Friday, August 25, 2006

மேட்டூர் அனுபவங்கள்-இரண்டு

முதல் அனுபவும் இங்கு

பல வித மீட்டீங்,பெரிய மனிதர்களின் வருகை என்று ஒரு மாதம் ஓடிவிட்டது இன்னும் முடிவு தெரியவில்லை.கட்டுமானத்துறையில் ஒரு மாதம் என்பது மிகப்பெரிய காலம் அதுவுமின்றி பணவிரயம்.இப்படியே போயிற்று அந்த மாதம் முழுவதும்.கடைசியாக எங்கள் கம்பெனி 11 மீட்டரில் இருந்து 24 மீட்டர் உயரத்துக்கு இடைப்பட்ட கான்கிரீட்டை உடைத்து திரும்ப போடப்போவதாக சொல்லி அதற்கு வேண்டிய பணிகளை செய்யத்தொடங்கினார்கள்.

அதை எப்படி செய்தார்கள் என்று சொன்னால் பலருக்கு புரியாது என்பதால் அதை அப்படியே தாண்டிப் போகிறேன்.

ஆமாம் இந்த மாதிரி முடிவுக்கு ஏன் வந்தார்கள் அதற்கு யார் உதவினார்கள் என்று பார்ப்போமா?

ஒருவர் மீது ஒருவர் சேறடித்துக்கொண்டிருந்தால் எதுவும் நடக்கப்போவதில்லை அது மட்டுமில்லாமல் வேலை முடியவில்லை என்றால் பழி கம்பெனிமீது தான் வந்து விழும்.இதனால் கிடைக்க இருக்கும் வருங்கால பணியும் தடைப்படும்.

ஆமாம் இப்படி செய்வதால் உங்களுக்கு இழப்பு தானே?

நிச்சயமாக,ஆனால் தற்காலிகமானது.

சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிப்பது போன்றது.இந்த யுக்தி எல்லா சமயங்களிலும் சரியான முடிவாக இருக்காது.சில சமயம் இப்படி வருகிற இழப்புகளை அடுத்த வேலையில் ஈடுகட்டவும் முடியும் அல்லது ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.அதெல்லாம் என்னுடைய நிலைக்கு அப்பாற்பட்டதால் இது ஒரு வித அநுமானம் தான்.

இப்படி செய்வதால் பல நன்மைகள்,தற்போது இருக்கும் அதிகாரிகள் தங்கள் உயரதிகாரர்களிடம் போய் நின்று இதற்கு விளக்கம் அளிக்க தேவையில்லை.
வேலையும் தொடங்கும்.

முடியும் நேரம் சிறிது காலதாமதம் னாலும் அதை தகுந்த முறையில் நீட்டிக்கொடுப்பார்கள்.அப்ப எனக்கு நீ கை கொடுத்தாய் இப்போது நான் கொடுக்கிறேன்.

கால அவகாசத்தை நீட்டிப்பதால் "liquidated damages " கட்ட வேண்டியதிலிருந்து தப்பிக்கலாம்.

இப்படி பல அனுகூலங்கள் இருந்ததால் மேற்சொன்ன முடிவுக்கு வந்திருப்பார்கள்.

இந்த Slipform இருக்கே அதற்கு மேலே மட்டும் தான் போகத்தெரியும் கீழே வரத்தெரியாது.மொத்தமாக பிரித்துதான் எடுக்கவேண்டும்.
பிரித்து பிறகு அந்த உயரத்தில் பூட்ட வேண்டுமானால் மிகவும் கஷ்டம் அதனால் கீழே இருந்து 24 மீட்டர் உயரத்துக்கு பைப் சாரம் போட்டு Slipform ஐ தாங்கிப்பிடித்தோம்.
கான்கீரிட்டை உடைத்து மீண்டும் கம்பி கட்டி கான்கிரீட் போட 2 மாத காலங்கள் எடுத்தது.

எங்கள் உயரதிகாரிகள் முகங்கள் இந்த கால இழப்பை எப்படி சரிகட்டுவது என்ற கவலை மொத்தமாக குடிகொண்டிருந்தது.

அப்போது EBயின் EE (Excutive Engineer) க இருந்தவர் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை.கொஞ்சம் தடிமனானவர்.நல்ல மனிதர்.வேலை நல்ல விதமாக முடியவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்.ஆனாலும் தன்கீழ் வேலைசெய்யும் அதிகாரிகளையும் அனுசரித்து போகவேண்டிய கட்டாயத்தால் அவ்வப்போது அவரும் கையை கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.அதாவது குத்தகைகாரர்களுக்கு உதவ நினைத்தாலும் முடியாத நிலமையில் இருந்தார்.

இந்த மாதிரி சமயத்தில் தான் இந்த மனிதர் எங்கள் siteக்கு மாற்றலில் வந்தார்.வருவதற்க்கு முன்பே பலர் இவரைப்பற்றி பலர் சொல்லியுள்ளார்கள்.மிகுந்த கண்டிப்புள்ளவர்..அப்படி இப்படி என்று.கை சுத்தம் உள்ள ஆள் என்று.

"கை சுத்தம் உள்ள ஆள்"-அது போதும் எங்களுக்கு..

லார்சன் & டூப்ரோவுக்கு கைசுத்தம் உள்ள ஆட்கள் என்றால் கவலை இருக்காது ஏனென்றால் நாங்கள் செய்வதில் ஏதும் மறைக்க இருக்காது.பணத்தை சேமிக்க குறுக்கு வழியில் போவதை விரும்பாத எங்கள் மேலதிகாரிகளின் பண்புகள் எங்களுக்கு ஊட்டப்பட்டதால்,வேலையில் சுத்தம் இருக்கும்.வரைபடத்தில் போடப்பட்டுள்ள கம்பிகள் மற்றும் தேவையான உருதியுடன் உள்ள சிமிண்ட்க்கு உத்திரவாதம்.மொத்ததில் நிம்மதியாக போய் தூங்கமுடியும்.அதனால் தான் இவர்கள் ஒப்பந்தங்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து கிடைத்துக்கொண்டு இருக்கிறது.

அந்த நல்ல மனிதர் பெயர் தான் "திரு.சத்யமூர்த்தி"

இவரைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்போம்.

4 comments:

மா சிவகுமார் said...

//அதை எப்படி செய்தார்கள் என்று சொன்னால் பலருக்கு புரியாது என்பதால் அதை அப்படியே தாண்டிப் போகிறேன்.

கொஞ்சம் முனைந்து புரியும் படி இதையும் சொல்லுங்களேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

துளசி கோபால் said...

பெயருக்குத்தகுந்த பொருத்தமான மனிதர்.

கை சுத்தம் ரொம்ப முக்கியம். இது இல்லாமப்போய்த்தான் இப்ப நாட்டுலே
என்னென்னமோ நடந்துக்கிட்டு இருக்கு(-:

வடுவூர் குமார் said...

சிவகுமார்-
முடிந்தவரை புரியும்படி சொல்லிடுகிறேன் - அடுத்த பதிவில்.
நன்றி

வடுவூர் குமார் said...

சரியாச்சொன்னீங்க-துளசி.
அன்றுமட்டும் அவர் மாதிரி ஆளுங்க கிடைக்கவில்லை என்றால் எங்க கம்பெனி கதி--பல இலட்சங்களை இழந்திருப்போம்