Wednesday, October 25, 2006

வாடகை வீடு -3

போன பதிவு

வீடு வாங்கும் எண்ணம் அப்போது இல்லாததால் முதலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்போம் என்றால்..

தனிவீடு வாடகை மாதம் சுமார் 1100 வெள்ளியாக இருந்தது, அதுவும் சிங்கையில் இருக்கும் இடத்தை பொருத்து அமைந்தது.

என்னுடைய பொருளாதாரம் அந்த அளவுக்கு போகமுடியாததால் ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுப்போம் என்று நினைத்து ஒரு முகவரிடம் சொல்லியிருந்தேன்.

முதல் கண்டீஷன்: நாங்கள் மூன்று வேலையும் சமைப்போம்!!

சமையல் அறை:சின்ன குறிப்பு:

நம்மூர் பெண்களுக்கு இது அவர்களின் தனியறை.பங்கு போட்டுக்கொள்ள விருப்பப்படாத இடம்.எனக்கு தெரிந்து மாமியார் மருமகள் குறைகள்/நிறைகள் இங்கிருந்து தான் தொடங்குகிறது.

ஆனால் சிங்கப்பூரில் பலரின் வீட்டு சமையல் அறை என்பது அவர்கள் வரவேற்பறை போல் சும்மா அட்டகாசமாக செய்திருப்பார்கள்.சமையல் செய்தால் தானே அழுக்காவதற்கு. 2~3 வெள்ளிக்குள் சாப்பாடு கிடைக்கும் பட்சத்தில் ஏன் காய்கறி வாங்கி கஷ்டப்பட்டு சமைத்து சாப்பிடவேண்டும்?அவசியம் இல்லாமல் போகிறது.அதனால் சமையல் அறை எப்போதும் "பளிச்".இப்படி இருக்கும் ஒரு சமையல் அறையை யார் உபயோகப்படுத்த அனுமதிப்பார்கள்?

Photobucket - Video and Image Hosting

பல சமயங்களில் இந்திய குடும்பம் உள்ளவர்களே இந்தியவர்களுக்கு வாடகைக்கு கொடுப்பார்கள்.சமைக்ககூடாது அது இது என்று பல நெருக்குதல்கள் இருக்கும்.

இந்த நிலமையில் எனது முகவர் என்னை அழைத்து நகரத்துக்கு பக்கத்தில் ஒரு அறை இருக்கிறது பார்கலாமா? என்றார்.

சரி என்று சொல்லி போய் பார்த்தேன்.

அடுத்த பதிவு

6 comments:

nagoreismail said...

எழுதிக்கொள்வது: Nagore Ismail

தங்களின் பதிவு சிறியதாக உள்ளது, ஒரே பதிவில் இட வேண்டியதை மூன்று நான்கு பதிவாக இடுகிறீர்கள், வேலை பலு தான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன், எனினும் தங்களின் பகிவு எதுவும் எதற்கும் குறைந்தது அல்ல, நன்றாக இருக்கிறது, உபயோகமாகவும் இருக்கிறது, நானும் சிங்கப்பூரில் தான் இருக்கிறேன், கன்ஸ்ட்ரக்ஷன் பணிகளுக்கும் எனக்கும் கூட சம்பந்தம் உள்ளது, நீங்கள் வேலை பாதுகாப்பு பற்றி எழுதுவீர்களா? நன்றி,
நாகூர் இஸ்மாயில்

11.47 26.10.2006

துளசி கோபால் said...

பிஜி & மலேசியாவுலே கூட இப்படிப் பளிச்தான். ஆனா அவுங்க வீட்டுலே சமைப்பாங்க.
வெளியிலே ஒரு அடுப்பு வெராந்தாவுலெ இருக்கும் . அவுட் டோர் குக்கிங்.வீட்டுக்குள்ளே
கிச்சன் எப்பவும் நீட் & டைடி:-))))

வடுவூர் குமார் said...

நாகூர் இஸ்மாயில்
நீங்கள் நினைப்பது உண்மைதான்.
பாதுகாப்பு பற்றி எழுதுகிறேன்.
நன்றி

வடுவூர் குமார் said...

இங்க சமைக்காமலே குசினியை பளிச் என்று வைத்துக்கொள்வதில் என்ன பயன் என்று தெரியவில்லை.

nagoreismail said...

எழுதிக்கொள்வது: nagoreismail

நன்றி வடுவூர் குமார், உங்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமை, நானும் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் தான் படித்தேன், தற்சமயம் சிங்கப்பூரில் தான் வசிக்கிறேன், எனது சொந்த ஊர் நாகூர் தான், நன்றி, நாகூர் இஸ்மாயில்

17.6 26.10.2006

வடுவூர் குமார் said...

நாகூர் இஸ்மாயில்
அப்படியா,சிங்கை வந்தவுடன் பார்க்கலாம்.
மிக்க சந்தோஷம்.
நன்றி