Friday, March 23, 2007

பிறந்த இடம்

நான் பிறந்த ஊரை பார்க்கணுமா??

கீழே பாருங்க..



முதல் படம் அந்த ஊருக்கே பெருமை சேர்க்கும் கோதண்டஸ்வாமி ராமர் ஆலயம்.இந்த ஆலயத்துக்கு இடது பக்கம் தான் ஏரி. கோடைகாலத்தில் எடுக்கப்பட்டதால் வறண்டு இருக்கு.
படத்தின் கீழே உள்ள சாலை தான் தஞ்சாவூருக்கும் மன்னார்குடிக்கும் போகும் வழி.

இரண்டாவது படத்தில் ஒரு வறண்ட ஆறு தெரிகிறதா? அது தான் முதன் முதலில் நீச்சல் கத்துக்கப்போய் ஆத்தோடு போன இடம்.ஒரு சின்ன பாலம்,அது தான் என்னை காப்பாற்றியது.அப்படியே வடக்கால வந்தா ஒரு பின் போட்டு காண்பித்திருக்கேனே,அது தான் நான் பிறந்த வீடு.


கூகிள் எர்த் பணி வியக்கவைக்கிறது.

உங்கள் அனைவரையும் இங்கிருந்தபடியே எங்கூருக்கு கூட்டிப்போன பெருமை அவர்களையே சேரும்.

21 comments:

வல்லிசிம்ஹன் said...

ராமன் கோவில். குமார் வீடு,வறண்டு போன ஆறு.
இப்ப நீங்க ஒரு நல்ல லின்க் பார்க்க வைத்துவிட்டீங்க.
உண்மையாவே அதிசயம் தான்.
இதற்காகவே நம்ம இந்தியா எனக்குப் பிடிக்கிறது. நமக்கு வியக்க நிறைய விஷயம் கிடைக்கிறது பாருங்கள்.
இங்கே மதிரி எல்லாம் டேகன் ஃபார் க்ராண்டட் இல்லை.

வடுவூர் குமார் said...

வாங்க வ்ல்லிசிம்ஹன்
முதல் போனியே நீங்க தான்.நன்றி.
இங்கு போனதே வேடிகையான விஷயம்.குகிள் எர்த்தில் தஞ்சாவூர்,மன்னார்குடி என்று பார்த்துக்கொண்டு தேடிய போது கிடைக்கவிலை.
தேடு வில் வடுவூர் என்று போட்டதும் நேரே கோவிலுக்கு மேல் கொண்டுவிட்டது.
நல்ல மென்பொருள் அட்டகாசமாக இருக்கு.
சில இடங்கள் இன்னும் சரியாக இல்லை.
உதாரணம்:நாகை,மன்னார்குடி.

இலவசக்கொத்தனார் said...

கூகிள்காரங்களுக்கும் வடுவூர் குமார் பத்தி தெரியாதா என்ன? அதான் உங்க ஊருக்கு முன்னுரிமை.

நாகை சிவா said...

//சில இடங்கள் இன்னும் சரியாக இல்லை.
உதாரணம்:நாகை,மன்னார்குடி. //

ஆமாம்ங்க குமார்.நானும் பல தடவை பார்த்து இருக்கேன், நாகை சரியாக இல்லை.

தீடீர்னு படத்தை பாத்தவுடன் ஒ சரியா ஆயிடுச்சு போல நினைச்சேன். நல்லாவே கிளியரா இருக்கு படங்கள்

விஞ்ஞானம் வியக்க வைக்கின்றது

வடுவூர் குமார் said...

ஆஹா!!இ.கொத்தனார்..
இந்த மாதிரி Trump கார்டு நிறையவே வைத்திருக்கீங்க போல. :-))
வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,
மன்னார்குடிக்கும் வடுவூருக்கும் வெறும் 15 கி.மீட்டர் தான்.ஏன் சரியாக வரமாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை.
அதே நாகை - இந்தியானா என்று போட்டு பாருங்கள்.சும்மா அட்டகாசமாக மரம் நிழல் கூட தெரியுகிற மாதிரி இருக்கு.
ஒருவேளை இன்னும் ரென்டரிங் பண்ணவில்லையோ என்னவோ?

வடுவூர் குமார் said...

தீபா
முயற்சிக்கிறேன்.

சேதுக்கரசி said...

//முதன் முதலில் நீச்சல் கத்துக்கப்போய் ஆத்தோடு போன இடம்.ஒரு சின்ன பாலம்,அது தான் என்னை காப்பாற்றியது.//

போன வருசம் நீச்சல் வகுப்பு பத்தி பதிவு போட்டது நீங்க தானே? :-)

வடுவூர் குமார் said...

வாங்க சேதுக்கரசி
ஒரு 3 பதிவு போட்டேன்,நீங்கள் சொல்வது அது தானா? என்று தெரியவில்லை.
வருகைக்கு நன்றி

சேதுக்கரசி said...

//ஒரு 3 பதிவு போட்டேன்,நீங்கள் சொல்வது அது தானா?//

அதே தான் :-) ஆனா நீங்க சின்ன வயசில் இப்படி ஆத்துல மாட்டிக்கிட்டீங்கன்னு எழுதினதும் ஏனோ அது ஞாபகம் வந்தது :-)

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்!
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.

ஆதி said...

உங்கள் ஊரையும் அதன் பெருமைகளையும் பற்றிச் சொன்னதற்கு நன்றி குமார் சார்.

வடுவூர் குமார் said...

உங்கள் முதல் வருகைக்கு நன்றி திரு.ஆதிசேஷன்.

Unknown said...

இதுதான் வடுவூர் குமாரும், துரைசாமி அய்யங்காரும் பிறந்த ஊரா?கூகிள் புண்ணியத்தில் பார்க்க முடிந்தது.

(முடிந்தால் உங்கள் ஊர் கோதண்டராமர் பற்றி நேரம் கிடைக்கும்போது தனிப்பதிவு போடுங்கள்)

வடுவூர் குமார் said...

செல்வன்,எனக்கு அவ்வளவு தெரியாவிட்டாலும்,தெரிந்தவரை போடுகிறேன்.

அபி அப்பா said...

குமார், பார்த்தேன். ரசித்தேன். நம்ம தஞ்சை மண்ணை பாத்தாலே ஒரு சந்தோஷம் தானெ! ஆனா பாருங்க மயிலாடுதுறை மட்டும் பச்சையா தெரியுது, சும்மா குன்ஸா அவனவன் தன் வீடு இங்கதான் இருக்குன்னு போட்டுட்டான்:-)

வடுவூர் குமார் said...

வாங்க அபி அப்பா,
சில இடங்கள் அவர்கள் இன்னும் ரெண்டரிங் பண்ணவில்லை போலும்.
முதல் வருகைக்கு நன்றி.
கட்டுமானத்துறையில் இருக்கீங்க,அதைப்பற்றி போட்டு கொஞ்சம் சப்போர்ட் கொடுங்க. தனியா ஜல்லி அடிப்பது அவ்வப்போது Dry ஆக இருக்குது.:-))

அபி அப்பா said...

நீங்கள் dryயா நினைக்காதீங்க! இது முதல் வருகை இல்லை. முதல் பின்னூட்டமெ! உங்கள் 131ல் ஒரு 75 வரை படித்துவிட்டேன். தனி மடலிடுங்கள். கட்டுமான விஷயங்கள் நிறைய தருகிறேன். நீங்கள் கூட போடலாம்.

சேதுக்கரசி said...

//அப்பாடியோவ்!
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு//

நன்றி :-)

வெங்கட்ராமன் said...

////////////////////////////
படத்தின் கீழே உள்ள சாலை தான் தஞ்சாவூருக்கும் மன்னார்குடிக்கும் போகும் வழி.
////////////////////////////

ஐந்து வருடம் (2000-2005) இந்த ரூட்டுல தான் நானும் தஞ்சாவூர் போன படிக்க.

தினமும் வடுவூர் ஏரியையும், பச்சை வயல்களையும் பார்க்கும் போது மனதிற்கு இதமாக இருக்கும்.

ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்.
அப்படியா,வந்ததற்கு நன்றி.