பழைய காலத்தில் இருந்து புழங்கிக்கொண்டு இருக்கும் இந்த வழக்கு எவ்வளவு சரி,எவ்வளவு தப்பு என்று தெரியாது.
அது என்ன என்று பார்ப்போமா??
மண் ஆசை
பொன் ஆசை
பெண் ஆசை
இதோடு இன்னொன்றும் சேர்த்துக்கொள்ளனும் தோனுகிறது.அது தான் வீட்டு ஆசை.
வீடு கட்ட ஆசை.
வீடு வாங்க ஆசை.
சிலருக்கு நிலம் வாங்கி வீடு கட்டுவது ஆசை.
ரொம்ப தெரிஞ்சுகனும் என்று ஆசையிருந்தால் திரு JBR ஜோசப் வலைபதிவை தேடி கண்டுபிடித்து படியுங்கள்.இங்கு சுட்டி கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர் வலைபூக்களில் அந்த தொடுப்பு இல்லை.
"நொந்து நூலாகி"-இதுக்கு அவருடைய வலைப்பூவில் விபரம் கிடைக்கும்.கொஞ்சம் ஏமாந்தா மொத்தமாக மொட்டை அடிக்க ஒரு கும்பலே இருக்கு என்பதை இவர் வலைபதிவில் இருந்து தெரிந்துகொண்டேன்.இத்தனைக்கும் எனக்கு தொழிலே கட்டுமானத்துறையில் தான்??
அடுத்து நம்ம துளசி மிரட்டிட்ருக்காங்க!!
அது வந்தபிறகு தான் தெரியும்.
ஆமா இது எதுக்கு இவ்வளவு பீடிகை??
நானும் ஒரு வீடு வாங்கினேன்.அதில் ஏற்பட்ட சாதக பாதகங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தான்.
வாங்க அடுத்த பதிவுக்கு..
18 comments:
இப்படி நாம ஆளாளுக்கு (நாலு) வீடு
கட்டுனா.......... நம்ம மக்கள்ஸ் அம்பேல்:-)))))
வாங்க தலைவா,
வாழ்த்துக்கள்!!!
எழுதிக்கொள்வது: ரேவதி நரசிம்ஹன்
நல்வரவு வடுவூர் குமார்.
பதிவுகளுக்குக் காத்திருக்கிறோ
10.22 23.10.2006
எழுதிக்கொள்வது: sivagnanamji
உண்மைதான், குமார் அவர்களே! 'வீடு கட்டினால் ஆயுளில் பாதி குறையும்'னு நம்ம பக்கம் ஒரு கருத்து உண்டல்லவா?நானும் ஒரு வீடு வாங்கினேந்-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து. முழுத்தொகையையும் செலுத்தி ஆண்டுகள் சில ஆயிற்று.ஆயினும் ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை. காரணம்: நிலச்சொந்தக்காரர் தனக்கு கொடுக்கப்பட்ட ஈட்டுத்தொகை போதாது என்று
வழக்கு தொடுத்திருப்பதுதான். வழக்கு எப்போமுடியும் னு காத்திருக்கொம்
10.39 23.10.2006
அடிச் சக்கை! நட்சத்திரமா?
வாழ்த்து(க்)க்ள.
சும்மா 'வீடு கட்டி' விளையாடுங்க:-))))
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
சிறப்புப் பதிவு எதுவும் இல்லையா?
எழுதிக்கொள்வது: SP.VR.SUBBIAH
வாருஙகள் வடுவூராரே வணக்கம் பலகோடி
தாருங்கள் பதிவுகளைத் தமிழ்மண ந்ட்சத்திரமாக!
11.57 23.10.2006
ஆரம்பமே நன்றாக இருக்கிறது,
காத்திருக்கிறேன், அடுத்த பதிவுகாக. . .
நட்சத்திர வாழ்த்துக்கள்.......
வாங்க துளசி
"அம்பேல்"- மனைவியும் நானும் பார்த்து பார்த்து சிரித்தோம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி
நன்றி
பாலாஜி
எங்கேயோ தூக்கிட்டு போற மாதிரி இருக்கு,வாழ்த்துக்களுக்கு நன்றி.
நன்றி வல்லிசிம்ஹன்
வாங்க சிவங்ஞானம் ஜி.
உங்க கதைக்கே தனி பதிவு இருக்கும் போல இருக்கே!!
நன்றி
பெத்தராயுடு
இருக்குங்க. கொஞ்ச நேரத்தில் போடுகிறேன்.நன்றி
வாங்க வாத்தியார் சார்.
உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.
வெங்கடராமன் & சின்னக்குட்டி- வாழ்த்துக்களுக்கு நன்றி.
விண்மீன் வார வாழ்த்துகள் வடுவூர் குமார்.
நன்றி குமரன்.
Post a Comment