Tuesday, October 10, 2006

மின்தூக்கி மேம்பாடு (2)

யார் யார் எவ்வளவு கட்டணும்?எப்ப கட்டணும்?

இப்படி போன பதிவில் முடித்திருந்தேன்.தொடருவோம்

இந்த மின்தூக்கி மேம்பாட்டு திட்டத்தில் வேலை முடிந்து நீங்கள் உபயோகப்படுத்து போது தான் பணம் கட்டவேண்டும்.ஆதாவது கட்டுமான வேலை ஆரம்பித்து முடிய அப்படி இப்படி என 2 வருடங்கள் ஆகக்கூடும்.

எவ்வளவு பணம்?

அது வேலை முடிந்தபிறகு கணக்கு பண்ணபிறகு சொல்வார்கள்.கீழே சொல்லியுள்ளது ஒரு சுமாரான கணக்கு.

நீங்கள் சிங்கப்பூர் மக்களா? அப்படியென்றால் நீங்கள் தங்கியிருக்கும் மட்டத்துக்கு தகுந்த மாதிரி சுமார் 600 ~ 1800 வெள்ளிக்குட்பட்டு இருக்கக்கூடும்.

நீங்கள் நிரந்தரவாசியா?இதுவும் நீங்கள் தங்கியிருக்கும் மட்டத்துக்கு தகுந்த மாதிரி இருக்கும் எனினும் சுமார் 13000 ~ 16000 வெள்ளிக்கு இடைப்பட்டு இருக்கும்.

மேலே சொன்னது ஒரு உதாரணம் தான், பாக்கத்து பாக்கம் வேறுபடும்.

இதை கட்ட நீங்கள் 5 லிருந்து 10 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.என்ன வட்டிக்கு கொஞ்சம் காசு கூட கொடுக்கவேண்டிருக்கும்.

ஆனா பணம் கட்டியே ஆகணும்.

சரி வோட்டு போட்டாச்சு 75% க்கு மேல் ஓட்டு விழுந்திடுச்சு.

Photobucket - Video and Image Hosting

அடுத்து..

வாங்க அடுத்த பதிவுக்கு.

2 comments:

துளசி கோபால் said...

P.R.க்கும் குடி மக்களுக்கும் வெவ்வேறு கட்டணமா?

இங்கே அப்படி இல்லை.

கட்டணமுன்னா எல்லாருக்கும் ஒண்ணு போலத்தான்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
இந்த கேள்வியின் பின்னனியே இந்த பதிவின் சாரம்.
வரும் 16ம் தேதி தான் இதன் Climax.