Saturday, August 05, 2006

பூஜ்ஜியத்துக்கு கீழே!!

"அப்பா இன்னிக்கு பள்ளியில் ஒரு புது எண் சொல்லிக்கொடுத்தார்கள்"
அப்படியா?என்ன அது.

"நாமெல்லாம் பூஜ்யம் தானே கடைசி என்று நினைத்துக்கொண்டு இருக்கோம்?"

ஆமாம்

"கிடையாது பூஜ்யத்துக்கு கீழே மைனஸ் ஒன்று,இரண்டு....என்று உள்ளதாம்"உங்களுக்கு தெரியுமா?

ஆமாம் தெரியும்.எல்லாவற்றிலும் மைனஸ் 1,2 இருக்கும்-என்றேன்.நான் 8 டாவதோ 9 தாவதோ படித்ததை 4வது படிக்கும் மகன் என்னுடம் கேட்டான்.
கேட்டுவிட்டு போய்விட்டான்.

பல நாட்கள் கடந்தபிறகு ஒரு நாள்..

நான் எனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தேன்.பக்கத்தில் சில ஆப்பிள் பழங்கள் இருந்தது.வந்தவன் பேசாமல் அங்கிருந்த ஆப்பிளை உருட்டிய படி

"அப்பா"

உம் என்ன?

"அன்னிக்கு நீங்க சொன்னீங்க எல்லாவற்றிலும் மைனஸ் 1,2, இருக்கும்" என்று?

ஆமாம் அதுக்கென்ன இப்போ?.

"இந்த ஆப்பிளுக்கு" எங்க இருக்கு மைனஸ் 1?

அப்படிப்போடு-கொஞ்சம் அசந்துட்டேன்.என்ன பதில் சொல்வது.யோசித்துக்கொண்டே...
இருக்கு! நீ யோசித்து சொல் பார்கலாம் என்றேன். (வாய்தா வாங்கினேன்)அந்த சமயத்தில் விடை எனக்கும் தெரியாது.

கொஞ்ச நேரம் கழித்து

"எனக்கு தெரியலை" நீயே சொல்லு.-என்றான்.

திடிரென்று ஒரு யோஜனை தோன்றியது.நான் சொன்ன விடை இது தான்.
இந்த ஆப்பிளுக்கு முன்பு அது என்ன?பூ வாக இருந்திருக்கும்,அதற்கு முன்பு மொட்டாக இருந்திருக்கும்.நீ ஆப்பிளை பூஜ்ஜியமாக்கினால் பூ தான் மைனஸ் ஒன்று என்றேன்.

அப்ப மொட்டு பூஜ்ஜியமானால்.....?எது மைனஸ் ஒன்று?

மவனே?எனக்கே செக்கா?(Check)
தண்டு,இலை அப்படியே போய் வேர் வரை போகலாம் என்றேன்.

இந்த காலத்து பஸங்கள்....என்னத்தை சொல்ல?

வேலை வாங்கும் போது கூட இந்த மாதிரி கேள்விகளை எதிர் கொண்டதில்லை.

போடுங்க உங்க குட்டீஸ் உங்களை அசர வைத்த நிகழ்வுகளை.

9 comments:

ஜயராமன் said...

நல்ல நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டீர்கள்.

தற்கால குழந்தைகள் மனதிடமும் அதிகம். அறிவு கூர்மையும் அதிகம். அதை நல்வழிப்படுத்துவதே பெற்றோர்கள் என்று ஆகிவிட்டது. அறிவைப்புகட்டுவதை விட நல்ல இறையாண்மையும், செறிந்த லட்சியங்களையும் குழைந்தைகளிடம் ஏற்புற செய்வதே தற்கால பெற்றோர்களின் கடமை, வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

தங்கள் பதிவுக்கு நன்றி

மேலும் எழுதுங்கள்...

நன்றி

வடுவூர் குமார் said...

வாங்க ஜெயராமன்
நல்ல பின்னூட்டம்.
நன்றி

Anonymous said...

எழுதிக்கொள்வது: நாகை சிவா

அண்ணாத்த நானே ஒரு குழந்தை நான் என்னத்த சொல்லுறது. அக்கா பையன் அடிக்குற கூத்தை தான் தினமும் கேட்டுக் கொண்டு இருக்கின்றேன்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

17.33 6.8.2006

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
கூடிய சீக்கிரம் உங்க பசங்க அடிக்கிற கூத்தைப்போட வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்.

மா சிவகுமார் said...

குழந்தையாக கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டால் மைனஸ் ஒன்று என்ன மைனஸ் முடிவிலி வரை கூடப் பார்த்து விடலாம். இல்லையா!

அன்புடன்,

மா சிவகுமார்

Anu said...

u r absolutely right
half the time i will be dumbfounded by questions asked by my nephew..

வடுவூர் குமார் said...

நன்றி அனிதா பவன்குமார்.

மாதங்கி said...

எழுதிக்கொள்வது: Mathangi

குழந்தைகளின் தனித்தன்மையே நாம் கூறும் விடைகளை மேலும் ஆராய்ந்து கேட்பதுதான்

9.44 22.9.2006

வடுவூர் குமார் said...

வாங்க மாதங்கி
இப்படிதான் நாமும் அவங்களிடம் இருந்து தினமும் கற்றுக்கொள்கிறோம்.
வருகைக்கு நன்றி