Wednesday, May 27, 2009

கம்பி காட்டும் வருடி.

கட்டிடம் கட்டி 20 ~ 30 வருடங்கள் ஆகிவிட்டது அதில் ஒரு மாடியை இப்போது இருக்கும் பணியை மாற்றிவிட்டு வேறொரு பணிக்கு குத்தகை விட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? முதலில் புதிதாக குத்தகை எடுப்பவரை கூப்பிட்டு காண்பித்து விலையெல்லாம் பேசிட்டு பணத்தை வாங்கிட்டு போய்விடுவீர்கள்.குத்தகைக்கு எடுப்பவரும் பணம் கொடுத்தாச்சு இனி நம் வேலையை பார்ப்போம் என்று கொத்த வேண்டிய இடத்தில் உடைக்க ஆரம்பிப்பார்கள்.இது அத்தனையும் சாதாரணமாக நடைபெரும் நிகழ்ச்சிகள்.இதுவே ஒரு பெரிய நிறுவனத்தின் கட்டிடத்தில் மற்றொரு நிறுவனம் குத்தகைக்கு எடுக்குது என்றால் என்ன செய்வார்கள்? பார்போமா?

குத்தகைக்கு எடுப்பவருக்கு கட்டிட வயது முதலில் எச்சரிகை மணி அடிக்கும் அதனால் நாம் எடுக்கப்போகும் நிலையில் கட்டிடத்தின் தரத்தை சோதிப்பார்கள்.சிவில் வேலை செய்பவர்கள் கட்டிடத்தின் கான்கிரீட் அமைப்பை பார்த்தே இது எப்படி இருக்கும் என்று ஓரளவு கணித்துவிட முடியும் ஆனால் அதெல்லாம் இப்போது வேலைக்கு ஆகாது.கட்டிடத்தை சோதிக்கனும் என்றால் கான்கிரீட்டை சோதிக்கனும் என்பது அடிப்படை.கான்கிரீட்டை எப்படி சோதிப்பது?

அதற்கு பல முறைகள் இருக்கு.அதற்கு முன்பு கான்கிரீட் நிற்பதற்கு ஏதுவான கம்பி சரியாக இருக்கா என்று பார்க்கனும்.கானிகிரீட் உள்ளே உள்ள கம்பியை எப்படி சோதிப்பது?
10 வருடங்களுக்கு முன்பு என்றால் ஒரு சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து கான்கிரீட்டை உடைத்து அதில் இருக்கும் கம்பிகளை வைத்து முடிவு செய்வார்கள்.இப்படி செய்வது உடைந்த இடத்தை திரும்ப பூசும் போது அது மட்டும் தனியாக அசிங்கமாக தெரியும் அதோடிலில்லாமல் நாமாகவே கான்கிரீட் விரிவடைய ஒரு இடத்தை ஏற்படுத்திவிடுகிறோம்.

மேல் சொன்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழியாக ஒரு புதிய முறையை சில நாட்களுக்கு முன்பு கண்டேன,அது உங்கள் பார்வைக்கு.

இந்த தொழிற்நுட்பத்துக்கு பெயர் “Ferroscan" இதை Hilti என்ற நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.இதில் அடங்கியுள்ள பொருட்கள் கீழே படத்துடன் கொடுத்துள்ளேன்.

1.நெகிழி பேபர்.



இந்த பேப்பர் மேல் தான் நாம் உபயோகப்படுத்தும் வருடி (Scanner) ஓடப்போகிறது.

2.வருடி



இந்த வருடி மூலம் நாம் கம்பி இருக்கும் இடம் அதன் அளவு போன்ற விபரங்களை பெற முடியும்.இதன் உள்ளே இருக்கும் தற்காலிக நினைவகம் 9 வருடல் வரை சேமிக்க முடியும் அதற்கு பிறகு வேறு நினைவகத்துக்கு மாற்றி விட்டு பணியை தொடரனும்.

3.Slab யின் அடிப்பக்கத்தை வருடுகிறார்.



இந்த வருடி அதன் நிலையில் இருந்து 100 மி.மீட்டர் வரை உள்ள பொருட்களை இனம் காணமுடியும்.

இது தரையில்...




அந்த வருடி(Scanner) மூலம் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி அதனுள் இருக்கும் நினைவகத்தில் சேமித்துவைத்துக்கொள்ளும்.அதன் பிறகு கணினி மென்பொருள் மூலம் அதன் அளவு விபரங்களை கணித்து சொல்வார்கள்.

இதன் மூலம் கான்கிரீட் உள்ளே இருக்கும் கம்பிகளின் விபரத்தை அதை உடைக்காமலே கணிக்கமுடியும்.

வருடியில் இருந்து தற்காலிக நினைவகத்து ஏற்றம் காணுகிறது.



இதெல்லாம் சரி,விலை எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?

கொஞ்சம் தான்,சுமாராக 7 லட்சம்.

அடுத்த பதிவில் கான்கிரீட்டை எப்படி சோதிப்பது என்பதை சொல்கிறேன்.

4 comments:

கணினி தேசம் said...

Interesting One...

வடுவூர் குமார் said...

நன்றி கணினிதேசம்.

கபீரன்பன் said...

புதிய தொழில்நுட்பம் நன்றாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி

வடுவூர் குமார் said...

நன்றி கமீரன்பன்.