதில் கஷ்டம் இல்லாமல் இருந்தது.மிகவும் எளிமையாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.
இந்த ஆசிரியர் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்ற எண்ணத்துடன் பழைய படங்களை துழாவிக்கொண்டு இருந்த போது சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இப்படி ஒரு புத்தகம் படித்தது ஞாபகம் வந்தது.
மேற்கண்ட நூலில் பேசிக்கை மிக அழகாக புரியும்படி சொல்லியிருப்பார்.புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
4 comments:
என்ன Data base நிறுவினீர்கள்.
Microsoft ல் Northwind என்ற sample database உண்டு.
SQL Server Express edition ல் அவ்வளவாக வசதிகள் கிடையாது.
நேரம் கிடைக்கும் போது GTalk ல் பேசலாம். என்னால் முடிந்த தகவல்களையும் உதவிகளையும் செய்கிறேன்.
வாங்க வெங்கட்ராமன்
எங்கிட்ட தான் Data வே இல்லையே!! மற்றும் இதன் முழு பயன்பாடு என்னை போன்றவர்களுக்கு எப்படி உயயோகப்படும் என்று தெரியவில்லை.
நேரம் வரும் போது gtalk யில் பேசலாம்.
நன்றி.
thanks dear dude
Welcome Shankar.
Post a Comment