சிங்கையை விட்டு 7 மாதங்கள் துபாயில் இருந்து விட்டு வந்த பிறகு தினமும் மாற்றங்களுடன் இருக்கும் சிங்கையின் சில மாற்றங்களை பார்க்கலாமா?
நான் இருக்கும் Yew Tee பக்கத்தில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த NTUC கடை தொகுதி முற்றாக அழிக்கப்பட்டு அவ்விடத்தில் சாப்பாட்டுக்கடைகள் முளைத்திருந்தன அதில் சீன சைவ சாப்பாட்டுக்கென ஒரு கடையும் இருந்தது.
இதற்கு பக்கத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருந்த கடைத்தொகுதியின் பல புதிய கடைகளும் கீழ்தளத்தில் NTUC கடை மாற்றத்துடன் கொஞ்சம் பெரிய இடத்தில் மாற்றம் கண்டிருந்தது.நான் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கட்டுமான வேலை நடந்துகொண்டிருந்த HDB வீடுகள் வானத்தை நோக்கி எழும்ப ஆரம்பித்துவிட்டது.
வந்தவுடன் முதலில் சந்தித்த கோவியாருடன் Yishun பகுதியிலும் நிறைய மாற்றங்களை காண் முடிந்தது, முக்கியமாக கோமலாஸ் சாப்பாட்டுக்கடை.ஒரு காலத்தில் சாப்பாடுக்காகவே கோமலாஸ் தேடி சிரங்கூன் சாலைக்கு செல்ல வேண்டியிருந்தது.
மாற்றம் ரயிலின் உள்ளேயும் தெரிந்தது.கீழே உள்ள மாதிரி ஒளிரும் அட்டைகள்.வரப்போகும் நிறுத்தம் மற்றும் திறக்கப்போகும் கதவுகளின் இடத்தையும் காண்பிக்கிறது.
ஏற்கனவே சிங்கையை ஒரு தோட்டமாக மாற்றிக்கொண்டு வந்தாலும் இருக்கிற பசுமை போதாது என்று நினைத்து இரு பெரிய மரங்களுக்கு நடுமே சிறிய செடிகளை வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.காலை & மாலை வேளிகளில் சாலை ஓரம் நடக்கும் போது பறவைகளின் சத்தம் ஏதோ காட்டுக்குள் நடப்பது போல் உணர்வை கொடுக்கிறது.
இப்போதைக்கு பெயர் தெரிய வைக்கும் கட்டுமானப்பகுதியில் இருக்கும் ஒரே கட்டிடம் மெரினா பே பகுதியில் கட்டப்படும் IR என்று சொல்லப்படுகிற சூதாட்ட விடுதி தான்.கான்கிரீட்டை தவிர்த்து ஸ்டிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுவது போல் தோற்றமளிக்கிறது.
மற்றொரு கவர்ச்சி
5 comments:
நல்ல பதிவு
மரங்கள் தற்போது அதிக அளவில் நடப்பட்டு வருகின்றன.
மின்சார ரயிலில் நீங்கள் குறிப்பிட்டது போல சோதனை முறையில் செய்து கொண்டு இருக்கிறார்கள்
நல்ல பதிவு
மரங்கள் தற்போது அதிக அளவில் நடப்பட்டு வருகின்றன.
மின்சார ரயிலில் நீங்கள் குறிப்பிட்டது போல சோதனை முறையில் செய்து கொண்டு இருக்கிறார்கள்
கிரி,அந்த மின்னூட்ட பலகை தான் எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது.Redhill யில் இருந்து City Hall வரும் வழியில் அந்த குகையில் ஸ்பீக்கர் மூலம் சொல்லப்படுவதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது இதன் மூலம் அந்த தேவையும் பூர்த்தியாகிவிட்டது.
Thirumbi singaporekku vanthacha? I used to stay in blk 701, close to Choa chu kang stadium and used to take mrt from yew tee. Surprised to know that NTUC (in the premises of mrt station) has been demolished. Normally they demolish buildings that are quite old.
-Arasu
வாங்க அரசு
NTUC இருந்த பகுதியை அப்படியே துடைச்சி எடுத்துடுட்டாங்க.இருந்த இடம் தெரியாமல் இருக்கு.
Post a Comment