மறைமலை நகர் Site அவ்வளவாக எனக்கு பேர் கொடுக்கவில்லை.அதுவும் அங்கிருந்த Resident Engineerக்கும் எனக்கும் ஒத்துப்போகாத நிலையில் நான் மாற்றப்பட்டேன்.அதற்கு பக்கத்தில் இருந்தே குழி பறித்தார்கள் என்னுடன் வேலைப்பார்த்த பெருந்தகைகள்.
மறப்போம் மன்னிப்போம்.
எனது அடுத்த Site, எங்கள் தலமையகம் அப்போது அமைந்திருந்த சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ள L&T Mcnil லின் உள்ளே ஒரு Moulding Shop தொழிற்சாலை.
இந்த Siteயின் Resident Engineer-திரு N.V.Ramu அவர்கள்.பழுத்த அனுபவசாலி.ஒவ்வொருவரையும் அளந்து "ஆடிக்கறக்கரை மாட்டை...." மாதிரி எல்லோரிடமும் வேலை வாங்குவதில் வல்லவர்.இவரிடம் உள்ள மிகச்சிறந்த குணம்,நாம் வேலைப்பார்பதே நமக்கு தெரியாது.எங்க அடிச்சா எது நகரும் என்று தெரிந்து வைத்திருப்பவர்.இப்படி இருந்ததால் நாம் அனாவசியமாக போய் குத்தகைகாரரிடம் சத்தம்போட அவசியம் இல்லை.
இதுவும் மற்ற தொழிற்சாலைப் போல தூண்களும் மேலே Slabம் தான்.இதன் மொத்த கட்டிடத்தை தாங்குவதற்கு ஏதுவான நிலம் இல்லாததால் Bore Piling என்ற முறைப்படி நிலத்தில் சுமார் 20~30 மீட்டை ஆழத்திற்க்கு ஓட்டைப்போட்டு (900 - 1200 dia) அதனுள் கம்பி இறக்கி பிறகு கான்கீரிட் போடுவார்காள்.இதன் மேல் தான் மொத்த கட்டிடமும் எழுப்பப்படும்.பின் வரும் படங்களை பார்க்கவும்.ஏதோ கொஞ்சம் புரியும் என நினைக்கிறேன்.
கட்டிடத்தின் மேல் தளம் பல பிரிவுகளாக (Pre-Cast) கீழேயே தளம் போட்டு பிறகு பாரம் தூக்கி மூலம் மேலே வைக்கும்படியாக Design செய்யப்பட்டிருந்தது.
படங்களை பார்க்கவும்ஆமாம் இப்படி செய்வதால் என்ன நன்மை?
நேரம் தான்.
கீழ்தளம் வேலை நடந்துகொண்டிருக்கும் போதே மேல் தள வேலைகளையும் ஆரம்பித்து விட முடியும்.அதிக ஆட்கள் தேவைப்படாது.அது மட்டுமில்லாமல் கான்கீரிடும் தரமாக இருக்கும்.பாதுக்காப்பானது.
இந்த Projectம் சிறியதானதால் 1 வருட காலத்துக்குள் மீண்டும் பணி மாற்றம் வந்தது.
இந்த பணி மாற்றங்கள் தான் கட்டுமானத்துறையின் மிகப்பெரிய சாபம்.குடும்பம் என்ற கட்டுக்கோப்பு சுத்தமாக கலைந்துவிட வாய்ப்பு அதிகம்.பிரம்மச்சாரிகள் அல்லது வேறு வேலை செய்யத்தெரியாதவர்களுக்கு மட்டுமே இந்த வாழ்கை ஒத்துவரும்.பொண்டாட்டிக்கு இந்த துறைப்பற்றி எதுவும் தெரியாமல் இருந்து, ஒத்துப்போகாவிட்டால் ரெண்டு பக்கமும் இடி தான்.என்னுடைய பல நண்பர்கள் அவஸ்தை படுவதை நான் பார்த்துள்ளதால் சொல்கிறேன்.விரைவு உணவகம்,புது சினிமா அதெல்லாம் உங்கள் வேலையிடம் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தால் ஒருவேளை முடியும்.
ஞாயிறு விடுமுறை?
அதிர்ஷ்டம் இருந்தால்!!
சரி உனக்கு ஒரு பக்கம் இடியா?ரெண்டு பக்கமும் இடியா?
அதை வேறொரு சமயத்தில் சொல்கிறேன். :-))
கல்யாணம் ஆன புதிதில் மற்றும் குழந்தை படிப்பு ஆரம்பிக்கும் வரை பிரச்சனை தெரியாது.படிப்பு என்று ஆரம்பிக்கும் போது, 1 வருடத்திற்கு 1 இடம் என்று மாறும் போது புது இடம் மற்றும் மொழி மாற்றம் அவர்களை மட்டும் இல்லாமல் நம்மையும் சேர்த்து வாட்டும்.
எனக்கு அந்த பிரச்சனை இந்த சமயத்தில் இல்லாததால் என்னுடைய ஒரே பெட்டியை தயார் பண்ண ஆரம்பித்தேன்.
வாங்க அடுத்த பதிவுக்கு.
4 comments:
ஊர் ஊராய்க் கூடவே எங்களையெல்லாம் கொண்டு போறதுக்கு நன்றி.
நானும் ஊர் சுத்திதான். பள்ளியிலே படிக்கிற காலத்துலே வருசம் ஒரு புது ஸ்கூல்.
இன்னும் பாதி கிணறு கூட தாண்டவில்லை.இந்தியாவின் வடகோடிக்கு தூக்கிட்டுப்போய் பொத்துன்னு போட்டாங்க....
சிங்கப்பூரில் வந்து விழுந்துவிட்டேன்.நல்ல வேளை அடிபடவில்லை
வாங்க சக்கரா
என்னைவிட உங்ககிட்ட நிறைய இருக்குமே.எடுத்துவிடுங்க.
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
நன்றி
இது போன்ற தொழில் நுட்ப விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. ஒரு கட்டிடம் கட்டும் போது என்னென்ன கணக்கு போடுகிறார்கள், எப்படி டிசைன் செய்கிறார்கள் என்று இந்த பதிவில் படங்களுடன் கோடு காட்டியது போல சொன்னால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment