Friday, April 06, 2007

DVD Recorder

ரொம்ப நாட்களாக இதன் மேல் ஒரு கண். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கணினி ஷோவில் இதை வைத்து இதன் அருமை பெருமைகளை சொன்னார்கள்.அப்போது இதன் விலை சுமார் 1200 சிங்கப்பூர் வெள்ளி.

2 மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த மற்றொறு கணினி ஷொவில் இதையே 599 வெள்ளிக்கு கூவி விற்க ஆரம்பித்ததும்,சரி நாம் பிடிக்கும் நிலைக்கு வந்தது என்று எண்ணி செயலில் இறங்கினேன்.

போன வாரம் முஸ்தாபா மற்றும் ஏல விளம்பரங்கள் பார்த்த போது,பிலிப்ஸ் மாடல் 3360H ஐ ஒருவர் 470 வெள்ளிக்கு கொடுக்க ஒப்புக்கொண்டார்.இத்தனைக்கும் அதனுடன் 1 வருட கியாரண்டி மற்றும் 160GB கொள்ளலவுடன் கூடிய வன்பொருள் (Harddisk).
நம்பக்கூடிய கம்பெனி மற்றும் வன்பொருள் அளவு நமக்கு தேவைக்கு மேல் இருப்பதால்,இதை வாங்கலாம் என்று முடிவு செய்தேன்.

இந்த மாடலைப்பற்றி ஏதாவது யாராவது கம்ளெயின் செய்துள்ளார்களா என்று பார்த்தால்,சுமார் 75% சதவீதம் மக்கள் யூரோப்பில் உள்ளவர்கள் தான் கொடுத்திருந்தார்கள்.இது ஏனோ எனக்குள் உதைத்தது.கொஞ்சம் ஆரப்போடலாம் என்று முடிவெடுத்தேன்.

நேற்று கொஞ்சம் அலுவலகத்தில் இருந்து முன்னமே கிளம்பி, இங்கு நாங்கள் செல்லமாக அழைக்கும் சிங் கடைக்கு போனேன்.சேம்சங் புகைப்பட கருவி 6 Mega Pixel 200 வெள்ளிக்கு தருவதாக போட்டிருந்தார்கள். வாங்கி முன்னோட்டம் பார்த்த போது தேவலை என்று தோனியது மற்றும் பட்ஜெட் உள்ளேயும் இருந்ததால் வாங்கினேன்.இங்கு போட்டுள்ள படங்கள் அதில் எடுத்தவை தான்.

அப்படியெ கடையை அளந்த போது அவர்களிடமும் DVD recorder இருப்பதாகச் சொல்லி 850 வெள்ளி என்றார்கள்.அதில் வெறும் 80GB தான் கொள்ளலவு.வெளி விபரமே தெரியாது போல் இருக்கிறது.நமக்கும் தெரியாவிட்டால் சுமார் 300 வெள்ளி இழக்கவேண்டியது தான்.

வேலை முடிந்ததும் அப்படியே முஸ்தாபாவுக்குப்போய் திரும்பவும் ரெக்கார்டர்களின் பகுதியில் நேட்டம் இட்டபோது இந்த பிலிப்ஸ் மாடல் நன்றாக இருந்தது.விபரங்கள் கேட்டபோது..

1 வருட உலக உத்திரவாதம்,160 GB கொள்ளலவு என்று அடுக்கிக்கொண்டு போனார்.

எனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை அவரிடம் கேட்டேன்,ஆதாவது இந்த வன்பொருள் அளவு எனக்கு அதைகம் தேவைப்படும் போது,கணினியில் உள்ள மாதிரி வெளியில் வாங்கி மாற்றிக்கொள்ள முடியுமா? என்றேன்.

முடியாது என்றார்.

ஆனால் JVLab என்னும் மாடலில் இந்த மாதிரி செய்யமுடியும் என்று ஒரு ஃபோரமில் படித்தேன்.அதோடில்லாமல் DVD drive ஐயும் மாற்றிக்கொள்ள முடியுமாம்,என்ற மேல் விபரத்தையும் கொடுத்தேன்.

என்னை அவர் அதிசியமாக பார்த்தார்.:-))

அவரை மேலும் கலாய்காமல் கீழே உள்ள மாடலை வாங்கினேன்.(549 வெள்ளி)

சும்மா அட்டகாசமாக இருக்கிறது.
சில அட சமாச்சாரங்கள்.
இதை ஆனில் வைத்துவிட்டால் நீங்கள் வைத்திருக்கும் சேனலில் நிகழ்வுகளை 6 மணிநேர அளவில் சேமித்து வைத்திருக்கும்- தற்காலிகமாக.

நீங்கள் பதிக்கும் நிகழ்வுகளை வன் தட்டிலும் அல்லது வன் பொருளிலும் பதியலாம்,அதை எடிட்டும் செய்யலாம்.விளம்பரங்களுக்கு டாட்டா சொல்லலாம்.வன் தட்டை வேறு பிளேயரிலும் போடலாம்.இப்போது தான் மடிக்கணினியில் முயற்சித்தேன். No Probem.

மேல் உள்ள படம்,அதன் பக்கத்தில் உள்ள பகுதி,இதன் மூலம் உங்கள் Thumb drive மற்றும் வீடியோ கேமராவை Firewire போர்ட்டுடன் இணைத்து தரவிரக்கம் செய்யலாம்.
நம்மூரில் இதன் விலை சுமார் ரூபாய் 23000 என்று அவர்கள் வலைத்தளம் சொல்கிறது.வரி வேறு இருக்கும் என்று தோனுகிறது.
அனுபவிங்க..

5 comments:

செல்லி said...

இதுதான் குடுப்பனவு என்கிறது. எனக்குக் இந்தப் பொருள்மீது ஒரு கண் ஆனா இப்பிடி விலையில் வேண்டவே வேண்டாம்.

வடுவூர் குமார் said...

வாங்க செல்லி
இன்னும் ஒரு 6 மாதங்கள் கழித்து வாங்குங்கள் 300 வெள்ளிக்கு கிடைக்கும்.
விலை வீழ்ந்துவருகிறது.

rahini said...

arumai arumai ella vadivagkalum

rahini said...

arumai arumai

வடுவூர் குமார் said...

முதல் வருகைக்கு நன்றி ரோகினி.