Tuesday, May 12, 2009

மாங்காய் ஆசை.

இப்போது தான் கொஞ்ச நாட்களாக சிங்கையில் மாம்பழம் கண்ணில் பட ஆரம்பித்துள்ளது.விலையென்னவோ அதே 10 வெள்ளி - 5 பழங்கள்.கூறு கட்டி வைத்து விற்கிறார்கள்.

நான் தினமும் வேலைக்கு நடந்து போகும் வழியில் இந்த மாமரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் மாங்காயை பார்த்த உடனே கை/கண் கல்லு இருக்கா என்று தேடுகிறது.இது வேறொன்றுமல்ல நாகையில் இருந்த போது பெருமாள் கோவில் மாமரத்தில் மாங்காய் அடித்து தின்ற நினைவு.அந்த நினைப்பு இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கு போல் இருக்கு.




இங்கு இதை அடித்து தின்றால் செமத்தியான Fine கட்டணும் அதற்கு பேசாம சிரங்கூன் சாலைக்கு போய் பழமாகவே சாப்பிட்டுவிடலாம். :-)

10 comments:

முக்கோணம் said...

அருமை..சிரங்கூன் சாலைக்கு போய் மாம்பழம் சாப்பிட்டதை பற்றியும் ஒரு பதிவு எழுதவும்..

Unknown said...

அட உடுங்க தம்பி....!!! இங்க வந்துருங்க... ஒரு லோடு மாம்பழம் வாங்கித் திங்கலாம்.....

வடுவூர் குமார் said...

நிச்சயமாக முக்கோணம்.

வடுவூர் குமார் said...

மேடி வரலாம் என்றால் இங்கு விட மாட்டேன் என்கிறார்களே!!

கோவி.கண்ணன் said...

சிங்கையில் இந்த முறை பூத்த மாம்பூக்கள் எதுவுமே கொட்டிவிடவில்லை. காரணம் அந்த சமயத்தில் பலமான மழை பொழியவில்லை. அப்படியே காய்த்துவிட்டது. பாசரிஸ் பகுதியிலும் நிறைய மறங்கள், ப்ளாக்க்கு கீழே இருக்கும் மரங்களில் கையால் எட்டிப் பறிக்கும் அளவுக்கு காய்த்திருக்கிறது. அவ்வப்போது 1, 2 பறித்திருக்கிறேன்.

வடுவூர் குமார் said...

பறித்ததெல்லாம் சரி,சுவை எப்படி இருந்தது?
பறிக்கும் போது பார்த்தால் 500 வெள்ளி தண்டனையாமே! அது Pasir Ris யில் கிடையாதா?

jeevagv said...

//பழமாகவே சாப்பிட்டுவிடலாம். :-)//
இருந்தாலும் காய் போல வருமா?! ;-)

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
நிஜம் தான் காய் போல் வராது தான் அதுவும் திருட்டு மாங்காய்க்கு தனி ருசி தான். :-))

S.Muruganandam said...

அன்பு வடுவூர் குமார் அவர்களே,

அடியேனுக்கு குமரன் பட்டாம் பூச்சி விருது வழங்கி்னார், அடியேன் அதை தங்களுக்கு வழங்குகின்றேன் , வாழ்த்துக்கம்.

விருதைப்பற்றி அறிய செல்லுங்கள்
விருது

வடுவூர் குமார் said...

நன்றி கைலாஷி
ஏற்கனவே இருவர் கொடுத்ததை ஞாபகப்படுத்திட்டீங்க,கூடியவரை முயற்சிக்கிறேன்.
நன்றி.