Saturday, May 09, 2009

இது ஏன் இப்படி?

துபாயில் இருந்த போது கண்ணில் படும் சில விஷயங்கள் “ஏன் இப்படி” என்று புரியாமல் இருக்கும்.அதில் முதல் வகை சாலையில் பாதசாரி கடக்கும் இடம்,அங்கு விளக்கும் & கருப்பு/வெள்ளை கோடுகளும் இருக்கும்.இன்னும் அந்த குழப்பம் போகாமல் சிங்கையில் நின்று நான் வாகனத்தை பார்க்க, ஓட்டுனர் என்னை பார்க்க ஒரே குழப்பம் தான்.

அந்த வரிசையில் துபாயில் தினமும் நான் நடந்து போகும் பாதையில் இந்த விளம்பர பலகை.



நடப்பவர்கள் அவ்வளவு பேர் இல்லை என்பதால் நட்ட நடு பாதையில் விளம்பரத்துக்கான தூண் இருப்பதை யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை.அந்த தூணினால் நமக்கு எதுவும் பிரச்சனையில்லை ஆனால் இப்படி வேலைசெய்தாலும் ஒத்துக்கொள்கிற அதிகாரிகள் இருக்கிறார்களே என்பது தான் ஆதங்கம்.பல இடங்களில் வேலை ஒருங்கிணைப்பு என்பது இல்லாதது போல் இருக்கு.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது விளம்பர பலகையில் எந்த பிரச்சனையும் தெரியாது,அப்படியே அதன் கால் பக்கம் பாருங்கள் (படம் 2).தூணை தாங்கியிருக்கும் Plate ம் அந்த Frame ம் நேர் கோட்டில் இல்லாமல் ஒரு பக்கம் ஒதுங்கி இருக்கும்.இது எத்தனை நாட்களாக இருக்கு.கொஞ்சம் மாற்றி கேட்கணும்....எத்தனை மாதங்களாக என்று.இதற்கிடையில் மின்சார இணைப்புக்கு தேவையான ஒயர் வேறு எங்கிருந்தோ வருகிறது.



இப்படி இருப்பது பிரச்சனையா? இல்லை/ஆம் என்று இருவகை பதில் கிடைக்கலாம்.

பணம் போட்டு இந்த வேலையை செய்யச்சொன்னவர் பார்த்தால் இந்த Plate இப்படி வெளியே நீட்டிக்கொண்டு அசிங்கமாக இருக்கு என்று கேட்கலாம் அல்லது நடந்து போகிறவர் காலை பதம் பார்த்து அவர் இவர்கள் மீது வழக்கு போடலாம்.ஆக மொத்ததில் பணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் வேலை செய்தால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

2 comments:

கிரி said...

இன்னும் கொஞ்சம் பெருசா வைத்து இருந்தா எவருமே போக முடியாது போல இருக்கே :-)))

வடுவூர் குமார் said...

வாங்க கிரி,இது ஒரு உதாரணம் மட்டுமே!!