Friday, December 15, 2006

இணையம் ஒரு வலை (1)

வலை எனபது பலருக்கும் தெரியும்,ஆனால் இந்த வலையை கொஞ்சம் பாருங்க.வித்தியாசமாக இருக்கும்.

இப்போது இருக்கும் வீட்டில் நான் ஒரு அறையில்,உத்ராஞ்சலில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் ஒரு பையனும் இருந்தோம்.இந்த பையன் காலி செய்ததும் நான் அந்த அறைக்கு போகவேண்டும்.

இணைய இணைப்புக்கு வீட்டின் ஹாலில் இருந்து கேபிள் போட்டு என்னுடைய அறைக்கு இழுக்கவேண்டும்.அதனாலேயே அது வீட்டின் குறுக்கே போய் கொண்டிருந்தது.

அந்த பையன் இணையத்தை வீட்டில் உபயோகப்படுத்தாததால் அவனுக்கு தொலைபேசி இணைப்பு தேவைப்படாததாக இருந்தது.

நான் வந்தபிறகு இணையத்தை உபயோகப்படுத்துவதை பார்த்ததும் அவனுக்கும் ஆசை வந்தது போலும்.

ஒரு சனிக்கிழமை இரவு நான் வலையில் மேய்ந்துகொண்டிருக்கும் போது

அங்கிள் நான் இணையத்தை உபயோகப்படுத்த முடியுமா? என்றான்.

உனக்கு அக்கவுண்ட் இருக்கா?

இல்லை!

எவ்வளவு செலவாகும்?

இது டையல் அப் என்பதால்,தொலைபேசிக்கு எவ்வளவு ஆகுமோ அவ்வளவு தான் கும்.ஆதாவது Off Peak சமயத்தில் 1 மணி நேரத்துக்கு சுமார் 40 காசு,அதில்லாமல் நீ இணைய விரும்பும் ஸர்வீஸ் கொடுப்பவர்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றேன்.

அது எவ்வளவு? என்றான்

மாதத்திற்கு 15.75 வெள்ளி என்றேன்.

முதலில் வீட்டு ஓனரிடம் அனுமதிபெற்றுக்கொள்,அப்படி கிடைத்தால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றேன்.

வீட்டு ஓனர் வீட்டில் இல்லாததால் இன்று ஒரு நாள் கொடுங்கள் அவர் வந்ததும் அனுமதி வாங்கிக்கொள்கிறேன் என்றான்.

அப்படியென்றால் "Free to Surf" என்ற வசதி ஸ்டார் ஹப் நிறுவனத்தினர் கொடுக்கிறார்கள்.அங்கு போய் பதிந்துகொண்டு நீ இணையலாம் என்று அதற்கு வேண்டிய வட்டையையும் கொடுத்தேன்.3 வருடங்களுக்கு முன்பு இதை நான் உபயோகித்துக்கொண்டிருந்த போது கிடைத்தவட்டு அது. ஆனால் அதை நிறுத்தியது எனக்கு அப்போது தெரியாது.

அதை வாங்கிக்கொண்டு போய்விட்டு,சரியாக வரவில்லை அங்கிள்,டையலிங் சத்தம் வரவில்லை என்றான்.

பிறகு அவன் அறைக்குப்போய் மோடம் கார்டில் இரண்டு ஸ்லாட் இருக்கும் பார், அதில் ஒன்று சுவற்றில் இருந்து வரும் கேபிளுக்கு மற்றொன்று தேவையானால் இன்னொரு தொலைபேசிக்கு அதனால் கேபிளை மாற்றிப்போட்டு முயற்சி செய் என்றேன்.

மாற்றியபிறகு டையலிங் சத்தம் வந்தது ஆனால் இணையத்துள் இணைய முடியவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தான் தெரிந்தது அந்த சர்வீசை வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தியிருந்ததை.

சரி என்னுடைய அக்கவுண்டை பயண்படுத்தி பார்கலாம் என்று நினைத்து என்னுடைய விபரங்களை கொடுத்தவுடன் இணையத்தின் உள் போகமுடிந்தது.கணினியில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தெரிந்துகொண்டபிறகு,அவனிடம்

உன் உபயோகத்துக்கு தகுந்தமாதிரி வீட்டு ஓனரிடம் பணம் கொடுத்துவிடு அதோடில்லாமல் பயண்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் அவர்களின் தொலைபேசி இணைப்பை திரும்ப பொருத்திவிடு என்றேன்.

சரி என்றான்.

இதெல்லாம் நடக்கும் போது இரவு மணி சுமார் 10.30.

மறுநாள் ஞாயிறு காலை எழுந்து ஹால் பக்கம் போன போது தொலைபேசி மற்றும் இணையத்துக்கு போட்டிருந்த கேபிளும் தரையில் கிடந்தது.நான் சொன்ன மாதிரி தொலைபேசி கேபிளை பொருத்தாது பார்த்து கோபமாக வந்தது.

நானே எடுத்து பொருத்திவிட்டு போனேன்.

அன்று மாலை வந்த வீட்டு ஓனர் ஆஸ்திரேலியாவுக்கு தொலைபேச முற்பட்ட போது தொடர்பு கிடைக்கவில்லை.சரி வேறெங்கோ பிரச்சனை என்று நினைத்து சும்மா இருந்துவிட்டார்கள்.

மறுநாள் திங்கட்கிழமை,அவரால் வெளிநாட்டுக்கு தொலைபேச முடியவில்லை.நான் சாயங்காலம் போனவுடன் தொலைபேசி நிறுவனத்துக்கு பேசி பிரச்சனை எங்கு என்று கேட்கச்சொன்னார்.

கேட்டபோது அவர்கள் சோதித்துப்பார்பதாக சொன்னார்கள்,ஆனால் இரவு 9.30 மணிவரை எந்த பதிலும் இல்லை.அதற்குப்பிறகு வந்த அழைப்பில் ஏதோ சொன்னதாக வீட்டின் உரிமையாளர் சொன்னார்கள். அவரால் சரியாக விளக்கமுடியவில்லை.

மறுநாள் செவ்வாய்கிழமை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திக்கு பக்கத்தில் தான் தொலைபேசி நிறுவனத்தின் அலுவலகம் இருந்ததால்,போய் விஜாரித்து வரலாம் என்று சென்று கேட்ட போது..

அவர்கள் சொன்ன பதிலில் அவர் உறைந்து போய் தேவையான நடவடிக்கைகளில் மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்து செம கோபத்துடன் எனக்கு தொலைபேசினார்கள்.

என்னவாயிற்று??

அடுத்த பதிவில்.

10 comments:

இலவசக்கொத்தனார் said...

வேறென்ன, உங்க பையன் சொதப்பிட்டான். தொடர்பை நிறுத்தாமலே போனதினால் அவர்கள் கணக்கில் பாலன்ஸ் இல்லாமல் போனது. சரியாப் போச்சு.

வடுவூர் குமார் said...

வாங்க இ.கொத்தனார்
பையன் கரெக்டாத்தான் நிறுத்தியிருந்தான்,ஆனாலும் இணையம் அவனை முந்திக்கொண்டுவிட்டது.
என்னுடையது அன்லிமிட்டட் என்பதால் கவலையில்லாமல் கொடுத்தேன்.
மீதிக்கு வாங்க அடுத்த பதிவுக்கு.

வல்லிசிம்ஹன் said...

சிங்கப்பூரிலும் அளந்து போடு.

வடுவூர் குமார் said...

வாங்க வள்ளிசிம்ஹன்
சரி தான். நல்ல மனசுக்கு காலமே இல்லை.

Hariharan # 03985177737685368452 said...

டாலரில் இருக்கும் வள்ளி முருகன் கை கொடுத்தாரா இல்லை சிங்கை வெள்ளி டாலராக இணையம் கறக்க விட்டாரா?

வடுவூர் குமார் said...

வாங்க ஹரி
என்ன நடந்தது என்று தெரியவில்லை.
டாலரில் இருக்கும் முருகன்,வள்ளி சேர்ந்து சிங்கை வெள்ளியில் தாளிச்சிட்டுங்க!!

Anonymous said...

போடாங் கோயா

வடுவூர் குமார் said...

வாங்க SDS
நல்ல தமிழ் எழுத மக்கள் கஷ்டப்படக்கூடாது என்று வைத்தால், இப்படி எழுதி என்னை கஷ்டப்படுத்த வைத்துவிட்டீர்களே.
உங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் இதை காண்பிக்கவும்.அவர்கள் பெருமைப்பட்டால் நானும் பெருமை கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...ரொம்ப பொறுப்பான பையனா இருப்பான் போல! யாருக்காச்சும் வலையில் வலை விரிச்சானா? :-)))

//செம கோபத்துடன் எனக்கு தொலைபேசினார்கள்//

அது என்ன கோபத்துக்கு அப்படி ஒரு ரெட் கலர்??? :-)

வடுவூர் குமார் said...

வாங்க கண்ணபிரான்,
அவனுக்கு யாரோ வலைவிரிச்சிருக்காங்க,மாட்டிக்கிட்டான்.வெறும் 3 மணிநேரத்துக்கு அவன் இழந்தது கொஞ்சம் அதிகம் தான்.