Monday, August 14, 2006

காந்தி மகான் சமாதி

Photobucket - Video and Image Hosting

நான் இருந்த 3 மாதங்களில் தினமும் மதியம் சாப்பாட்டுக்கு பிறகு போய் உட்காரும் இடம் இதுதான்.பலவித மனிதர்கள்,வெளிநாட்டவர்கள் வரும் இடம் இது.பலர் ஜெர்கினை கயட்டிவிட்டு சூரிய குளியல் செய்வார்கள்.அப்படி செய்பவர்களை காப்பாளர்கள் வந்து நயமாக இது தூங்கு இடம் இல்லை இங்கிருந்து போய்விடுங்கள் என்று அனுப்பிவிடுவார்கள்.

நாங்கள் வேலை செய்ய வேண்டிய இடம் "ராஜ்காட்"(காந்தி மகானின் சமாதி உள்ள இடம்)க்கு வெகு அருகாமையில் இருந்த ஒரு பவர் ஸ்டேசன் உள்ளே.அதை மேம்படுத்துவதற்காக புதிதாக ஒரு சிமினி(புகை போக்கி) 110 மீட்டர் உயரத்தில் கட்ட இருந்தார்கள்.அதற்கு "Slip Form"(இதைப்பற்றி இங்கே எழுதியிருந்தேன்)முறையில் கட்ட இருந்தார்கள்.

முதலில் நான் எழுதிய முறை கீழிருந்து மேல் வரை ஒரே விட்டம் உடையது ஆனால் புகைப்போக்கி என்பது கீழிருந்து மேலே போகப்போக அதன் விட்டம் குறையும்.கட்டி முடிந்த பிறகு மேலே நின்றால் தென்னை/பனை மரத்தின் மேல் நிற்கிற மாதிரி ஆடிக்கொண்டே இருக்கும்.நிஜமாகங்க! கான்கிரீட் கூட ஆடும்.அந்த உயரத்தில் எப்போதுமே நில நடுக்கம் இருக்கிற மாதிரித்தான் இருக்கும்.

(From Google Earth View)

கொஞ்சம் தைரியம் இல்லாதவர்கள் இதில் வேலை செய்யாமல் இருப்பது நலம்.இந்த ஆட்டங்கள் மெது மெதுவாக ஆரம்பிப்பதால் எங்களுக்கு அவ்வளவாக தெரியாது.தெரியும் போது பழக்கமாகியிருக்கும்.

இவ்வளவு சொல்கிறமே நாங்களே ஒரிரவு கான்கீரீட் நிறுத்த வேண்டி வந்தது.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 comments:

துளசி கோபால் said...

நாங்க தெரியாத்தனமா ஒரு வருஷம் ஜூன்லெ டெல்லி வந்துட்டு பட்ட கஷ்டம் இருக்கே.

காலில் செருப்பில்லாம காந்தி சமாதி பார்க்கணுமுன்னு சொன்னாங்களென்னு செருப்பைக் கழட்டிட்டு அந்த
மார்பிள் தரையிலே நிக்கமுடியாம ஆடுனஆட்டம் என்ன?

ஹே ராம்........

வடுவூர் குமார் said...

அப்படியா?
நான் போனபோது குளிராக இருந்ததால் தப்பித்துவிட்டேன்.
நடக்கும் இடத்தையாவது வேறு மாதிரி கல் போடவேண்டும்.
எங்க அதில் கையை வைக்கப்போய் அதுவும் அரசியல் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார்களோ என்னவோ?
உங்களை மாதிரி "ஹேராம்" சொல்லிட்டு மாத்தவிட்டுருவாங்க நம்மாளுங்க??