Saturday, June 30, 2007

மேற்கு வானில்

நேற்று சுமார் 1 மணி நேரம் இங்கு சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த வலைத்தளம் கிடைத்தது.இப்படிப்பட்ட ஒரு வலைத்தளத்தை தேடித்தேடி முன்பு அலுத்து விட்டுவிட்டேன்,அது இப்போது கிடைத்தவுடன் ஒரே சந்தோஷம்.

புதிய வலைத்தளத்தின் முகப்பிலேயே இன்று வீனசும் & சனியும் அருகருகே தெரிவதாக போட்டிருந்தார்கள்.கீழே உள்ள படம் சென்னை வானில் மேற்கு பக்கத்தில் இரவு 8 மணிக்கு இப்படி தெரியும்.



மற்ற தேசத்தில் உள்ளவர்கள் இந்த வலைத்தளத்துக்கு போனால் அங்கு interactive sky என்று வலது பக்கத்தில் இருக்கும் அதை சொடுக்கி தேவையான விபரங்கள் கொடுத்தால் உங்கள் ஊரில் வானம் எப்படியிருக்கும் என பார்க்கமுடியும்.புதிதாக வானவியலை கற்பவர்களுக்கு இது மிகுந்த உபயோகமாக இருக்கும்.

சரி,இது கணினியில் தெரிகிறது,வெளியில் கொண்டு போய் பார்க்க முடியாதவர்களுக்காக அந்த வரை படத்தை pdf ஆக மாற்றி கொடுக்கிறார்கள்.பிறகு என்ன கஷ்டம் அப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து ஓடுங்க மாடிக்கு.

Thursday, June 28, 2007

அலுவலகத்தில்...

நேற்று வலைப்பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது நம்மவர் ஒருவர் ஒரு வீடியோ அதுவும் யூடியூபில் போட்டிருந்தார்.வீட்டில் இணைய இணைப்பில் பார்த்தேன் சும்மா அட்டகாசமாக இருந்தது.அதையே அலுவலகத்தில் சிலருடன் பகிந்துகொள்ள எண்ணினேன்.

குழுவாக செயல்படும் போது அதிக திறன் வெளிப்படுத்த வாய்புள்ளதை காண்பிக்க இந்த அசைவுப்படம் உதவும் என்று நினைத்தேன்.

இன்று காலை அலுவலகம் வந்தவுடன் இது ஞாபகம் வந்தது அதே சமயத்தில் யூ டியூப் இங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அதை செய்ய முடியாத நிலை.

கூகிளில் தேடிய போதும் சில வலைத்தளங்கள் யூ டியூபில் உள்ள முகவரி கொடுத்தால் அந்த வீடியோவை தரவிரக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருந்ததை பார்த்தேன்,முயற்சித்தேன் & தோற்றேன்,ஏனெனில் அவை நேராக யூ டியூப்பிக்கு சுட்டி கொடுத்திருந்தார்கள்.எங்களால் தான் அங்கு போக முடியாததால் வேறு பக்கங்களை தேடிக்கொண்டிருந்தேன்.

அப்படி சிக்கிய ஒரு தளம் தான் இது.இதில் உங்கள் யூ டியூப் முகவரியை கொடுத்து உடனே "தேடு" சுட்டியை அமுக்கிடாதீங்க.அந்த யூ டியூப் என்ற முகவரிக்கு பக்கத்தில் "kiss" என்று அடித்து பிறகு தேடுதலை தொடங்கவும்.

இப்படி செய்யும் போது அது உங்களை நேரடியாக யூ டியூப் பக்கத்துக்கு எடுத்துச்செல்லாமால் அதே சமயம் உங்களுக்கு வீடியோவை தரவிரக்கிக் கொடுக்கும்.மறக்காமல் அதனை .flv என்று மாற்றவும்.இப்படி மாற்றிய ஃபைலை எந்த FLV பிளேயரை கொண்டு பார்க்கலாம்.



நன்றி: youtube யில் ஏற்றியவரே!!

யூ டியூப் போக முடியாதவர்களுக்காக இங்கே ஏற்றியுள்ளேன்.

ஆமாம் யூ டியூபே போக முடியாவிட்டால் எப்படி அட்ரஸ் எடுப்பது என்று கேட்கிறீர்களா? எனக்கு அதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது.அவருடைய பதிவு தமிழ் மணத்தில் தெரிந்த போது அதில் முதலில் முகவரி தெரிந்தது அப்படியே வெட்டி/ஒட்டி வேலை மூலம் இதை செய்தேன்.:-))

Tuesday, June 26, 2007

இடப்பற்றாக் குறை

உலகத்துக்கே தெரியும் சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை என்பது தீர்க்க முடியாத பிரச்சனை என்பதை.அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா? அதை எப்படி தீர்க்கிறார்கள் என்பதை கீழே உள்ள படத்தை பாருங்கள்.

இரண்டாவது மாடியில் கூடைப்பந்து மற்றும் வலைப்பந்து (Net Ball) க்கான வசதியை செய்துள்ளதை பாருங்கள்.இது புக்கிட் மேராவில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்காக கட்டப்பட்டுள்ளது.



வழக்கம் போல் பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.

Monday, June 25, 2007

சங்கம்

1969ம் ஆண்டு வெளிவந்த இந்த ஹிந்திப்படத்தை 1995யில் தான் அதுவும் மலேசிய தொலைக்காட்சி மூலம் பார்க்க முடிந்தது.அப்படியே ஆளை 3 மணி நேரத்துக்கு கட்டிப்போட வைக்கும் கதை.

அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல்...கீழே

மிக பழைய பாடல் என்பதால் என்னவோ முதலில் கொஞ்சம் கர புர என்று கேட்கிறது.

கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Share | Track details

Friday, June 22, 2007

மாமியின் கோபம்

இந்த மாமியின் கோபத்தை பாருங்கள்.

அதென்னங்க? அப்படி கையை தூக்கி தூக்கி பேசும் பழக்கம் அந்த ஆண்களிடம்!!




என்ன பாஷை பேசுகிறார்கள் என்று தெரியவில்லை,ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டும் படித்து தெரிந்துகொள்ள முடிந்தது.

பல வாதங்கள் உண்மைக்கு பக்கத்தில் இருந்தது.ஒரு தனி மனிதனின் நம்பிக்கையை குறை கூற, அடுத்தவனுக்கு அதிகாரமில்லை என்பதும் ஜூஸின் பராக்கிரமங்களும் (டோண்டு சாருக்கு மிகவும் பிடிக்கும்) நன்றாக உள்ளது.

Thursday, June 21, 2007

நெடு நாள் ஆசை.

கூகிள் எர்த் வந்த என்னுடைய கணினியில் நிறுவியவுடன் நான் முதலில் சென்று பார்த்தது நான் வளர்ந்த நாகப்பட்டிணம் தான்.

மிகப்பெரிய ஏமாற்றுத்துடன் வேறு ஊர்கள் பக்கம் போகவேண்டியிருந்தது ஏனென்றால் நாகை படங்கள் அப்போது சரியாக ரெண்டர் பண்ணவில்லை.

இன்று கூகிள் எர்த் போய் ஏதாவது அப்டேட் இருக்கா என்று பார்த்த போது,ஏதோ 4.1 வெர்சன் உள்ளது என்றது.பக்கதிலேயே சுட்டியும் கொடுத்து இருந்ததால்,தரவிரக்கம் செய்து நிறுவிய முடிந்த போது பிழை செய்தியுடன் நின்று போனது மற்றும் டெஸ்க் டாப்பிலும் ஐகானை காணவில்லை.சரி என்று கணினியை ரீஸ்டார்ட் செய்து தரவிரக்கம் செய்ததை நிறுவினேன்.
அப்பாடி!பிழைச்செய்தி ஏதும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது.மறுபடியும் நாகைக்கு போனேன்.

வாவ்!!இப்போது அட்டகாசமாக தெரிகிறது.படங்கள் உங்கள் பார்வைக்கு.

நாகையின் அடையாளம் சரியாக தெரியாத்தால் நாகூர் போய் அங்கிருந்து வந்தேன்.

படங்களை பெரிதாக்கிப்பார்க்க அதன் மீது சொடுக்கவும்.

நாகூர் ரயில் நிலையமும்,தர்காவும்.



அப்படியே ரயில்வே லயனை பிடித்துக்கொண்டு நாகப்பட்டினம் புகைவண்டி நிலையத்துக்கு..



இது நாகையின் பொதுவான படம்.



அதற்கு முன்னாடி நான் படித்து முடித்த வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்.



இது தாங்க நாங்க விழுந்து புரண்ட மண். பெருமாள் கோவில் மடவிளாகம்.நாகை சிவா வீடு எது என்று தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.



கடற்கரையும்& கலங்கரை விளக்கமும்.



இது திரையரங்குகள்.



ஒரு காலத்தில் அவுரித்திடலாக இருந்து இப்போது பேருந்து நிலையமாக மாற்றப்பட்ட இடம்.









சீக்கிரம் போய் புதுப்பதிவு கூகிள் எர்த்தை நிறுவுங்கள்,உங்கள் ஊரையும் பாருங்கள்.

Monday, June 18, 2007

இப்படியும்!!!

இன்று காலை ஏதோ தேடிக்கொண்டிருக்கும் போது இந்த படம் கண்ணில் பட்டது.
சிங்கையிலும்,இந்தியாவிலும் நான் பார்த்த வரை இந்த மாதிரி மேற்கூரை வேலைகளை செய்ய சாரம் அடித்து வேலை செய்வார்கள்.நல்ல கால்களை உடையவர்கள் இந்த மாதிரி உதிரி பாகங்களை வைத்துக்கொண்டு வேலை செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

இந்த படம் எந்த நாட்டில் எடுத்தது என்று தெரியவில்லை.அனேகமாக ஒரு ஆப்பிரிக்க நாட்டில் எடுத்திருக்கலாம்.

செலவை குறைக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள்.இது கட்டுமானத்துறையில் பாதுகாப்பற்ற செயலாக கொள்ளப்படும்.

Tuesday, June 12, 2007

+2 தரம் பிரிக்கும் முறை

+2 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிந்து கல்லூரியின் வாயிலை மிதிக்க எண்ணும் இன் நேரத்தில் எனக்கு தெரிந்தவர் கொடுத்த தகவலை பாருங்கள்.

இது ஒரு புகழ் பெற்ற கல்லூரி,தஞ்சை மாவட்டத்திலும் தமிழகத்திலும் நல்ல பெயர் கொண்ட கல்லூரி அங்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரத்தை நேற்று வெளியிட்டது.

சும்மா கும்மாங்குத்தா ஒரு மூன்று எண்ணை தட்டிய போது கிடைத்தவை.மாணவர்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்களையும் அவர்களை தரம் பிரித்திருக்கும் வழிகளையும் பாருங்கள்.
படம் 1.
இது கொஞ்சம் ஒத்துக்கொள்கிற மாதிரி இருக்கு.ஆதாவது 433 மார்க்குக்கு 4663வது ரேங்க்.(433 வாங்கி எப்படி 88%?)




படம் 2:சரி,இதையும் ஒத்துக்கொள்வோம்.ஆதாவது 957க்கு 361வது இடம்.



படம் 3:
ஆதாவது 978 வாங்கியவற்கு 6874வது ரேங்க,433 வாங்கியவற்க்கு 4663வது ரேங்க்.

என்ன அடிப்படை இது?


ஆமாம் இவரை எப்படி தரம் பிரித்திருப்பார்கள்?கொஞ்சம் கணக்கு படித்திருக்கும் 8 வது மாணவனுக்கும் புரியக்கூடியது,எப்படி இவர்களுக்கு புரியவில்லை?

இவர்கள் சொல்லிக்கொடுக்கப்போகும் பையன்களின் நிலமை?

ஆண்டவா!! காப்பாத்து!!

Tuesday, June 05, 2007

நாகை முகுந்தன்

நேற்று மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, நாகை திரு.முகுந்தன் நமது ஜனாதிபதி திரு.அப்துல் கலாமை சந்திந்ததைப் பற்றி செய்தி வந்திருப்பதாக சொன்னார்.
அந்த புகைப்படம் கீழே.

நன்றி:மனைவி :-))இவ்வளவு சீக்கிரம் அனுப்பியதற்கு.
இது எந்த புத்தகத்தில் வந்தது என்று தெரியவில்லை.அவர் சொல்லி நான் காதில் வாங்கவில்லையோ என்னவோ!!
அந்த புத்தகத்துக்கும் "நன்றி"
திரு நாகை முகுந்தனைப் பற்றி மற்றொரு சமயத்தில் எழுதுகிறேன்.

Saturday, June 02, 2007

இந்து மதத்துக்கு மாறனுமாம்

இன்று காலை "Today" செய்தித்தாளில் ஒரு செய்தி படித்துப்பருங்கள்.
ஒரு இந்து முஸ்லீமாக மாறி பிறகு இந்துவாக மாற்றிக்கொள்ள படும் அவஸ்தைகளை.இவருடைய கணவன் முதலில் இந்துவாக இருந்து பிறகு இன்னொரு மனைவி வைத்துக்கொள்வதற்காக முஸ்லீமாக மாறியதாக செய்தி சொல்கிறது.
மலேசியா போக வேண்டிய தூரம் வெகு வெகு தூரத்தில் உள்ளது.

நன்றி:டுடே
பின் குறிப்பு: நேற்று இதே மாதிரி ஒரு வழக்கில் அவர்கள் இஸ்லாமிக் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு இஸ்லாமிலிருந்து விலகி கிருஸ்துவ மதத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பறக்க ஆசையா?

சில நாட்களுக்கு முன்பு நமது வலைப்பதிவர் மயூரன் ஃபிலைட்கியர் என்னும் திறவுற்று (Free Software) மென் பொருளை சொல்லி அது கிடைக்கும் இடத்தையும் சொல்லியிருந்தார்.

எனக்கு பறக்க பிடிக்கும் அதுவும் விமானம் பறக்க ஒரு மென்பொருள் காசு செலவழிக்காமல் கிடைக்கிறது என்றவுடன், உடனே தரவிரக்கம் செய்து நிறுவினேன்.எந்த வித பிழை செய்தி இல்லாமல் நிறுவியது.நிறுவியவுடன் கை துறு துறு என்று இருக்க மென்பொருளை துவங்கினேன். தேவையான விமானம் மற்றும் விமான நிலையம் தேர்வுசெய்த பிறகு மென்பொருள் துவங்கியது.பிரச்சனை இங்கு தான் ஆரம்பித்தது. எந்த கீயில் கன்ட்ரோல் இருக்கு என்று தெரியவில்லை எப்படி விமானத்தை துவங்குவது என்று தெரியவில்லை.உதவி பக்கத்தை படிக்காமல் வந்ததின் விளைவு.ஏதோதோ பட்டனை தட்டியவுடன் ஓட ஆரம்பித்து இரண்டு மூன்று முறை கீழே விழுந்தேன்.

சரி,இது வேலைக்கு ஆகாது என்று உதவி பக்கங்களை தேடியதில் மிக எளிதாக விளக்கி இருந்தார்கள்.அதை படிக்க நேரமில்லாதவர்களுக்கு சிறிய குறிப்பு கீழே.

Flight Gear ஆரம்பித்தவுடன் விமான மாடலை தேர்ந்தெடுக்கச்சொல்லும்,பிறகு விமான நிலையம்.இது முடிந்தவுடன் மென்பொருள் தன் வேலையை ஆரம்பித்து ஓடு பாதையில் உங்கள் விமானம் நிற்கும் நிலைக்கு வரும் அதோடு இன்ஜின் ஓடும் சத்தமும் கேட்கும். (ஸ்பீகரை ஆன்னில் வத்திருந்தால்)

நீங்கள் பார்க்கும் காட்சி விமானத்தின் உள் பகுதி இதில் இருக்கும் பல முட்கள் மற்றும் மீட்டர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது மட்டும் அல்லாமல் இவை களை பார்க்காமலே நாம் ஓட்டமுடியும் என்பதால் மேலே சொல்கிறேன்.


முதலில் உங்கள் கீ போர்டில் "Num Lock" ஐ ஆனில் வைத்திருக்கவும்.பிறகு "v" ஐ ஒரு முறை தட்டவும்,காட்சி மாறி வெளியில் இருந்து விமானத்தை பார்பது போல் மாறும்.மீண்டும் "v" பட்டனை தட்டும் போது ஒவ்வொரு நிலையாக மாறும்.உங்களுக்கு எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மேலே உள்ள படத்தின் கீழே விமானத்தை திசை திருப்பும் கருவி கொஞ்சமாக தெரிகிறதை பார்க்கவும்.

அடுத்து உங்கள் மவுசை இந்த கன்ரோல் ரூமில் வத்து வலது கிளிக் பண்ணினால் அது திசை திருப்பும் கருவியாக மாறிவிடும்.இன்னொரு முறை சொடுக்கினால் ஏதோ ஆகிறது,தெரிந்த பிறகு சொல்கிறேன்.:-)). மீண்டும் வலது சொடுக்கு போட பழைய மவுசுக்கு திரும்பிவிடும்.

வானூர்தி இருக்கு,ஓடு தளம் இருக்கு,திசை திருப்ப மவுஸ் இருக்கு...இன் ஜினுக்கு பவர் கொடுக்கவேண்டும்,அவ்வளவு தான்.அதற்கு "Page Up" கீயை அழுத்திக்கொண்டிருந்தால் போதும் ,விமானம் ஓடு தளத்தில் ஓடி மேலெழும்பிவிடும்.பிறகு கீயை விட்டுவிடலாம்.


ஓட்டிக்கொண்டே இருங்கள்...கீழே இறங்கனுமா?
முதலில் ஓடு தளத்தை கண்டுபிடியுங்கள்,பிறகு மவுசை மேல் நோக்கி நகர்த்தினால் விமானத்தின் மூக்கு கீழ் நோக்கி போகும்.கொஞ்சம் கொஞ்சமாக "Page Down" பட்டனை தட்டவும்.இது விமானத்தின் வேகத்தை குறைக்கும்.
நான் ஓடுதளத்தில் தான் இறக்க நினைத்தேன்,ஆனால் புல்வெளியில் தான் இறக்க முடிந்தது.

அடுத்த முறை எங்காவது போகனுமென்றால் ஒரு மெயில் கொடுங்க வந்து அழைத்துப்போகிறேன்.:-))

இது ஒரு சுகமான அனுபவம் ,ஓட்டிப்பாருங்கள்.
முக்கியமான பின் குறிப்பு: தரையை தொட்டவுடன் "b" பட்டனை அழுத்தவும்,அது தான் பிரேக்.இல்லாவிட்டால் ஏதாவது பில்டிங் பக்கம் ஓட்டுங்க,சுலபமாக நிறுத்திவிடலாம்.:-))