"வாடகைக்கு அறை"
அந்த வீட்டுக்கு போய் அந்த ஓரறை பார்த்தேன்.
கட்டில்,ஒரு மேஜை & ஷெல்ப் அவ்வளவு தான்.மாத வாடகை 600 வெள்ளி.
சமைத்துகொள்ளலாம்.ஏனென்றால் அவர்கள் சமைப்பதில்லை.
அதுவும் அந்த வீட்டின் குடும்பதலைவர் நமது ஊரில் இருந்து இந்தூர் பெண்மனியை மணம் முடித்தவர்.அதனால் அவ்வளவு பிரச்சனையில்லாமல் வீடு கொடுக்க முன்வந்தார்.
சில சமயம் எங்களுக்கு சமைக்கும் உணவிலேயே அவர்களும் எடுத்துக்கொள்வார்கள்.ஆரம்பத்தில் அவ்வளவாக நாங்கள் கண்டுக்கொள்ளாததால் கொஞ்ச நாட்களில் தொந்தரவு ஆரம்பித்தது.அவர்களுக்கும் சேர்த்து சமைத்து கொடுக்கச்சொல்லி.
சின்ன சின்ன உரசல்கள் ஆரம்பித்தது.
அதே சமயத்தில் அந்த வீட்டு அம்மனியின் புதல்வர் வீட்டு முகவராக இருக்கிறார்,நீங்கள் வீடு வாங்க வேண்டுமானால் அவரிடம் சொல்கிறேன்.குறைந்த விலையில் முடித்துக்கொடுப்பார் என்ற பில்டப் எல்லாம் என் மனைவியிடம் கொடுத்திருந்தார்கள்.
என் மனைவியும் அதையே என்னிடம் சொன்னார்.
"இங்க பாரு,இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது அப்படியே வந்தாலும் முதலில் நம்மிடம் பணம் கிடையாது" என்றேன்.
பிறகு வந்த சில மாதங்களுக்கு இந்த பேச்சு அவ்வப்போது வந்து போய்கொண்டிருந்தது.ஆனாலும் பிடி கொடுக்கவில்லை.
இந்த சமயத்தில் வீட்டு ownerஉடன் உரசல்கள் பெரிதாக தொடங்கியவுடன் வேறு இடம் பார்க்கதொடங்கினேன்.
நல்ல வேளையாக 1 மாதத்திற்குள் பக்கத்திலேயே இன்னொறு வீடு கிடைத்தது.
இது ஒரு தனி வீடு.
அந்த வீட்டில் அப்படி பிரச்சனை அப்படியென்றால் இங்கு வேற மாதிரி.. பிரச்சனை காத்துக்கொண்டிருந்தது.
அது அடுத்தது
5 comments:
வீடுன்னா பிரச்சனை இல்லாம இருக்குமா?
அதுக்குத்தான் அந்தக் காலத்துலெயே
'வீட்டுக்கு வீடு வாசப்படி'ன்னு சிம்பிளாச் சொல்லி வச்சுட்டாங்களே:-))))
ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?
வாடகை வீடுகளென்றால் மனதிற்குப் பிடித்து வீட்டுச் சொந்தக்காரர்களும் நல்லவர்களாக அமைவது அரிது.
துளசி
வீடு என்றாலே பிரச்சனை தான்.எனக்கு வந்தததோ ஜன்னலில்..
அது அடுத்து.
வாங்க மழை ஷ்ரேயா
சரியாச்சொன்னீங்க.
அப்படி அமைவது அது மிக அபூர்வம்.
வாருங்கள் பார்த்தா.
நிச்சயம் செய்கிறேன்.
கருத்துக்கு நன்றி.
Post a Comment