Thursday, August 17, 2006

கைமேல் பலன்

காலை அலுவலகத்துக்கு போகும் போது ரயில் மற்றும் பஸ்ஸில் செல்லும் போது முடிந்தவரை ஏதாவது ஒரு புத்தகத்தில் மூழ்கிவிடுவேன்.

இப்போது மூழ்கிக்கொண்டிருப்பது "C" யில்.

அவனவன் மூட்டைகட்டி வைத்தை இப்போது படிக்கிறாயா? என்கிறீர்களா.சும்மா ஒரு முயற்சிதான்.பார்ப்போம் எதுவரை போக முடிகிறது என்று.

கதை இதைப்பற்றி அல்ல.

3 வருடங்களுக்கு முன்பு..

ஒரு புத்தகம் கிடைத்தது.மலேசிய எழுத்தாளர் எழுதியது.அவர் எழுதியிருந்தது "வர்மக்கலை"யைப் பற்றி.

தற்காப்பின் அவசியத்தைப்பற்றி எழுதிவிட்டு அவசியம் இல்லாமல் இந்த கலையை யார் மீதும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரையெல்லாம் கொடுத்திருந்தார்.

அதற்குப்பிறகு அதை யாரிடம் கற்கவேண்டும்,எப்படி பழகவேண்டும் என்றெல்லாம் விபரமாக இருந்தது.

புகைவண்டியில் இருந்து இறங்கி பஸ்ஸ¤க்குள் ஏறினேன்.உட்கார இடம் கிடைத்தால்,மீதியையும் படிக்க ரம்பித்தேன்.

கொஞ்சம் படித்த பிறகு,என்னடா இது இதுவும் ஒரு வித வன்முறையே என்று தோனியதால் ஒரு அசுவாரசியத்துடன் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன்.ஒரு சமயத்தில்,இது நமக்கு சரிப்பட்டு வராது என்று மூடி மடிமேல் வைத்திருந்தேன்.இறங்குவதற்க்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்ததால் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரில் பஸ்ஸிலோ டிரெயினிலோ யாரும் மற்றொருவருடன் அதுவும் புதியவர்களுடன் சுலபமாக பேசமாட்டார்கள்.நீ தனி நான் தனி.அது நம்மாளாக இருந்தாலும்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என் மடிமீது இருந்த புஸ்தகத்தைப் பார்த்து "நான் பார்கலாமா?" என்றார்.

"தாராளமாக"

அவர் பார்பதற்கு மலாய்காரர் மாதிரி இருந்தார்.நான் கொடுத்ததோ தமிழ் புத்தகம்.இவர் எப்படி தமிழ் படிப்பார் என்று குழப்பத்துடன் இருந்தேன்.

சில பக்கங்களை பார்த்துவிட்டு..

"What they have shown here are all correct"-என்றார்.

அவர் பார்த்தது வெறும் படங்களை மாத்திரம் தான்.

"இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?"

"சின்ன வயதில் கற்றுக்கொண்டேன்,இப்போது விட்டுவிட்டேன்" என்றார்.

பேச்சு இதைச்சுற்றியே வளர்ந்து கொண்டிருந்தது.

இறங்குவதற்க்கு 2 ஸ்டாப்பிங் இருக்கும் போது..

"வெறும் ஒரு விரலால் நமது எதிரியை மடக்கிவிடலாம்"-பார்கிறாயா ஒரு Sampleஐ என்று ஒரு விரலால்

முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் ஒரு தொடல்,முழங்கைக்கும் தோள் மூட்டுக்கு நடுவில் ஒரு தொடல்... அவ்வளவு தான்

ஒரு சில வினாடிகள் மின்சாரத்தை தொட்ட உணர்வு.

இப்படி நான் பட்ட அனுபவத்தை அப்படியே விட்டிருக்கலாம் அதை எனது அலுவலக நண்பர்களிடம் கூறிய போது அவர்கள் நம்ப மறுத்தனர்.

"சரி உன் கையை காட்டு"

எனக்கு கொடுத்த அதே பஞ்சை அவர்களுக்கும் கொடுத்தேன்.

மறுநாள் வந்து...

டேய் என்னடா பண்ண?? கை விரு விருன்னு இருக்கு என்றார்கள்.

படித்தவுடன்(முடிக்கவில்லை) கிடைத்த அனுபவம் இது.

பின் குறிப்பு:

இந்த கலையில் ஒருவனை 48 மணி நேரத்துக்கு உறைய வைக்க முடியும் என்று போட்டிருந்தார்கள்.சிலவற்றிற்கு அடி வாங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு அதை விடுவிக்க முயற்சிக்கலாம் என்றும் போட்டிருந்தார்கள்.

"களவும் கற்று மற"-வேண்டுமானால் தெரிந்து தெளிந்துவிடுங்கள்.

8 comments:

துளசி கோபால் said...

இது ரொம்ப 'பவர்ஃபுல்' விஷயம்தான்.
'இந்தியன்' சினிமாவுலே பார்த்த ஞாபகம் வருது.

நாமக்கல் சிபி said...

நானும் இந்தியன் படம் பாத்துட்டு அந்த மாதிரி புத்தகம் எல்லாம் வாங்கினேன்,

எந்த எந்த முத்திரை எந்த எந்த இடத்துக்கு பயன்படத்தனும்னு இப்ப சரியா நியாபகமில்லை.

சக்தி முத்திரை, விஷ்ணு முத்திரை,யானை, குதிரை மட்டும் நியாபகம் இருக்கு.

நோக்கு வர்மம்தான் ஹிப்நாட்டிசம் :-)

அதுவும் கத்துக்க ஆரம்பிச்சேன்... ஆனால் விவேகானந்தர் "ஹிப்நாட்டிசத்தை எதிர்த்து நில்னு" சொன்னதை படிச்சிட்டு நிறுத்திட்டேன் :-))

வடுவூர் குமார் said...

துளசி
இதன் வீரியம் பாதி புத்தகத்திலேயே தெரிந்துவிட்டது.
இதன் ஆதார சுருதியே நரம்பு முடிச்சு தான்.

வடுவூர் குமார் said...

வாங்க பாலாஜி
பல விவேகானந்தர் புத்தகங்கள் மூலம் சிலவற்றில் நானும் தெளிவடைந்தது உண்டு.
நன்றி

Anu said...

verum booka padichi katthukka mudiuma enna
thulasi sonna madiri indian padam dan nyabagam varudu

நாகை சிவா said...

//இப்போது மூழ்கிக்கொண்டிருப்பது "C" யில். அவனவன் மூட்டைகட்டி வைத்தை இப்போது படிக்கிறாயா? //
அட நீங்க வேற இன்னும் அது எனக்கு தண்ணிக் காட்டிக்கிட்டு இருக்கு :(

வர்மம் கலை பற்றி அவ்வளவாக தெரியாது. களரியை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. ஏதும் புத்தகம் இருந்தால் விரிவாக எழுதவும்.

வடுவூர் குமார் said...

சிவா
கிடைத்தால் போடுகிறேன்.சிங்கையில் மலாய்காரர்கள் அதே மாதிரி விளையாட்டை விளையாடுகிறார்கள்.அதற்குப் பெயர் "சிலாட்".
களரியில் கேடையமும் வாளும் இருக்கும்.இந்த சிலாட்டில் ஒரே ஒரு வேல் கம்பு தான் இருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க அனிதா பவன்குமார்
முதல் முறை வந்துள்ளீர்கள்.நன்றி.