Friday, May 01, 2009

பாலைவன ஒட்டகம்.

நம்முர் மாதிரி நகரவாசிகளுக்கு ஒட்டகத்தை பார்க்கனும் என்றால் மிருககாட்சி சாலைக்கு தான் போகனும் ஆனால் அமீரகத்தில் உள்ளவர்கள் மகிழுந்தை எடுத்து ஒரு பத்து கி.மீட்டர் வெளியே போனால் பார்த்து மகிழலாம்.

சில சாலைகளில் இதன் மீது அக்கறை கொண்டு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையாக ஓட்டவேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

நகரத்து வெளிப்புரங்களில் சாலையின் இருமருங்கிலும் சிறிய வேலி போட்டு அவை சாலை பக்கம் வந்துவிடாமல் இருக்க போட்டு வைத்துள்ளார்கள்.ஒட்டக பால் பாட்டிலில் கிடைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள்.குட்டி அதிகமாக குடித்துவிடாமல் இருக்க மறைப்பு போட்டுவிடுவதாக எங்கள் ஓட்டுனர் சொன்னார்.

சமீபத்தில் பிரதி எடுக்கும் முறையில் ஒட்டகத்தையும் எடுத்துள்ளார்களாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் வேலை நடக்கும் இடத்துக்கு ஒரு வேலையாக அனுப்பிய போது வழியில் தென்பட்ட ஒட்டகங்கள் படம் கீழே.



5 comments:

வெங்கட்ராமன் said...

நானும் முதல்ல சிங்கப்பூர்ல பாலைவனம் இருக்கான்னு குழம்பிட்டேன்.

KADUVETTI said...

ஜூப்பரு :))))))

வடுவூர் குமார் said...

நன்றி வெங்கட்ராமன் & காடுவெட்டி.

Unknown said...

நெம்ப அருமையா இருக்குது பாலைவனம்...!! ஒட்டகத்த இன்னும் கொஞ்சம் க்ளோஸ்-அப்புல எடுத்திருக்கலாம்.....!!!!

வடுவூர் குமார் said...

வாங்க மேடி
அந்த அளவுக்கு ஜூம் வசதி உள்ள கேமிரா அப்போது கைவசம் இல்லை.