Monday, March 26, 2007

விவசாயம் தெரியுமா?

எனக்கு விவசாயத்தில் ஆர்வம் இருந்ததாலும் நிலத்தில் இறங்கி வேலை பார்த்ததில்லை.
வைக்கோல் போரில் படுத்திருக்கேன்,கடலைக்காட்டில் கடலையை பிடிங்கி அப்படியே பச்சையாக சாப்பிட்டு இருக்கேன்.
இதெல்லாம் மண்டைக்கு ள் ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில்,இப்படி ஒரு படம் கிடைத்தது.

தஞ்சாவூர் பக்கம் எல்லாம் வயலுக்கு தண்ணி வாய்கால் மூலமாகவோ,பம்ப் செட் மூலமாகவோ வரும்.
இந்த படத்தில் "கிணறு" என்று பின் குத்தி வைத்திருக்கும் இடங்களை பார்க்கவும்.இது கிணறு தானா? இல்லை வேறு ஏதாவதா? சொல்லிவைத்த மாதிரி எல்லா நிலங்களிலும் இருக்கு.பெரிதுபடுத்தி பார்க்கவும்.
விவசாயம் தெரிந்த நண்பர்களே முடிந்தால் விளக்கவும்.

இந்த இடம் "அன்னவாசல்"- புதுக்கோட்டை பக்கம்.
பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்.
இப்படி தமிழ்நாட்டில் உள்ளே மேய்ந்தால் பல அதிசியங்கள் கண்ணில் படுகிறது.
அதில் ஒன்று "கானாடுகாத்தான்"- முடிந்தவர்கள் போய் பார்த்து சீக்கிரமே நிலத்தை வளைத்துப்போடவும்.

6 comments:

ஆதி said...

தொழில்நுட்ப முன்னேற்றத்தில் என்னவெல்லாம் காட்டுகிறார்கள் பாருங்க சார்!

வடுவூர் குமார் said...

வாங்க ஆதிசேஷன்,
இதில் என்ன ஆச்சரியம் என்றால்,அதை எப்படி விவசாயத்துக்கு பயண்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் தான்.
கிணற்றைச் சுற்றி,மாட்டுத்தடம் கூட இல்லை.தண்ணீர் எப்படி இறைக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதுவும் நில அளவுக்கு தகுந்தார்போல் சிறிதும் பெரிதுமாக உள்ளது.

துளசி கோபால் said...

எனக்குக்கூடத்தான் கார்டனிங் பிடிக்கும்.

பூக்களை வெட்டிவந்து ஜாடியிலே அலங்கரிச்சுருவோம்லே? :-)))))

அதை இந்த கூகுள் காமிக்கலை பார்த்தீங்களா? (-:

வடுவூர் குமார் said...

துளசி
பெண்கள் மனதை இன்னும் கூகிள் அறியவில்லை போலும்.
கூடிய சீக்கிரம் வரட்டும்.
வந்தால்...
இந்தியாவில்,சென்னையில் பல தலைகளில் தான், பூவை பார்க்கமுடியும்.
தலைவலியில் முடியும்.:-))

செல்லி said...

வடுவூர் குமார்
வீட்டுத் தோட்டத்தைப் பற்றி ஏதும் கேட்டீங்க என்றா நிறைய சொல்லலாம்.
இதெல்லாம் என்னென்று தெரியலையே!

வடுவூர் குமார் said...

வாங்க செல்லி
இதுவும் தோட்டம் தான் ஆனால் நெல்,கரும்பு போன்ற பயிர்கள் விளைவிக்கும் விளை நிலங்கள்,அதுவும் வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.
ஆதாவது கூகிள் எர்த் என்ற மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது,இலவசமாக.
நல்ல இணைய வேகம்,மற்றும் வேகம் பொருந்திய கணினி இருந்தால்,உலகின் எந்த ஊரையும் இப்படி மேலிருந்து பார்க்கலாம்.
இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா?
கணினிக்குள் உட்கார்ந்து கொண்டு இறக்கை கட்டி பறக்கலாம்.உங்கள் வீட்டு மாடியை பார்க்கலாம்,பக்கத்தில் உள்ள இடங்களைப்பற்றி தெளிவாக பார்க்கலாம்.
கொஞ்சம் அரிச்சுவடியாக சொல்லியிருந்தால் அப்பீட் ஆகிடுங்க.உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று எனக்கு தெரியாததால் இந்த விளக்கம்.
இப்ப அந்த படத்தின் மீது சொடுக்கினால்,விரிவடையும்.
அதில் பாருங்கள் ஒவ்வொரு நிலத்தின் மூலையிலும் தண்ணீர் தேங்கிய மாதிரி இருக்கு பாருங்க.அதை எப்படி விவ்சாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
மாடு வைத்து இறைப்பதாகவும் தெரியவில்லை,பம்பு செட்டும் காணும்.
அந்த பகுதியில் இருப்பவர்கள் இதை படித்தால் ஏதாவது சொல்லுவார்களா? என்று பார்த்தேன்.
இதுவரை இல்லை.
நமது சக வலைப்பதிவாளர்,திரு.சுப்பையா ஊருக்கு பக்கத்தில் உள்ளது,ஒரு வேளை அவர் இந்த பதிவை பார்த்தால் பதில் தரக்கூடும்.
வந்து இவ்வளவு எழுதவைத்ததற்கு நன்றி.