எப்படியெல்லாம் உடம்பை சூடு படுத்த முடியும் என்று யோசித்து தண்டால், பஸ்கி எடுத்தாலும்..ஹ¥கும் அதையும் மீறி குளிர் வாட்டியது.
சரி குளியல் அறைக்குள் வந்தாகிவிட்டது,குளிக்காமல் திரும்ப போனால் மானத்தை வாங்கிவிடுவார்கள். என்ன செய்யலாம் என்று யோசிக்க யோசிக்க, உடம்பு வேகமாக தாளம் போட ஆரம்பித்தது.
பச்சை தண்ணீரை எடுத்து கையை முதலில் நனைத்தேன்.பிறகு கால் அதற்கு பிறகு..
மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அப்படியே தலையோடு உடம்பையும் நனைத்தேன்.உடம்பு அப்படியே விரைத்து போனேன்.மூச்சுவிடுவதற்கு மிக கஷ்டமாக இருந்தது.சமாளித்து சீக்கிரமாக குளித்துவிட்டு வெளியில் வந்தேன்.
முதல் நாள் வேலை என்பதால் அவ்வளவாக செய்ய ஒன்றும் இல்லை.அதனால் சாயங்காலம் நேரத்தோடு கிளம்பி "பாலிகா பஸார்"போய் ஒரு ஜெர்கின்ஸ்ம் கையுரையும் வாங்கிப்போட்ட பிறகு தான் உடம்பு ஒரு நிலமைக்கு வந்தது.
கொஞ்ச நாள் கழித்து சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இதை அவர்களிடமும் சொன்னேன்.அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு "நல்லா ஏமாந்தாய்" என்றார்கள்.
ஒன்றும் புரியவில்லை.நான் எப்படி "குளிப்பதில்" ஏமாந்தேன் என்று??
எனக்கு முன்பு குளித்த நபரின் பராக்கிரமம் கொஞ்ச நாளில் வெளிய தெரிய ஆரம்பித்ததால் அப்படி சொன்னார்களாம்.
ஆதாவது உள்ளே போய் குளிப்பதாய் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு,ஆ ஊ என்று சத்தம் போட்டு விட்டு அவன் மூஞ்சியை துடைத்துக்கொண்டு வந்திருப்பான்.அதை நம்பி நீயும் போய் குளித்துவிட்டு வந்திருக்காய்-என்றார்கள்.
நம்ப கஷ்டமாக இருந்தாலும்...நடந்திருக்க வாய்ப்பு அதிகமா இருந்தது.ஏனென்றால் அவருடைய குணம் அந்த மாதிரி.
அந்த மாதிரி அனுபவிக்கவிட்டால் இந்த மாதிரி ஒரு பதிவை போட முடியுமா?
அடுத்த பதிவில் நாங்கள் வேலை செய்த இடத்தை பற்றி பார்கலாம்.
நமது தேசத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.
11 comments:
எழுதிக்கொள்வது: சிவமுருகன்
//நமது தேசத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.//
சஸ்பென்ஸா?
14.25 11.8.2006
ஆமாம் சிவமுருகன்...அடுத்த பதிவு வரை தான்.
வருகைக்கு நன்றி
எழுதிக்கொள்வது: Dev
இது தாங்க மொத முறையா உங்க பதிவு பக்கம் எட்டி பாக்குறேன்.. நல்லா இருக்குங்க
16.9 11.8.2006
வாங்க தேவ்
நன்றி.
This Post has been featured in Vavaasangam parinthurai
vavaasangam
நன்றி
தேவ்.
ஆஹா, ஒரு வழியா எப்படியோ குளிச்சிட்டிங்க.
சந்தோஷம்
ஓ! எனக்குப் பிறகு (நிஜமாகவே !?) குளித்தது நீங்கள்தானா?
நல்லா இருக்கு
எழுதிக்கொள்வது: SK
சாதாரனமாகக் குளிர் பிரதேசங்கலில் தினசரி குளிக்க வேண்டிய அவசியம் இல்லை, வியர்வை அதிகம் சுரப்பதில்லையால்!
ஆனால், அங்கு போய், பஸ்கி, தண்டால் எல்லாம் எடுத்து, உடம்பை வருத்தி, பின் குளிர்த் தண்ணீரில் குளிக்கப் போன உங்கள் மூளையை நிச்சயம் 'இந்ச்யூர்' செய்யத்தான் வேண்டும்!!
அது சரி, என்னதான் குளிர் தேசமானாலும், வெந்நீர் வசதி இல்லாத அந்த 21 - ம் நூற்றாண்டு ஆதிவாசி ஊர் எதுங்க?!!
:))!!
17.56 26.8.2006
SK
அது நம்ம தலைநகர் தாங்க.
அப்ப அது வயசு,அனுபவம் இல்லை மற்றும் வெகு நேரப்பயணம்.குளித்தேஆகனும் என்ன செய்வது.
Post a Comment