Tuesday, March 13, 2007

புட்டபர்த்தி மருத்துவமனை

இது நாங்கள் புட்டபர்த்தியில் கட்டிய மருத்துவமனையின் தொடர்சி.

இது பழைய மருத்துவமனையைப்பற்றிய தகவல்,எனக்கே புதுசு தான்.

Sathya Sai Hospital, Puttaparthi, 1957

Inaugurated 20 October 1957, on the hill behind Prasanthi Nilayam

Some of you may ask why there should be a Hospital at all, here! Why should not Baba cure diseases by an exercise of His Will, that is the question. Well, for one thing, this Hospital is not My only Hospital. Hanumantha Rao has a Hospital in Madras where disabled children are treated and trained to be useful and self- respecting individuals. That too is My Hospital. In fact, all hospitals everywhere are Mine. I visit them all. Why, all those who call out from their hearts for succour, in whatever language, from whatever clime, whether from hospitals or homes, are Mine. Do not confine Me to these few acres round the Prasanthi Nilayam. Wherever a person craving for Prasanthi lives and prays, there a Prasanthi Nilayam exists.


நன்றி:http://www.saiaustralia.org.au/medical/hospitals.html (மேலும் பல நல்ல தகவல்கள் இதில் உள்ளது)


இது புது மருத்துவமனையைப்பற்றியது.



Two Super Speciality hospitals built by SSB are considered by his followers as an expression of SSB's love and compassion to all people in the world. Free medical care from those hospitals is seen as a clear sign of Divine promise of a better future for all the needy and suffering people.

The first Super Speciality hospital in Puttaparthi was built by the firm Larsen & Tubro in 1991 and was constructed for 5 months. SSB's followers believe that it was SSB's divine intervention that got this hospital erected so fast and consider it as a miracle. Sai Baba himself emphasizes this moment: "Work on the hospital began in May after my return from Kodaikanal. Within five months from May to November, work has been done which would have taken five years". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310) It is still unclear what caused the construction to be finished so quickly. According to Sai Baba it must have been the enthusiasm of the workers: "The firm Larsen & Tubro are known for their big constructions in India and abroad. But nowhere else was such enthusiasm and zeal displayed by the workers engaged in the construction as in this Hospital. Even the smallest worker did the work of ten persons with zeal and joy. All workers performed their job with enthusiasm and devotion". (23.11.1991. Sathya Sai Speaks, v.XXIV, p.310).


நன்றி:http://home.no.net/anir/Sai/enigma/hospital.htm



இந்த புட்டபர்த்தி மருத்துவமனைக்கு பல தேசங்களில் பலரிடம் இருந்து பலவிதமான Information பெறப்பட்டு செய்யப்பட்டது.

பிரிட்டீஸ் நிறுவனம் கட்டுமானத்துறையில் இருந்து பின் வாங்கியதும்,அதில் சில வேலைகளை எங்கள் டிசைன் நிர்வாகம் எடுத்துக்கொண்டது.அப்படியும் பல சமயம் தேவையான விபரங்களுக்காக காத்திருக்கவேண்டியிருந்தது.
வேலை என்று பார்க்கும் போது,அந்த மத்தியில் இருக்கிறதே Dome தவிர மீதியெல்லாம் எப்போதும் செய்கிற வேலை தான்.



என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் கீழே உள்ள படத்தில் கோடிட்டு காண்பித்துள்ளேன்.




இது வலது பக்கக்கோணம்






மேலே உள்ள படம் நுழைவாயிலில் இருந்து எடுக்கப்பட்டது.


பல பக்தர்கள் தவமாய் காத்திருக்க எங்களுக்கு மட்டும் அதிஷ்டம் இருக்கு போல,சில சமயங்களில் நாங்கள் வேலை செய்யும் போது திடிரென்று ஒரு வெள்ளைக்கார் நுழையும்,அதிலிருந்து பாபா அவருக்கே உரிய அங்கியுடம் நடந்து கொஞ்ச தூரம் போய் பார்ப்பார்.டிக்கியில் இருந்து அவருக்கென்று வந்த இனிப்பு பலகாரங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொடுக்கச்சொல்லி வைத்துவிட்டு போவார்.அவரைச்சுற்றி ஒரு நறுமணம் வீசிக்கொண்டு இருக்கும்.வெகு அருகில் அவரைப்பார்க்கும் அனுபவமும் எனக்கு கிடைத்தது.

அப்போது அவரிடம் அவ்வளவு நம்பிக்கையில்லாத்தால் ஏனோ தானோ என்று தான் பார்த்தேன்.ஒரு 10 நிமிடங்கள் மட்டுமே இருப்பார்.
எனக்கு ஏற்பட்ட வேடிக்கையான அனுபவம் இது.
ஒரு தடவை என்னுடைய அலுவலகத்தில் நான் மற்றும் சில நண்பர்கள் வரைப்படத்தை வைத்துக்கொண்டு ஏதோ விவாதித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது பாபா தன் காரை கொஞ்சம் தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.அவருக்கும் பின்னால் சில சீடர்கள் மட்டுமே.
இதைப்பார்த்த சில வேலை ஆட்கள் அவரிடம் வந்து ஆசீர்வாதம் வாங்க முயற்சித்து கொண்டிருந்தனர்.இதை கவனித்து, என் நண்பன் என்னிடம் சொன்னான்.அதற்குள் மண்டையில் ஒரு எண்ணம்,இவர் நம் பக்கம் வந்தாலும் இவரை நாம் கை கூப்பி வணங்கக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன்.அவர் என் எதிரி கிடையாது,இருந்தாலும் அப்போது அவர் செய்பவைகளில் முறன்பட்டு நின்றேன்.
அதற்குள் அவர் நான் இருக்கும் அறையின் பக்கமாக வந்துகொண்டிருந்தார்.
சரி என்று நானும் அலுவலகத்தை விட்டு வெளியேறி என்னதான் நடக்கிறது என்று சற்று தொலைவில் நின்று கவனித்தேன்.
சுற்றும் முற்றும் பார்த்த பிறகு என் பக்கம் திரும்பி ஒரு பார்வை,அவரை எப்போது கை கூப்பி வணங்கினேன் என்று தெரியவில்லை.கை கூப்பிய படி இருந்தது.
இதெல்லாம் என் அளவில் ஜு ஜு பி.
படித்த பண்பாளர்கள் எப்படி அளக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை "safaya" சுட்டில் கொடுத்துள்ளேன்.

சில நாட்கள் அவர் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு பல தேசத்து பிரஜைகளும் வந்து இன்று மதியம் எங்கள் செலவில் உங்களுக்கு இலவசசாப்பாடு என்று சொல்லிப்போடுவார்கள்.
இதெல்லாம் எங்கள் கம்பெனியில் வேலைசெய்பவர்களுக்கு புது அனுபவம்.நாங்கள் எப்போதும் வெளி ஆட்களை வேலைசெய்யும் இடத்துக்குள் அனுமதிக்கமாட்டோம்.
இங்கு சொல்லவும் முடியவில்லை,மெல்லவும் முடியவில்லை.

இந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகியின் அனுபவத்தை கீழே காணலாம்.
திரு சபாயா இந்த மருத்துவமனை ஆரம்பம் பற்றி சொல்லி அவர் வந்த விதத்தைப்பற்றி பதிவு 1 & 2 சொல்லியுள்ளார்,பாருங்கள்.

Dr.Safaya Part 1 Part 2



செந்தழல் ரவி இதைப்பற்றி இங்கு எழுதியிருந்தார்.

நான் கேட்ட சில அனுபவங்கள் அடுத்த பதிவில்.

12 comments:

கோவி.கண்ணன் [GK] said...

குமார்,

நீங்கள் ஒரு புகைப்பட ஆர்வலர் என்று உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது தெரிகிறது.

எப்போதாவது தேவைப்படும் என்று நீங்கள் நிறைய படங்களை சேர்த்து வைத்திருந்து பயன்படுத்துகிறீர்கள்.

பாராட்டுக்கள் !

வடுவூர் குமார் said...

நன்றி கோவியாரே!ஆனால் படங்கள் அத்தனையும் சுட்டவை.
அப்போதும் ஒரு கேமரா வாங்கும் அளவுக்கு நிதிநிலமை இல்லை என்பது தான் நிஜம்.
பிலிம் வாங்கி அதில் பாதி சரியாக வராமல் போகும் போது ஏற்பட்ட எண்ணம்.

செல்லி said...

குமார்
எத்தனையோ பேர் வெளிநாடுகளிலிருந்து போயும் அவரைப் பார்க்க முடியாமல் திரும்பி வந்தவர்கள் உண்டு. அப்படி இருக்கையில்//வெகு அருகில் அவரைப்பார்க்கும் அனுபவமும் எனக்கு கிடைத்தது.// என்றால் குடுத்து வைத்தவரையா,நீர்

துளசி கோபால் said...

கட்டிடமா இது? அரண்மனை போல அட்டகாசமா இருக்கே!!!! அதில் அந்தக் குழலூதும்
வேணுகோபாலன்........... அதி சூப்பர்.

சிலசமயங்களில் மூளை சொல்றதை மனசு கேக்காது.

நம்பிக்கை இல்லேன்னாலும் கும்பிட்டா என்ன? அவர் வயதில்
எவ்வளவோ பெரியவர் இல்லையா?

வடுவூர் குமார் said...

வாங்க செல்லி
பக்கத்தில் இருக்கும் போது கண்ணைக்கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன்.
வாழ்கையை இப்போது அனுபவிக்கும் போது அங்கு விட்டது தெரிகிறது.
சந்தேகமே இல்லாமல்,அங்கு வேலை செய்த அவ்வளவு பேருமே கொடுத்துவைத்தவர்கள் தான்.
இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அமைதியான வாழ்வு அவர் கொடுத்ததோ! என்று ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.
Bonus for working there.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
அந்த வயசு அப்படித்தான் இருக்கும்.
அதுவரை அவரைப்பற்றி கேள்விப்பட்டது மண்டையில் உள்ளே இருக்கும் போது வேறு ஒன்றும் நிரப்பமுடியாமல் போனது.வருத்தம் தான்.
அதற்காக நான் பழிவாங்கப்படவில்லை.
மீதிக்கு செல்லி பதிலில் சொல்லியுள்ளேன்.

கபீரன்பன் said...

நான் கொஞ்சம் ஸ்லோ. இப்பொழுதுதான் இந்த பதிவைப் பார்க்கிறேன். அந்த Dome கட்டப்பட்ட விஷயம் எங்கே இருக்கிறது? சுட்டிக் காட்டுங்கள். அவனருள் பொங்கட்டும்.

வடுவூர் குமார் said...

வாங்க கபீரன்பன்
அந்த டூம்மை பற்றி அவ்வளவாக விளக்கவில்லை.
மேலோட்டமாக இங்கு சொல்லியுள்ளேன்
http://madavillagam.blogspot.com/2007/03/dome.html
முதல் வருகைக்கு நன்றி.

கபீரன்பன் said...

முதல் பின்னூட்டட்திற்கு நன்றி என்று வைத்துக்கொள்கிறேன். வருகை முதலாவது அல்ல. உங்கள் பல பதிவுகளை படித்திருக்கிறேன். DOME-ற்கான இணைப்பு அங்கேயே இருந்திருக்கு. நான் தான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். சிறக்கட்டும் உங்கள் பணி

வடுவூர் குமார் said...

கபீரன்பன்
அதை சொன்னால் அவ்வளவு நன்றாக இருக்காது.குத்திக்காட்டுவது போல் இருக்கும் என்பதால் தான் அந்த லிங்க் கொடுத்தேன்.
முதல் தடவையில்லையா??சந்தோஷம்.

Anonymous said...

Nice Post.

Ravi

வடுவூர் குமார் said...

நன்றி ரவி.