Thursday, October 12, 2006

எவ்வளவோ பரவாயில்லை!!

இன்று காலை கம்பெனி Passக்காக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நேற்றே முடிவு செய்திருந்ததால்,காலை 9 மணிக்கு தயாராக இருந்தேன்.

இருக்கும் கொஞ்ச நேரத்தில் தமிழ்மணத்தில் ஏதாவது இருக்கா என்று பார்க்கும் போது நமது நட்சத்திர பதிப்பாளர் "கால்கரி சிவா" வின் காந்தீயம் கண்ணில் பட்டது.ஏற்கனவே போட்டிருந்த இரண்டும் ஜொலித்ததால் இதையும் படித்துவிடலாம் என்று படித்து முடிக்கும் சமயத்தில்

"வாங்க சார் போகலாம்,வண்டி தயாராக இருக்கு" என்றார் ஓட்டுனர்.

பலரின் பின்னூட்டம் போல் நானும் அது அவர்தான் எழுதியது என்று நினைத்துகொண்டிருந்த நேரத்தில் "ஓஷோ" சொன்னது பதிவாகாதது-என்று முடிவில் சொல்லியிருந்தார்.நல்ல பதிவாக இருந்ததால் பின்னூட்டம் போடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் மேலே சொன்ன அழைப்பு வந்தது.

கிளம்பினோம் மூவர்.யாவரும் என்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள்.கொஞ்ச தூரம் கடந்தவுடன் வரும் தொழிலாள நண்பர்கள் தங்கும் இடம் வந்தவுடன் ஓட்டுனர் நிறுத்தி மேலும் மூவரை ஏற்றிக்கொண்டார்.

அனைவரும் மியன்மார்காரர்கள்

"இவர்கள் எங்கு போகிறார்கள்?" என்று தொழிலாள நண்பர்களை பற்றி ஓட்டுனரிடம் கேட்டேன்.

"அவர்கள் Embassy போகிறார்கள்" என்றார்.

எதற்கு?

"ஹோ! அவர்கள் வருடாந்திர விடுமுறைக்கு ஊருக்கு போகிறார்கள்"

அதற்கெதுக்கு Embassy போகவேண்டும்?

"இவர்கள் ஊருக்கு போகும் போது அந்தந்த வருடத்துக்குள்ள வரியை இங்கேயே கட்டிவிட்டால் அங்கு போகும் போது பிரச்சனை இருக்காது" என்றார்.

தொழிலாளர்களுக்கு வரியா?

எவ்வளவு தெரியுமா?

சிங்கப்பூர் நிரந்தரவாசியாக இருந்தால் $180/மாதத்திற்கு

S-Pass க்கு $140/மாதத்திற்கு

Work Permit-$ 450/வருடத்துக்கு

குத்துமதிப்பாக சம்பளத்தில் 10% ஐ பிடித்துக்கொள்கிறது.இது தான் இரட்டை வரி எனப்படுகிறது.

இதே மாதிரி தாய்லாந்து அரசாங்கமும் பண்ணுவதாக சொன்னார்.

ஒரு உழைக்கும் வர்கத்திடம் இருந்து இந்த மாதிரி பகல் கொள்ளை செய்யும் அரசாங்களும் இருக்கத்தான் செய்கிறது.அதுவும் வெளிநாட்டில்!!

இந்த விஷயத்தில் நமது இந்திய அரசாங்கத்தை பாராட்டவேண்டும்.

எங்களிடம் ஏன் எந்த இந்திய குடிமகனிடம் இருந்து(வெளிநாட்டில்) இப்படி பணம் பிடுங்குவதில்லை.

இப்படி சொல்லும் போதே மண்டைக்குள் கவுளி கத்துது.

இந்த மாதிரி எதையோ சொல்லி நம் மாண்புமிகுகள் "அடாடா இது ஒரு வழி பாக்கி இருக்கே" என்று ஆரம்பித்துவிடுவார்களோ என்று?

நம்புவோம்.அப்படியெல்லாம் இப்போது நடக்காது என்று.

15 comments:

வடுவூர் குமார் said...

வாங்க வைசா
எல்லாம் நம்ம ஆட்கள் மீதுள்ள நம்பிக்கை தான்.

Hariharan # 03985177737685368452 said...

குமார்,

எகிப்திலும் இம்மாதிரி வெளிநாட்டில் வேலை செய்யும் எகிப்தியரிடம் வரி வசூல் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: johan- paris

அப்போ வெகுவிரைவில் நம் புண்ணிய பாரதத்தில் இவ் வரியை எதிர் பார்க்கலாமா???
"ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாமது சொன்னால் பாவம்" போல இருக்கு ஒங்க கதை!!!
யோகன் பாரிஸ்

10.52 12.10.2006

துளசி கோபால் said...

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? ச்சின்னப்பிள்ளைகள் போஸ்ட் பாங்க்லே சேர்க்கற காசுலே எதாவது வட்டி வந்துச்சுன்னா
அதுலெ இருந்தும் 20% வரியா அடிச்சுடுவாங்க. அதுங்களுக்கு ஒரு டாலர் வருமா? அதுலெ 20 செண்ட்.

போட்ட வரிகளைத் தாங்கியே நாங்கெல்லாம் வரிக் கழுதை( சுமக்கறதாலே)யா மாறிட்டோம்:-)

ramachandranusha(உஷா) said...

எங்க பாட்டி ஒரு பழமொழி சொல்லுவாங்க- வேலியில போற ஓணானை....

வடூவூராரே, மரியாதையாய் இந்த பதிவை தூக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ;-)

வடுவூர் குமார் said...

ஹரி
எகிப்து மாத்திரம் அல்ல மேலும் சில நாடுகள் இப்படிதான் செய்கின்றன.
வெய்யிலில் நின்று வேலை செய்பவனிடம் இருந்து பிக்பாக்கெட் செய்வது போல் உள்ளது-வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து வரி வசூலிப்பது.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
சில்லரை திருட்டா இருகே!!

வடுவூர் குமார் said...

யோகன் பாரிஸ்
இங்கு இதை படிப்பவர்கள் அரசாங்கத்துறையில் அவ்வளவு பெரிய பதவியில் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?உடனே சட்டம் போட?
எனக்கு நம்பிக்கையில்லை.
கவலைப்படாதீங்க.
கருத்துக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

திருமதி ராமச்சந்திரன் உஷா
இப்படி ஒரே தடியாக எல்லாத்தையும் எடுக்கச்சொன்னா எப்படி? :-))
ஏதோ அங்க இங்க வெட்டச்சொன்னா செஞ்சுடல்லாம்.
கருத்துக்கு நன்றி

நாகை சிவா said...

குமார் அண்ணன்!
நீங்கள் சொல்லும் வரி மேட்டரு நானும் கேள்விப்பட்டு இருக்கேன்.
ஆனால நம் நாட்டில இது அமல்படுத்தப்படாது என்று நினைக்கின்றேன். மேலும் பல சலுகைகள் கொடுக்கும் எண்ணத்தில் தான் இந்திய அரசாங்கம் இருப்பதாக எனக்குப்படுகின்றது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த விஷயத்தில் நமது இந்திய அரசாங்கத்தை பாராட்டவேண்டும்//

மனசுக்குள்ளேயே பாராட்டிக்குங்க சாமி! மானசீகம் தான் இருக்கிறதிலேயே பெஸ்ட்!!

போட்ட வரியைப் பயனுள்ள வேலைக்குப் பயன்படுத்தினாலும் மனசு ஆறிடும். சபையில் தூக்கி அடித்த மைக், உடைத்த நாற்காலி இதையெல்லாம் சரி செய்யக் கணக்கு சரியாப் போச்சுன்னு சொன்னா!

Boston Bala said...


: )

வடுவூர் குமார் said...

திரு போஸ்டன் பாலா,கண்ணபிரான் மற்றும் சிவா-கருத்துகளுக்கு நன்றி

துளசி கோபால் said...

//சில்லரை திருட்டா //

அட, ஆமாங்க . அல்பம்.
வேற என்ன சொல்ல?

Anonymous said...

எழுதிக்கொள்வது: கடல்கணேசன்

வந்து சென்றேன் உங்கள் வலைப்பதிவுக்கு.. நன்றி.. நட்புடன் -கடல்கணே

10.24 20.10.2006