அவர்களுக்கு ஒரு சின்ன உதவிக்குறிப்பு.
கீழ் கண்ட புத்தகம் கிடைத்தால் வாங்கி படியுங்கள்.கணினி மொழி பற்றி சுத்தமாக தெரியாவிட்டாலும்,இதன் மூலம் ஒரளவு தெரிந்துகொள்ளலாம்.உங்களுக்கு தேவைபடுவதெல்லாம் "ஆர்வம் மற்றும் சுயமுயற்சி" மட்டுமே.இந்த புத்தகம் வெறும் வார்த்தைகளால் நிரப்பபடாமல் ஒரு சின்ன பிராஜக்ட் எங்கிருந்து ஆரம்பித்து அதை தன்னிடம் படிக்க வரும் மாணவர்கள் மூலம் பாடம் நடத்திக்கொண்டே முடித்துக்கொடுப்பது போல் எழுதியுள்ளார்.
நமக்கும் வகுப்பறையில் படிப்பது போல் இருக்கும் அதே சமயத்தில் ஒரு பிராஜக்ட் பண்ணது போல் இருக்கும்.
கட்டுமானத்துறையில் இருக்கும் எனக்கே 300 பக்கங்களுக்கு மேல் போகமுடிகிறது என்றால்,உங்களாலும் முடியும்.
சரி,இந்த புத்தகம் மட்டும் கிடைத்தால் மட்டும் போதுமா,இதில் சொல்லியவற்றை முயற்சிக்க என்னென்ன வேண்டும்? என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்போமா?
1.வின்டோஸ்/லினக்ஸ் கணினி
2.நோட் புக்கில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3.முக்கியமாக "கம்பைலர்" வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கிறது.இங்கு.இது வின்95யிலேயே அழகாக வேலை செய்கிறது.
4.ஓரளவு கணினி அறிவு.
கீழே உள்ளது தேவ் சி++ யில் நான் முயற்சிக்கும் ஒரு பகுதி.
கம்பைல் பண்ணிய பிறகு அதை எப்படி டாஸ் மூலம் எக்ஸிகியூட் என்பதை கீழே பாருங்கள்.
நானே ஆரம்ப நிலையில் உள்ளதால்,மிகவும் விரிவாக எழுதமுடியவில்லை.
என்னுடைய அனுபவத்தில் இந்த மாதிரியான கணினி புத்தகங்களை முழுமூச்சாக உட்கார்ந்து 1 மாதம் அல்லது 2 மாதங்களில் முடிக்க முயற்சி செய்யாதீர்கள்.நிதானமாக படியுங்கள்.மிக முக்கியமாக கம்பைலரில் அவர்கள் சொல்லிய பாடங்களை போட்டு பார்க்கவேண்டும்.அப்போது தான் தவறுகள் புரிபடும்.
இந்த மொழி மற்றும் மென்பொருட்களை பற்றி திரு பாலாஜி மற்றும் பலரும் அவ்வப்போது எழுதியுள்ளார்கள்.
படித்து பயண்பெறுங்கள்.
10 comments:
நல்ல தகவல்!!!
வருகைக்கு நன்றி.
சிவா.
நல்ல முயற்சி, குமார். இதில் முக்கியமானது கைவிடாமல் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள்.
வைசா
ஆமாங்க வைசா
இழுத்துப்பிடித்து வைப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கு.
அவ்வப்போது பொழுது போகத்தான் படிக்கிறோம் என்ற எண்ணம் தான் தலைதூக்குகிறது.
நன்றி
அப்படித்தான் சில வேளை எனக்கம் தோன்றுவதுண்டு ஆவலுடன் புத்தகம் ஒன்றை எடுத்து வந்து விட்டு அரைவாசி முடியும் முன்பே ஏனடா இதை எடுத்தோம் என்று தோன்றுவதுண்டு அதையும் தாண்டி ஒன்றை வாசிக்கிறோம் என்றால் அது எம் மனதை விட்டு என்றுமே அகலாத விடயமாக இர
வாங்க தமிழ்பித்தன்
நான் இந்த கணினி புத்தங்கள் படிக்கும் முறையை பார்த்தாலே எனக்கே கோபம் வரும்.
நான் முதலில் படிக்க ஆரம்பித்தது விசுவல் சுடோடியோ,c#,பேர்ல் & போட்ரான்.
படித்த விதமே தலைகீழ்.பல புத்தகங்கள் 25 பக்கங்களுக்கு மேல் புரியாமல் போய்விடும்.
இப்போது தான் இந்த புத்தகம்.முடிக்காமல் வேறு பக்கம் போக மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு படிக்கிறேன்.
பார்ப்போம் எது வரை போகிறது என்று.
வருகைக்கு நன்றி
Oops.......தலைப்பைத் தப்பாப் படிச்சுட்டுத் தாண்டிப்போயிட்டேன்.
(ணி)யை விட்டுருக்கேன்:-)
//ஓரளவு கணினி அறிவு//
இங்கெதான் உதைக்குது(-:
"கனி மொழி?"- அப்படி யாரையும் தெரியாதே??
பரவாயில்லை, வந்து பார்த்தீர்களே அதுவே போதும்.
என்னுடைய அறிவை போன பின்னூட்டத்தில் போட்டிருக்கேன் பாருங்க!!
இப்படியும் ஆளுங்க இருக்காங்க என்று சாந்தப்படுத்திக்கலாம்.
/// இது வின்95யிலேயே அழகாக வேலை செய்கிறது
விண்டோஸ் 95 அ, பில்கேட்ஸே மறந்திருப்பாரு, நீங்க விட மாட்டீங்க போலிருக்கு.
பதிவு நன்றாக இருந்தது.
வாங்க வெங்கட்ராமன்.
வின் 95 அலுவலக கணினி. சில முக்கியமான மென்பொருட்களை அதனுள் போட்டுவிட்டு "வட்டை" தொலைத்து விட்டார்கள். விட முடியாமல் உபயோகிக்கிறேன்.
இவனிடம் எதை கொடுத்தாலும் "வேலை செய்வான்" என்று என்னிடம் தள்ளிவிட்டார்கள்.
முதல் வருகைக்கு நன்றி
Post a Comment