Thursday, October 05, 2006

வாடகை வீடு - 2

போன பதிவு

வீடு வாங்கினேன் என்று தான் சொன்னேன்.

எங்கு என்று சொல்லவில்லையே??

சிங்கப்பூரில் தான்.

ஏன் வாங்கினேன்?வாங்கியதால் என்ன நண்மை,என்ன தீமை? பார்போமா?

நான் சிங்கைக்கு வந்தது 1995-மே மாத வாக்கில்-சரியாக ஞாபகம் இல்லை.கடவுச்சீட்டை பார்க்கவேண்டும்.

நான் மட்டும் தனியாகத்தான் வந்தேன்.

அதற்கு காரணம் இருந்தது.நான் வருவதற்கு முன்பே என்னுடைய முதலாளி "உன்னுடைய வேலை விவகாரம் இங்குள்ள மனிதவள/குடியேற்ற அமைச்சு மூலம் அங்கீகரிக்கப்படவேண்டும்"என்று சொல்லி தான் கூட்டிவந்தார்கள்.அதனால் குடும்பத்தை அங்கு விட்டு விட்டு தனியாளாக வந்தேன்.

நான் வந்தவுடன் தேவையான விபரங்களை அவர்களுக்கு அனுப்பியவுடன் 2 மாதங்களுக்குள் "Employment Pass" கிடைத்தது.அதற்கு பிறகும் என்னுடைய வேலை தொடருமா இல்லையா என்ற குழப்ப நிலையில் குடும்பத்தை அழைத்துவருவதை தள்ளிப்போட நேர்ந்தது.

சுமார் 2 வருடங்கள் கழித்து நிரந்தரவாசத் தகுதி கிடைத்தவுடன் எனது குடும்பத்தை அழைத்து வர முடிவுசெய்தேன்.

இப்போது குடும்பத்தை தங்க வைக்க "வீடு" வேண்டும்.

Photobucket - Video and Image Hosting


தேடல் தொடங்கியது..

அடுத்த பதிவு

4 comments:

துளசி கோபால் said...

அட!!!!!! நிறைய மாடிகள் இருக்கே! இங்கே இடம் தாராளம். அதுனாலே மாடி வீடுகள் ரொம்பக்குறைவு. டபுள் ஸ்டோரியை
எண்ணிறலாம்:-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அந்த மொத்த பில்டிங்கும் உங்க வீடா? ஆகா...குமார் சார் கையைக் குடுங்க; கைகுலுக்கத் தான் :-))

தொடருங்கள் உங்கள் அனுபவத்தை!

வடுவூர் குமார் said...

துளசி
இங்கே தாம் இடப்பற்றாக் குறையாச்சே.
இன்னும் கொஞ்ச நாளில் தங்கும் இடத்துக்கு மேலேயோ கீழோ வண்டி ஓடும்.

வடுவூர் குமார் said...

கண்ணபிரான்
என்னது அவ்வளவும் என்னுடையதா?
உங்க ஆசை மிகப்பெரியது.:-))