Wednesday, October 25, 2006

சென்னை விஜயம்

13- அக்டோபர் 2006 காலை 8.25 க்கு சிங்கையில் இருந்து புறப்படவேண்டிய இந்தியன் ( பெயர் மாற்றம் கண்டிருந்தாலும் அங்கங்கே கணினித்திரையில் இந்தியன் ஏர் லயன்ஸ் என்றே குறிப்பிடபட்டிருந்தது) கால தாமதமாக 8.40க்கு புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது.

அதற்குள் "@" என்ற விளம்பரம் போட்ட இடத்தில் இணைய இணைப்பு இலவசமாக கொடுக்கப்பட்டிருந்தது.இந்த வசதி முனையம் 2 இல் தான் முதலில் இருந்தது இப்போது அது முனையம் 1 க்கும் விரிவாக்கப்பட்டிருந்த்தால் 15 நிமிடங்களுக்கு மட்டும் உலாவ முடிந்தது.தமிழ்மணமும் தமிழும் அழகாக தெரிந்தது.

சரியான நேரத்தில் கிளம்பி சரியாக காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.முன் இருக்கை கிடைத்ததால் குடியேற்ற வேலைகள் வெறும் 10 நிமிடங்களில் முடிந்து, ஒரே ஒரு பெட்டிக்காக 1 மணி நேரம் காத்திருந்து வெளியில் வந்தேன்.அப்போது தான் கவனித்தேன் அங்கு போடப்பட்ட தரைக்கட்கள் சற்றும் பயணிகள் பயண்பாட்டுக்கு பொருந்தாத வகையில் வழ வழப்பு அதிகமாக இருந்ததால் பல குழந்தைகள் வழுக்கி விழுந்துகொண்டிருந்தார்கள்.கூடிய விரைவில் ஏதாவது செய்யாவிட்டால் வேறு ஏதாவது பெரிதாக நடக்க வாய்ப்பு உள்ளது.

பலரிடமும் இரவு விமானத்தில் வருவதாக சொல்லியிருந்ததால் யாரும் வரவேற்க வரமாட்டார்கள் என்பதாலும் உடனே வெளியில் இருந்த (Pre Paid) டாக்சி நிறுவனத்தில் போகும் இடத்தைச்சொல்லி ரூபாய் 250 ஐ கட்டி- 15~ 20 நிமிடத்துக்குள் வீட்டை அடைந்தேன்.டாக்ச்யில் ஏறியவுடன் முன் இருக்கையில் உட்கார்ந்தவுடன் ஓட்டுனரை பார்த்தேன் பாதுகாப்பு பட்டையை போடவில்லை.ஆனால் தன்னிச்சையாக போன என் கை இங்கு தேவையில்லை போல் என்று நினைத்து விட்டுவிட்டேன்.

ஓட்டினரிடம் பேச ஆரம்பித்தவுடன் கேட்டேன் "போன தடவை நான் டேக்ஸி எடுத்த போது விருகம்பாக்கத்திற்கு 265 ரூபாய் வாங்கினார்கள் ஆனால் இப்போது நங்கநல்லூருக்கு 250 வாங்குகிறார்களே கொஞ்சம் அதிகமாக இருக்கே?" என்றேன்.

அது மினிமம் ஜார்ஜ் ஆக இருக்கக்கூடும் என்றும், சில சமயம் ஏற்றப்படும் சாமான்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து ரூபாய் 500 வரை போகும் என்றார்.

இப்போது நிறைய விமானசேவைகள் வந்துவிட்டதால் பலர் இந்த சேவையை பயண்படுத்துவதாக சொன்னார்.

அப்போது தான் பார்த்தேன் விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும் வழியில் மேம்பால பணிகள் நடந்துகொண்டிருந்தன.சில தூண்கள் மற்றும் மேலே போடப்படும் கான்கிரீட்டும் போடப்பட்டு,இதுக்கு மேல் போகலாமா வேண்டாமா என்ற யோஜனையுடன் நின்றுகொண்டிருப்பதாக தோன்றியது.அவ்வளவு மெதுவாக நடப்பதாக தோன்றுகிறது.என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

படத்தை பார்க்க..

Photobucket - Video and Image Hosting

"மெதுவாக" என்று ஏன் சொன்னேன்?

அடுத்த பதிவில்.

4 comments:

Machi said...

எழுதிக்கொள்வது: குறும்பன்

எனக்கு தெரியுமே !!! மொத தடவை பார்த்தப்போ கீழே இருக்கும் தடுப்பை போட்டாங்க 2வது தடை போனப்போ மேல இருக்கிற வலைய போட்டாங்க இப்போ ஒன்னும் போடாம மக்கள் வரி பணத்தை ஆட்டைய போட்டுட்டாங்க. :-)) அப்படின்னு தான சொல்ல வர்ரிங்க?

11.5 25.10.2006

வடுவூர் குமார் said...

வாங்க குரும்பன்
அவர்கள் வேலை செய்யும் முறையில் தான் எங்கோ இடிக்கிறது..
சரியான காரணம் தெரியாமல் சொல்லக்கூடாது என்பதால் எனது கருத்தை தள்ளிப்போட்டுள்ளேன்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: SK

அட என்னங்க!
அதான் தெளிவா ஒரு 15 நாமம் போட்டு சொல்லி இருக்காங்களே அந்தப் படத்துல!

இன்னும் புரியலைன்னா எப்படி!




12.42 25.10.2006

வடுவூர் குமார் said...

SK
முதலில் உங்கள் பதிலை பார்த்து குழம்பினேன்,திரும்ப போய் படத்தை பார்த்த்வுடன் தான் புரிந்தது.
உங்க பார்வையே தனி தான்.
:-))