Thursday, October 26, 2006

மின்தூக்கி மேம்பாடு (4)

இதுவரை பார்த்தவையெல்லாம் முன்னேற்பாட்டு வேலைகள்.

இனி வருபவை நாம் பார்க்கப்போகும் கட்டுமானத்துறை வேலைகள்.

அதற்கு முன்பு

இதன் Design எப்படியிருக்கும் என் பார்த்திடுவோமா?

ஏற்கனவே பிளாக்குகள் இருப்பதால் இந்த மின்தூக்கியை பழைய கட்டிடத்துடன் இணைக்கவேண்டும்.அப்படி இணைக்கும் போது பிற்காலத்தில் புது மற்றும் பழைய கட்டிடங்களுக்கு இடையே விரிசல் வரக்கூடாது.அதனால் புது கட்டிடம் அதன் சொந்த கால்களில் நிற்பதாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து,அப்படியே அதை Design செய்வார்கள்.

ஆதாவது மண்ணில் Piling வகையில் தூண்களை நிறுத்தி அதன் மேல் கட்டிடம் தாங்குமாதிரி ஏற்பாடு செய்வார்கள்.

மேலும் எந்தெந்த வகையில் பழைய கட்டிடத்துடன் இணைக்க முடியுமோ அப்படியெல்லாம் இணைத்துவிடுவார்கள்.இந்த மாதிரி இணைப்புகள் எல்லாம் "Factor Of Safety" என்ற மேல்பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். பிடிப்புக்கும் உதவும்.

வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு,வேலை செய்யப்போகும் இடத்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்துவிடுவார்கள்.இது இங்கு செய்யும் சிறிய/பெரிய அவ்வளவு வேலைக்கும் பொருந்தும். அத்துடன் எச்சரிக்கை அட்டையையும் வைத்துவிடுவார்கள்.அதுவும் 4 மொழியில்.

Photobucket - Video and Image Hosting

தமிழை காண்க.(புள்ளி கொஞ்சம் இடம் மாறியிருக்கு)இதே வார்தைகள் 2 வருடங்களுக்கு முன்பு பார்திருந்தால் அர்த்தம் புரியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.யாரோ புண்ணியவான் மாற்றச்சொல்லியிருக்கிறார்.

சரி Piling போட ஆரம்பிப்பதை இங்கு பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

அடுத்து

அடுத்த பதிவில்

5 comments:

துளசி கோபால் said...

எந்த வேலை நடக்கறப்பவும் பாதுகாப்பு வலை எவ்வளவு முக்கியம் பாருங்க.

இதை மனசுலெ வச்சுக்காம நம்ம ஊர்களிலே பள்ளம் தோண்டிட்டு, அதுமேலே சாக்கு, நியூஸ் பேப்பர்னு
போட்டுட்டு எத்தனை விபத்து, எத்தனை குழந்தைகள் உள்ளெ விழுந்து 'மேலே' போயிருக்கு(-:

எப்பத்தான் கவனம் வரப்போகுதோ?

வடுவூர் குமார் said...

துளசி
ஒரு தடவை ஜோஹர்பாரு- மலேசியா போன போது நீங்க சொன்ன மாதிரி தான் இருந்தது.
சிங்கப்பூரை விட்டு வெளியில் போகும் போது சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி

குமார்...கொஞ்சம் போரடிக்குது....தீப்பிடிக்கிற மாதிரி மேட்டர் ஏதாவது எழுது மாமே...

14.29 26.10.2006

வடுவூர் குமார் said...

செந்தழல் ரவி
புரியுது ஆனா..
அந்த மாதிரி மேட்டர் நினைப்பே வரமாட்டேன் என்கிறது.
என்ன பண்ண?
சுபாவம் அப்படியாகிவிட்டது.

அபுல் கலாம் ஆசாத் said...

குமார்ஜி,

இது நம்ம தொழிலோட சம்மந்தப்பட்டது. இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதலாம்ன்றது என்னோட பார்வை. ஆனாலும், தொழில்துறைல இல்லாத நண்பர்கள் படிச்சா பொரிச்செடுக்கும்.

பாத்துக்கங்க அய்யா.

அன்புடன்
ஆசாத்