Thursday, August 10, 2006

டெல்லி விஜயம்

ஹிந்தி தெரியுமா??

11வது முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில், சும்மா இருக்கவேண்டாம் என்று அப்பா தொலைதூர கல்வியில் இலவசமாக கிடைக்கும் பாடங்களை வாங்கி படிக்கச்சொன்னார்.ஒரளவு கற்றுக்கொண்டேன் ஆனால் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காததால் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான்.கத்துகொண்டால் போயிற்று.

சீக்லேங்கே.கொய் தக்லிப் நஹி ஹை. (கத்துண்டா போயிற்று-கஷ்டம் ஒன்றும் இல்லை)

ஒரு நல்ல நாள் பார்த்து நானும் மற்றொரு நண்பனும் சேர்ந்து விஜயவாடவிலிருந்து டெல்லிக்கு கிளம்பினோம்.டிசம்பர் முதல் வாரம் என நினைக்கிறேன்.20 மணி நேரம் கழித்து ஹஸ்ரத் நிஜாமுதினில் இறங்கினோம்.என்னடா டெல்லி என்று சொல்லிவிட்டு இங்கு இறங்குகிறார்கள் என்று என்னுடன் வந்தவனிடம் கேட்டேன்.இங்கிருந்து நாம் போகவேண்டிய அலுவலகம் கிட்ட அதனால் இங்கு இறங்கினால் நல்லது என்றான்.எங்களைப்போல் பலரும் இங்கு தான் இறங்கினார்கள்.விஜயவாடா ஏறிய போது தெரியாத குளிர் கீழே இறங்கியவுடன் பல் தந்தி அடிக்க,உடம்பு வெடவெடக்க போர்வையை சுற்றிக்கொண்டு டேக்ஸி பிடித்து ஒரு ஓட்டலுக்கு போய் இறங்கினோம்.

காலை 6.30 மணி, 8 மணிக்கு அலுவலகம் போக வேண்டும் என்பதால் குளிக்க போகலாம் என்று முதலில் ஒருவன் போனான்.அப்போது தான் தெரிந்தது உள்ளே வென்னீர் வராது என்று.எங்கெங்கோ அலைந்து விஜாரித்தபிறகு தான் தெரிந்தது 8.30 மணிக்கு மேல்தான் வென்னீர் கிடைக்கும் என.என்ன செய்வது என்று தெரியவில்லை.

முதலில் குளியல் அறைக்கு போனவன் திரும்ப "வேறு வழியில்லை நான் பச்சை தண்ணியிலே குளித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு,உள்ளே போய் 20 நிமிடங்களுக்கு பிறகு புத்தம் புதியவனாக வந்தான்.

எப்படிடா இந்த குளிரில் குளித்தாய்? என்றேன்.

முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு தண்ணீரை ஊற்றிக்கொள் பிறகு சரியாகவிடும் என்றான்.
அவன் சொல்வதை நம்பி போய் ஆடையை களைந்தால்....சகலமும் நடுங்க ஆரம்பித்தது.சரி முதலில் பல் விளக்கிவிடலாம் என்று கொஞ்சம் தண்ணீரை பிடித்து வாய் கொப்பளிக்கும் முன்பே தாடை இரண்டும் உறைந்துவிட்டது.இந்த அனுபவம் புத்தம் புதியது.இந்த அளவுக்கு குளிரை இதற்கு முன்பு அனுபவித்ததில்லையாதலால் கொஞ்சம் கஷ்டப்படேன்.எப்படியோ பல் தேய்த்துவிட்டேன்.அடுத்து குளியல்..

குளிக்க முடிந்ததா? இல்லையா?

வாங்க அடுத்த பதிவுக்கு

12 comments:

நாகை சிவா said...

நமக்கும் இது போல அனுபவம் டில்லியில் உள்ளது. ஆனால் இதை தூக்கி சாப்பிடும் அனுபவம் பாரீஸ்சில் ஏற்பட்டது.
ஐய்யோட மைனஸ் டிகிரி நினைத்தாலே உடம்பு ஜில்லுங்குது

அது குளிச்சீங்களா இல்லையா

துளசி கோபால் said...

காக்காய் குளியல். இல்லேன்னா முகத்தைக் கழுவிட்டு, தலையில் தண்ணீயை தெளிச்சுக்கணும்.
ஆச்சு குளியல்:-))))

Anonymous said...

எழுதிக்கொள்வது: சிவமுருகன்

நல்ல குளிர் நேரத்துல இப்படிதான் இருக்கும்ன்னு யாரும் சொல்ல வில்லையோ?

எனக்கும் முதலில் அப்படிதான் இருந்தது.

16.0 10.8.2006

வடுவூர் குமார் said...

சிவா,
குளிச்சேன் ஆனா??
பொறுங்க கொஞ்சம் சனிக்கிழமைவரை!

வடுவூர் குமார் said...

துளசி
அப்படித்தான் நினைத்தேன்.ரயிலில் வந்த அசதி விஜயவாடா வேர்வை வேறு,குளித்தேஆகவேண்டும் என்ற கட்டாயம்.

வடுவூர் குமார் said...

வாங்க சிவமுருகன்
சொன்னாங்க ஆனா இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று தெரியாது.
எல்லாமே அநுபவம் தானே,பட்டு தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.

யாத்ரீகன் said...

>>>குளிக்க முடிந்ததா? இல்லையா?

வாங்க அடுத்த பதிவுக்கு <<<<


இவ்ளோ நாள் குளிக்காம இருக்கீங்களே.... ;-)

APEX learning said...

எழுதிக்கொள்வது: Seetha

சிலவற்றை அனுபவித்தால் தான் தெரியும்! நம்ம ஊரில் கம்பளி, நல்ல குளிருக்கு போதுமானது. அதையே நினைத்துகொண்டு ரஜாய் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னதையும் கேட்காமல் ஒரு இரண்டு மாததிற்கு பிறகு ஒரு நாள் அனுபவித்து அன்றே ரஜாய் வாங்கியதை நினைத்தால்!

8.55 10.8.2006

வடுவூர் குமார் said...

வாங்க யாத்ரீகன்
உங்கள் பின்னூட்டத்தை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே?

யாத்ரீகன் said...

என்னங்க பண்ண.. நெறய வேலை.. வந்து படிச்சாலும்.. டைப்பண்ணுவதற்கு நேரம் இல்லை... ரொம்ப நாளாச்சேன்னுதான் ..ஒரு சின்ன காமெண்ட்டாவது அடிச்சிடனும்னு.. :-)

வடுவூர் குமார் said...

நன்றி யாத்திரீகன்

வடுவூர் குமார் said...

வாங்க சத்யசீதாராமன்.
ரஜாய்-குளிருக்கு இதமான டீ போல!