உலகம் முழுக்க வேலைகள் இப்படித்தான் போகிறதா?
கண்டமேனிக்கு சுடுவதால்??
சும்மா இருந்து தொலையேன்டா!!!
Thursday, January 29, 2009
"வெண்ணெய்"
வெளிநாட்டில் இருந்து ஊருக்கு போய் திரும்பியிருக்கும் ....
நண்பர்: அண்ணே, ஊரில் உங்க வீட்டிலே உங்களை பற்றிய பேச்சு வந்த போது,வீட்டுக்காரம்மா உருகிட்டாங்க தெரியுமா?.
நான்: அப்படியா!
நண்பர்: அதென்ன ரகசியம் அண்ணே!
நான்: அவுங்களை நான் "வெண்ணெய்" யாக வைத்திருக்கேன்.
பின் குறிப்பு: இது கற்பனையே. :-)

Monday, January 19, 2009
இன்றைய நிலை.
எதுவும் முடியும்.
போன வாரம் நடிகர் சிவக்குமார் பேசிய "தாய்,மனைவி & மகள்" நிகழ்ச்சியை இணையம் மூலம் பார்த்தேன்.என்னவொரு அருமையான பேச்சு! வைத்த கண் வாங்காமல் முழுவதும் பார்த்துவிட்டு தான் நகர்ந்தேன்.சுமார் 1.30 மணிக்கு மேலேகா அந்த நகர்படம் இருந்தது.இணையத்தில் போட்ட புண்ணியவானுக்கு(இசைத்தமிழ்.நெட்) அதிகமான பேண்ட்விட்த் இருக்கு போல் இருக்கு,சுமார் 200 MB க்கு மேலுள்ள கோப்பை ஏற்றிவைத்திருந்தார்.
நாம் பெற்ற அனுபவத்தை வீட்டில் உள்ளவர்களும் பார்க்கட்டுமே என்று பயர்பாக்ஸ் நீட்சி முலம் அதை தரவிறக்கினேன்.ரியல் பிளேயர் (சமீபத்திய பதிப்பு) மூலமும் தரவிறக்கலாம்.இப்படி தரவிறக்கிய கோப்பு .flv என்ற வாலுடன் இருக்கும்.
இந்த பேச்சை பார்க்கும் போது தொலைக்காட்சியில் என்னென்ன விளம்பரங்கள் வந்ததோ அவை அனைத்தையும் பார்க்கும் படி ஏற்றிவைத்திருந்தார்கள்.என்னதான் எலிக்குட்டி மூலம் துரத்திவிட்டு பார்க்கலாம் என்றாலும் அந்த விளம்பரங்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோனியது.AVI,MPEG என்ற வீடியோ கோப்பு என்றால் அதற்குரிய மென்பொருட்கள் மூலம் கழித்துகட்டி விடலாம் இதுவோ .flv யில் இருக்கு.இந்த கோப்பில் தேவையில்லாததை வெட்டிவிட்டு மறுபடியும் அதை .flv யாகவே சேமிக்க வேண்டும்.இந்த வேலைசெய்ய தகுந்த மென்பொருட்கள் இணையத்தில் தேடிய போது கூகிளார் பலவற்றை காண்பித்தார். அதில் எனக்கு ஓரளவு பரிட்சயம் உள்ள வெர்சுவல் டப்- VirtualDub என்கிற இந்த மென்பொருளை தேர்ந்தெடுத்தேன்.
மென்பொருளை நிறுவியவுடன் தான் தெரிந்தது அதனால் .flv ஓட விட முடியாது என்று,திரும்பவும் கூகிளாரிடம் கேட்டவுடன் அதற்கென்ற ஒரு ஒட்டை அடைப்பான் (plug-in) இருக்கு அதை நிறுவியவுடன் நீங்கள் நினைத்த மாதிரி செய்யலாம் என்றது.செய்தேன், இப்போது விளம்பரம் இல்லாத சொற்பொழிவை மட்டும் கேட்கமுடிந்தது.
அந்த பிளக் இன் கிடைக்கும் இங்கே.முயன்று பாருங்கள்.
இதே முறையை avidemux என்ற மென்பொருள் மூலமும் செய்ய முடிகிறதாம்,நான் இன்னும் முயற்சிக்கவில்லை.

Saturday, January 17, 2009
அழகிய கட்டிடங்கள்
நேற்று கரமா பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் போது மாலை நேரம் சூரிய கதிர்கள் சாய்வாக கட்டிடங்கள் மேல் பொழிந்துகொண்டிருந்தது.பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் கைத்தொலைப் பேசி மூலம் படம் எடுத்தேன்,அது உங்கள் பார்வைக்கு...
கீழே உள்ள படங்கள் இன்று காலை வேலைக்கு வரும் போது போர்ட் சயீதில் உள்ள கட்டிடங்கள் மேல் சூரிய வெளிச்சம் விழும் போது எடுத்தவை.
பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்

Monday, January 12, 2009
அரசாங்க அரசியல்??
சற்று முன் ஒரு நகராட்சி வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது அங்கு வேலை செய்பவர்களின் விபரங்களை (செல் பேசி எண் கூட இருக்கு) போட்டு இருந்தார்கள்.
வீட்டு முகவரி
செல் பேசி எண்
அவர்கள் படம்
மேலே சொன்ன அவ்வளவும் ஓகே தான் ஆனா அதோடு கூட அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதையும் வெளியிடனுமா?
எனக்கு புரியலை (TBCD - கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்),புரிஞ்ச மக்கள் யாராவது விளக்கினால் தேவலை.
அரசாங்கத்தையே கழகமாக்கிட்டாங்க போல் இருக்கு.

கர்ணம்
கிராமப்புறங்களில் இருந்தவர்களுக்கு இப்பெயர் மிக பரிட்சயமான ஒன்றாக இருக்கும் அதோடு கர்ணம் என்று சொல்லப்படுகிறவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.
இவர்கள் பணி என்ன? எந்த விதமான அதிகாரங்கள் இவர்களுக்கு உண்டு என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் "தெய்வத்தின் குரல்" - காஞ்சி பரமாச்சாரியர் எழுதிய நூலை படித்த போது தெரிந்தது.
கர்ணம் என்றால் "காது" என்பதாம், அப்படியென்றால் கிராமத்து மக்களின் குறைகளை கேட்பதற்கு உள்ளவர் என்ற பொருள் படும்படி வைக்கப்பட்டிருக்குமோ!
நம்மில் ஒருவரான திரு பிகேபி அவர்கள் பதிவில் "கடவுள் எதற்கு?" என்ற பதிவில் இந்நூல் Pdf கோப்பாக இருக்கு,ஆர்வமுள்ளவர்கள் தறவிரக்கி படித்துக்கொள்ளலாம்.தலைப்புக்கும் இணைப்புக்கும் முடிச்சு போடாமல் பதிவை படிச்சிட்டு, இணைப்பையும் இறக்கி படிச்சிட்டு இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டுவிடலாம்.

Sunday, January 11, 2009
சூ சூ
என்னையா தலைப்பு இது!!என்று பார்க்கிறீர்களா?
சொல்ல ஒன்றும் இல்லை,கீழே உள்ள படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.இப்ப குளிர்காலம் இங்கு அடிக்கடி போக வேண்டிவருவதால் கொஞ்சம் யோசித்து தான் போக வேண்டிய இடத்தை முடிவு செய்யவேண்டியிருக்கு.
வீடியோ பிளேயர் சொதப்புவதால் நேரடியாக இங்கு போய் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி:கல்ப் நியூஸ்

Saturday, January 10, 2009
துபாய் மால்(Mall)
நேற்று வெள்ளிக்கிழமை - பொது விடுமுறை என்றாலும் எழுந்து குளித்துவிட்டு ஒரு ஓவல்டின் குடிக்கலாம் என்று பார்த்தால் பால் பாக்கெட் இல்லை,சரி விடு என்று பேப்பரை மட்டும் படித்துவிட்டு வெளியில் கிளம்பினேன்.
நேராக கிரிக்கெட் விளையாடும் இடத்துக்கு போனேன்.இரண்டு குழுவினர் மட்டும் விளையாடிக்கொண்டிருந்தனர் அதில் ஒரு குழு மும்மரவாகவும் அடுத்தது இருப்பதை வைத்து ஏதோபொழுது போக்குவோம் என்ற நிலையிலும் விளையாடிக்கொண்டிருந்தனர் .இரண்டாவது குழுவினர் ஒரு ஆட்டம் முடிந்தவுடன் "நான் பௌலிங் போட்டு பார்க்கவா?" என்று கேட்டேன்.சரி என்ற அனுமதிக்கு பிறகு அந்த டென்னிஸ் பந்தை பௌல் செய்தேன்.பல வருடங்களுக்கு பிறகு செய்வதால் ஒரு சில பந்துகள் எங்கெங்கோ போனது.சுமார் 10.30 மணி வரை விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
12 மணி வரை மடிக்கணினியில் திரு சுகி சிவமின் சிங்கப்பூர் உரையாடல் (2002 வருடம்) இங்கு கிடைத்தது.முதல் பாகம் முழுவதும் இறங்காவிட்டாலும் ஓரளவு பார்க்கமுடிந்தது.இரண்டு பாகங்களையும் பார்த்துமுடித்தேன்.அருமையாக இருந்தது.சண்டை போடும் தம்பதிகளுக்கு செம சூடு வைத்துள்ளார்.
மதிய சாப்பாட்டுக்குப் பிறகும் மடிக்கணினியில் சில ஆடியோக்களை கேட்ட பிறகு சுமார் 3 மணிக்கு துபாய் மாலுக்கு போய்வரலாம் என்று கிளம்பினேன்.இங்கு போக நான் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ நடந்து போய் பேருந்து எடுக்கவேண்டும். 30 நிமிடங்களுக்கு மேல் நின்ற பிறகு பேருந்து வந்தது.இருக்கும் இடம் தெரியாத்தால் ஒரு தமிழ் பேசும் அன்பரிடம் கேட்ட போது கடைசி நிறுத்தம் அது தான்,நானும் அங்கு தான் போகிறேன் என்றார்.அப்பாடி என்று இருந்தது.வழி நெடுக பல கட்டிடங்கள் வேலை நடக்கிறதா இல்லையா என்பது போல் இருந்தது.இன்று விடுமுறை என்பதால் வேலை கிடையாது போலிருக்கு.வேறு ஒருவரிடம் கேட்டு சரியான நிறுத்ததில் இறங்கினேன்.வலது பக்கம் உலகத்தில் அதி உயர கட்டிடம் புர்ஸ் துபாயும் இடது பக்கத்தில் பிரமாண்டமான இந்த கட்டிடமும் இருந்தது.
நடப்பவர்களுக்கு இன்னும் சரியான பாதை அமைக்கப்படாததால் ஒரு சிறிய பாதை மற்றும் மகிழுந்து ஏறும் பகுதியில் இருக்கும் 1 அடி பாதையை உபயோகித்து போனேன்.
முதலில் நுழையும் போதே கோல் ஜோக் தான்,பல விதமான நகைகள்,கடைகள் என்று ஜொலிக்க வைத்துள்ளார்கள்.இது போதாது என்று இன்னும் பல கடைகள் வரப்போவதை முன்னிட்டு அங்கங்கு மறைப்பு வைத்துள்ளார்கள்.நடக்கும் இடம் அது இது என்று இழைத்துவைத்துள்ளார்கள்.மேலும் சில படங்கள் கீழே...
முதலில் கோல்ட் ஷோக்
கீழுள்ள படத்தில் உள்ள டூமின் வண்ணம் மாறிக்கொண்டே இருப்பது பார்க்க அழகாக இருக்கும்.இவ்வளவு துல்லியமாக பூச்சில் செய்ய செய்ய முடியாது என்பதால் அதை உற்றுப்பார்த்த போது நான் நினைத்த மாதிரி அது சிறிய சிறிய தகடுகள் கொண்டு செய்து ஒட்டவைத்திருப்பது தெரிந்தது,இருந்தாலும் நல்ல கைவண்ணம்.
கலைத்திறனுக்கு ஒரு சாட்சி.
இப்படி பல மில்லியன் கணக்கில் போட்டு திறந்திருந்தாலும் விடுமுறை நாளில் நகை கடைகளில் (40 கடை இருக்கும் என்று நினைக்கிறேன்) வெறும் 3 வரை மட்டுமே காணமுடிந்தது.கடைகாரர்களே உள்ளே உட்காரப்பிடிக்காமல் வெளியில் நின்றுகொண்டிருந்தனர் போலும்.
உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சியும் அதில் மனிதர்கள் குதிப்பது போல் உள்ள அலங்காரமும்
மிகப்பெரிய திரையில் UAE யின் பிரதம மந்திரி பார்த்துக்கொண்டிருக்க, பனி சறுக்கும் கும்பல்.இதற்கு நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 50 திர்ஹாம்.
கட்டிடத்தின் உள் அழகு கீழே உள்ள படங்களில்
இங்கு மற்றொரு அம்சமான இடம் என்றால் அது தான் மீன் காட்சிச்சாலை.சுமார் 6
மீட்டர் உயரத்துக்கு கண்ணாடியில் சுவர் எழுப்பி அதனுள் சகலவிதமான மீன்களையும் விட்டு வித்தை காண்பிக்கிறார்கள்.சுறா,துருக்கை மற்றும் கலர் கலராக.. மீன்களை விட்டுள்ளார்கள்.இந்த காட்சியை சிங்கையில் உள்ள மாதிரி தலைக்கு மேல் பார்க்க தனிக்கட்டணமாக கொடுத்து ஒரு குகையின் உள்ளே சென்று பார்க்கும் படியாகவைத்துள்ளார்கள்.
கீழே உள்ள படம் தரையின் கீழே இந்த மாதிரி விளக்குகளை வைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.
வித்தியாசமான யோஜனைகளை கொண்டு ஒவ்வொரு கடையும் பள பளக்குகின்றன.அதுக்கு ஒரு சாம்பிள் கீழே.
மொத்த கடைத்தொகுதியை சுற்றிச் சுற்ற ஒரு 5 கி.மீ தூரமாவது நடந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.கணினி மற்றும் எலக்ரானிக்ஸ் கடைகளில் ஓரளவு கூட்டம் தென்படுகிறது மற்ற கடைகளில் ,பாவமாக இருக்கு.பொது வேலை நாட்களில் வியாபாரம் இதைவிட குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இரவு 7.50 க்கு வெளியில் வந்து அதே பேருந்தை பிடிக்க நிறுத்தத்துக்கு நடந்தேன்.காத்திருப்பு தொடர்ந்தது.1 மணி நேரத்துக்கு பிறகு தடம் எண் 27 வந்தது.எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது Clock Tower வரை அதற்குப் பிறகு பேருந்து நான் நினைத்துக்கொண்டிருக்கும் வழியே செல்லாமல் வேறு வழியே வெகு தூரம் வந்துவிட்டேன்.வேறென்ன செய்ய தலையில் அடித்துக்கொண்டு நடந்து முத்தினா சாலையில் உள்ள சரவணபவணுகு வந்து ஒரு தோசை+சாம்பார் வடை சாப்பிட்டு 14 திர்ஹாம் பில்லை கொடுத்துவிட்டு வீடு வந்து சேரும் போது இரவு 10.40.
படங்கள் செல்பேசி மூலம் எடுத்தது அதனால் தரம் குறைவாகவே இருக்கும்.

Thursday, January 08, 2009
ரேஷன் அட்டை
இது இந்தியாவில் மிக முக்கியமான அட்டை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,இதை வாங்க அரசாங்க விதிப்படி 15 நாட்கள்(சுமாராக) தான் ஆகுமாம்.
விபரங்கள் இங்கு
What You Need to Do to Obtain a Ration Card
You may obtain the application form for making a new Consumer (Ration) Card from any Circle Office. You will require passport-sized photographs of the head of your family attested by a gazetted officer/MLA/MP/Municipal Councillor, the specified proof(s) of residence, and the Surrender/Deletion Certificate of the previous Ration Card, if there was any.
In case you are not able to provide any proof of residence, the Circle FSO conducts spot inquiries by recording the statements of two independent witnesses in your neighbourhood. The standard prescribed time schedule for the preparation of a Ration Card is generally 15 days. However, the procedure and time limit may vary from State to State.
There is also a provision for making amendments to valid Ration Cards.
என்னதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுதலுக்குரியது என்றாலும்...
நான் என்னுடைய குடும்பத்துக்கு விண்ணப்பித்து(இதில் பொருட்கள் வாங்க அல்ல) 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது,இன்னும் வந்துகொண்டிருக்கிறது.வரப்போகும் தேர்தலுக்கும் எங்கள் தொகுதி MLA வுக்காகவும் காத்திருக்கேன்.

கொஞ்சம் கால தாமதம் தான்..
ஒரு 10 வருட தாமதத்தை கால தாமதம் என்று சொல்லலாமா கூடாதா? தெரியலை.
15 கோடிக்கு எஸ்டிமேட் போட்டு கிட்டத்தட்ட 27 கோடியில் வேலை முடித்தால் இந்த காலதாமதம் ஒன்றுமில்லை தான்.
இங்கே சொடுக்கி மிச்சத்தையும் படிச்சிடுங்க.
நம் ஆட்களுக்கு பொருமை அதிகமாகவே இருக்கு என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

Wednesday, January 07, 2009
சீர்காழி முனிசிபாலிடி
சிங்கையில் இருந்த போது கல்யாண சான்றிதழா அல்லது உங்கள் மகன்/மகள் பிறந்த நாள் சான்றிதழோ வேண்டுமென்றால் நேரே போய் நம்ம ஹைகமிஷனில் 31 வெள்ளி கொடுத்தால் உங்கள் கடவுச்சீட்டை உதாரணம் காட்டி கொடுத்துவிடுவார்கள்.அதையே சிங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது.
ஆனால் இங்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸில்) சிங்கையில் எடுத்ததை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் போலும் அதனால் மனைவி/குழந்தைகளை கூட்டிவருவதில் சிக்கல் இருக்கும் போல் உள்ளது.
சென்னை போயிருந்த போது நமது தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள அதிகாரியிடம் கேட்ட போது உங்கள் கல்யாணம் நடந்த இடத்தில் உள்ள முனிசிபாலிட்டியிடம் தான் வாங்க வேண்டும் என்றார்.அப்போது சீர்காழி போக நேரமில்லாத்தால் இங்கு வந்துவிட்டேன்.
இன்று மதியம் வலையில் உலாவிக்கொண்டிருந்த போது கூகிளில் சீர்காழி முனிசிபாலிடி என்று போட்டு தட்டினால் ....அட! என்று ஆச்சரியப்படவைக்கும் நிலையில் இப்பக்கம் திறந்தது.
தமிழ்நாடு/இந்தியாவில் இவ்வளவு விரைவில் வலைப்பக்கம் மற்றும் இணைய வசதிகள் வந்துள்ளது பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கமிஷ்னருக்கு மின்னஞ்சல் கொடுத்து விபரம் கேட்டிருக்கேன்,பார்ப்போம் பதில் வருகிறதா என்று.

Saturday, January 03, 2009
பாத சாரி
என்ன தான் நம் பயணங்கள் நடை பாதையில் தொடங்கியிருந்தாலும் இன்னும் நம் நடைபாதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லையோ என்றே தோன்றுகிறது.
தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு ஒரு மெதுநடை நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கேன்.நான் போகும் வழி கூகிள் எர்த்தில் கீழே காட்டியிருக்கேன்.சுமாராக 3.56 கி.மீட்டர் என்று காண்பித்தாலும் அவ்வளவு இருக்காதோ என்று தோன்றுகிறது.வழியெங்கும் மனிதர்கள்,கடைகள் என்று ஓரளவு சுறுசுறுப்பாக இருப்பதாலும் நடையில் அயர்ச்சி தெரிவதில்லை.
31ம் தேதி இரவு 9.15 இருக்கும்,என் வழியில் போய்கொண்டிருந்தேன்.அப்போது அல் முத்தினா சாலையின் இறுதியில் இருக்கும் ஜீபிரா கிராசிங் கடந்து அந்த பக்கம் போகும் போது ஒரு 1 வயது குழந்தையும் அதன் பெற்றொர்களும் கண்ணில்பட்டார்கள்.அந்த குழந்தை நடக்கும் அழகை ரசித்தபடி அவர்களை கடந்து போனேன்.இதே மாதிரி தினமும் ஏதாவது தம்பதிகள் அவர்கள் குழந்தைகளை நடுவில் ந்டத்தி கூட்டிக்கொண்டு போவது வழக்கம் என்பதால் எந்தவித வித்தியாசம் இல்லாமல் அவர்களை கடந்து போனேன்.என்ன தான் முன்னாடி போனாலும் திரும்பவும் சாலை விளக்குகள் மற்றும் பாத சாரி கடக்கும் இடத்தில் சிகப்பு விளக்குகள் இருந்தால் அங்கு காத்திருந்தேன்.சிறிது நேரம் அங்கு காக்கும்படி இருந்ததால் அந்த ஜோடியும் குழந்தையும் அங்கு வந்து சேர்ந்து பச்சை விளக்குக்காக காத்திருந்தார்கள்,இப்போது குழந்தை அப்பாவின் தோளில்.
இங்கு பாத சாரிகள் கடக்கும் விளக்கும் இந்த ஜீபிரா கிராசிங்ம் சேர்ந்தே இருக்கும் வந்த சில மாதங்களில் இது புரியவில்லை.இந்த இடங்களில் யாருக்கும் முக்கியத்துவம்?நான் இது வரை பார்த்த இடங்களில் ஜிபிரா கிராசிங் இருந்தால் அங்கு நடை மனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம்,வாகனங்கள் கட்டாயமாக நிற்கவேண்டும்.இங்கு ஜிபிரா கிராஸிங் அதே சமயத்தில் விளக்கு சமிக்கை இருக்கும் போது குழப்பம் நேர்கிறது.ஆதாவது வாகனம் ஏதும் வரவில்லை என்றால் நீங்கள் ஜிபிரா கிராஸிங்கை உபயோகப்படுத்தி கடக்கலாம் இல்லாவிட்டால் விளக்கு பச்சைக்கு மாறும் வரை காத்திருக்கவேண்டும்.சமிக்கை இல்லாத இடங்களில் ஜிபிரா கிராஸிங் இருந்தாலும் பெறும்பாலான வாகன ஓட்டிகள் நிறுத்துவதில்லை,நாம் தான் பார்த்து கடக்கவேண்டும்.வெளியூர்களில் இருந்து புதிதாக வந்திருப்பவர்கள் தான் வண்டியை நிறுத்தி நம்மை போக அனுமதிப்பார்கள்.
சரி,நம்ம அந்த ஜோடியை பார்ப்போம்... இப்போது வாகனங்கள் சிகப்பு விளக்குகள் மூலம் நிறுத்தப்பட்டு பாதசாரிகளுக்கு பச்சை விளக்கு போடப்பட்டது.நான் முதல் ஸ்டெப் எடுத்துவைக்க அந்த ஜோடியின் ஆண் குழந்தையுடன் கொஞ்சம் எனக்கு முன்னாடி போக..பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நான் இந்த பக்கம் பார்க்க ஒரு கார் அவரை உரசிக்கொண்டு நிற்காமல் சென்றுகொண்டிருந்தது.மனைவியின் அலறல் கேட்டு நின்றதால் குழந்தையும் கணவரையும் அப்பெண்ணால் காப்பாற்ற முடிந்தது.இது எதுவுமே உணராமல் அந்த மகிழுந்து சிகப்பு விளக்கையும் மீறி போய்கொண்டிருந்தது.இதே முறையில் சிங்கையிலும் ஒரு பெண் ஓட்டுனர் பாதசாரி கடக்கும் இடம் என்று தெரியாமல் நிற்காமல் போய்கொண்டே இருந்தார்.இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெறும்பாலும் வாகனம் ஓட்டுவர்கள் தங்கள் நினைவில் இருந்து தப்பி வேறு காரியம் செய்துகொண்டிருப்பாதால் தான் ஏற்படுகிறது.என்ன தான் சட்ட திட்டப்படி நாம் இருந்தாலும் அதை மீறுபவர்களால் கூட நாம் துன்பம் அனுபவிக்க நேரிடும் என்பது தான் இதன் மூலம் தெரிகிறது.
பிறக்கப்போகும் வருடத்தை சந்தோஷமாக கொண்டாட அந்த தம்பதியினர் இவ்விபத்தில் இருந்து தப்பியது ஒரு பெறும் பேறு.

Subscribe to:
Posts (Atom)