Wednesday, October 25, 2006

மின்தூக்கி மேம்பாடு (3)

ஓட்டுப்பதிவு முடிந்தபிறகு வழக்கம் போல டெண்டர் விட்டு ஒப்பந்தக்காரர்கள் வேலையை எடுப்பார்கள்.

முதல் வேலை..

ஒப்பந்தம் கிடைத்தவுடன் வேலை செய்யவேண்டிய இடத்தை பெற்றுக்கொள்ளுதல்.இதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதால் அனைவரும் வந்து தேவையானவற்றை குறித்துக்கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்துவிடுவார்கள்.

இரண்டாம் வேலை

ஒப்பந்தக்காரரிடம் தேவையான வரைபடங்கள் கொடுக்கப்படும்.இது கிடைத்தவுடன் உடனடியாக மண்ணை தோண்டிட முடியாது.முதலில் மண்ணுக்கடியில் போட்டுள்ள அல்லது நிலத்துக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் Services ஐ கண்டுபிடிக்கவேண்டும்.

மின்சார சம்பந்தப்பட்ட கேபிள் என்றால் "கேபிள் டிடக்டெர்" என்ற கருவி மூலம் 2 மீட்டர் ஆழத்திற்குள் போடப்பட்டுள்ள கேபிளை கண்டுபிடித்து கலர் பெயிண்ட் மூலம் குறித்துவிடுவார்கள்.

Photobucket - Video and Image Hosting

இவ்வாறு குறித்தபிறகு அது எவ்வளவு தூரம் தங்கள் பணியிடத்தில் ஊடுருவுகிறது என்று பார்த்து அதற்கு தகுந்த மாதிரி முடிவுகளை எடுப்பார்கள்.

அதே சமயத்தில் கீழே போகும் மற்ற services க்கு தகுந்த வரைபடங்கள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருப்பதால் அதில் அவ்வளவாக பிரச்சனை வரவாய்பில்லை,இருந்தாலும் அதுவும் ஒப்பந்தக்காரரின் கடமைகளில் ஒன்று.

இந்த வேலை, சில பிளாக்குகளை சுற்றி நடப்பதால் என்ன என்ன கீழே புதைக்கப்பட்டு இருக்கும்?

முதலில்-மின்சார ஒயர்கள் (இதிலும் பல விதங்கள் இருக்கு)

2.மழை நீர் வாய்கால்

3.Gas பைப்

4.sanitarory பைப்.

5. குடி தண்ணீர் குழாய்கள்.

அடுத்து,

மின்தூக்கிக்கு வேண்டிய புதிய ஒயர்களை தேவைப்படும் இடத்தில் இருந்து நிலத்துக்கடியில் புதைத்துக்கொண்டு வந்து தேவையான இடங்களில் விட்டு விடுவார்கள்.


இதற்கு பிறகு தான் கட்டுமானத்துறை வேலைகள் ஆரம்பிக்கும்.

அது அடுத்த பதிவில்.

3 comments:

துளசி கோபால் said...

பதிவைப் படிச்சேன்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி

வாங்க நட்சத்திரமே!!! வாழ்த்துக்கள்...

18.16 25.10.2006

வடுவூர் குமார் said...

நன்றி செந்தழல் ரவி