Tuesday, October 03, 2006

சிமினிக்கு உள்ளே

திரும்பப்போவாம் சிமினி உள்ளே!!

சிமினிக்கு வெளியே எவ்வளவு வேலை இருக்கோ அந்த அளவுக்கும் மேலேயே உள்ளேயும் வேலை இருக்கும்.

புற கான்கிரீட் வேலை முடிந்த பிறகு உள்ளே கார்பல் மேலே Precast சுற்று Beam வைத்து அதன்மேல் Fire Brick Work செய்யவேண்டும்.

படம் பார்க்க.

Photobucket - Video and Image Hosting

இந்த வேலைகள் செய்ய திரும்பவும் ஒரு பிளாட்பாரம் Setup செய்யவேண்டும்.அதையும் 2 மட்டங்களில் செய்யவேண்டும்.

ஒரு பிளாட்பாரம் 0 மீட்டரில் இருந்து 120 மீட்டருக்கு மற்றது 120யில் இருந்து 220 மீட்டருக்கு.

முதல் பிளாட்பாரம் தொங்கவைப்பதற்காக சிமினி உள்ளே 120 மீட்டரில் சில இரும்பு பாலங்களை போட்டு வைத்தோம்.

இரண்டாவது பிளாட்பாரம் 220 மீட்டர் உயரத்திலிருந்து தொங்கவிடப்படும்.

Photobucket - Video and Image Hosting


இதை ஏற்றுவதற்கோ இறக்குவதற்கோ ஏற்ற மாதிரி வடிவமைத்திருந்தார்கள்.இதிலும் பல வகையான முன்னேற்றங்கள் செய்ய முற்பட்டு தோல்வியுற்று ஏதோ ஒரு மாதிரி போய்கொண்டிருந்தோம்.

வேலை செய்த பல தொழிளார்கள் பயில்வானாக மாறினார்கள்.அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தூக்கவேண்டியிருந்தது இந்த இயந்திரம்.

Photobucket - Video and Image Hosting

செங்கல் சுவர் நேராக கட்டினாலே கொஞ்சம் ஜாக்கிரதையாக பக்கத்தில் போகவேண்டும் அதுவும் இந்த செங்கல் உள் நோக்கி விழுமாறு இருக்கும்.ஆனால் விழவில்லை நாங்கள் முடித்து வெளியில் வரும் வரை.

இரண்டு மட்டங்களில் வேலை செய்யும் போது தான் கவனமாக இருக்கவேண்டும்.

ஏதாவது "ஜெல்" அடிக்கும் சவுண்டு(மெலிதாக) வந்தால் சுவர் ஓரம் ஒடுங்கிக்கொள்வது நலம்.ஒரு கல்லு மேலேந்து வரும் போது அப்படி தான் சத்தம் வரும்.வந்தது ஆனால் நல்ல வேளை யாரும் காயம் அடையவில்லை.

அப்படி ஒரு நாள் சாயங்காலம் வேலை நடந்துகொண்டிருக்கும் போது ஒருவர் பெரிய ஏணியை வைத்துகொண்டு மேலே உள்ள கார்பலில் ஏதோ பொருத்திக்கொண்டிருந்தார்.
பாதுகாப்பு பட்டை போட்டுக்கொண்டு தான் இருந்தார்.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும் போது என்னவாயிற்று என்று தெரியவில்லை.

"பொத்"

கீழே விழுந்து பாதி உடம்பு பிளாட்பாரத்து இடைவெளியிலும் பாதி உடம்பு பிளாட்பாரத்திலும் கிடந்தார்.

பக்கத்தில் இருப்பவர் உடனடியாக சத்தம் கொடுத்ததால் உடனே கை கொடுத்து தூக்கிவிட்டு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தோம்.நல்ல வேளையாக பெரிய காயமாக இல்லாமல் தப்பினார்.

இது நடந்தது சுமார் 84 மீட்டர் உயரத்தில்.விழுந்திருந்தால் அப்போதே காலியாயிருப்பார்.கம்பெனிக்கும் கெட்ட பெயர்.

இருவரும் தப்பித்தோம்.

4 comments:

துளசி கோபால் said...

நல்லவேளை தப்பிச்சுட்டார்.

நினைச்சுப் பார்த்தா பயங்கரம்தான் இல்லே? எதுவும் நடந்திருக்கலாம்தானே?

நீங்க சிமினின்னதும் எனக்கென்னவோ திடீர்னு பேஸின்ப்ரிட்ஜ் லே மூணு கூலிங் டவர்
(ஒரு ஷேப்லே நிக்கும் முந்தி) அந்த ஞாபகம் வந்தது. எங்க வீட்டுலே அந்த ஷேப் லே இருந்த
ஒரு டம்ப்ளருக்குக்கூட பேஸின்பிரிட்ஜ் டம்ப்ளர்ன்னே பேரு. எங்க வீட்டுலே பாத்திரபண்டங்களுக்கு,
நகைகளுக்கு எல்லாம் பேர் வைக்கிற பழக்கம் உண்டு:-)))))

காதுலே போடும் ட்ராப்ஸ்க்குக்கூட 'ஆட்டுக் கம்மல்':-)

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
பாத்தீங்களா!!இப்படி நகைச்சுவையுடன் சொல்லமுடியும் என்று எனக்கு தோனவில்லை.
"ஆட்டுக்கல் தோடு"-அலுவலகத்தில் வாய்விட்டு சிரிக்க முடியவில்லை.:-))

மு.கார்த்திகேயன் said...

யெப்பா.. உங்கள் வேலையில் தான் எவ்வளவு கஷ்டங்கள் குமார்.. நாங்கள் கனிணி முன்னடி உக்கார்ந்து வேலை பாக்குறதே பெரிய விஷயமா நினைப்போம்

வடுவூர் குமார் said...

வாங்க கார்திகேயன்..
இது கொஞ்சம் உடலுழைப்புடன் கூடிய கரடு முரடான வேலை தான்.
யாரவது ஒரு ஆள் இந்த வேலையை ஏற்க்கதானே வேனும்.