Monday, August 21, 2006

டெல்லி 2 மேட்டூர்

3 மாத அலுவலகப்பணி முடியும் தருவாயில் அவ்வப்போது கிடைக்கும் Off மற்றும் விடுமுறைகளில் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்தேன்.
டெல்லியில் சித்தி இருந்தார்கள் அதனால் இந்தமாதிரி சமயங்களில் அவர்கள் பையனை கூட்டிக்கொண்டு சுத்த ஆரம்பித்தேன்.எனக்கு அவ்வளவாக இந்தி தெரியாததால் அவன் தான் எனக்கு சப்போட்.

குதுப்மினார்- சில வருடங்களுக்கு முன்பு நடந்த நெரிசல் விபத்துக்கு பிறகு மேலே போக அநுமதியில்லாததால் பக்கத்தில் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

ரோஸ் தோட்டம்:கலரில்,அளவில் என்று விதம் விதமாக எவ்வளவு அமைக்கப்பட்டிருந்தது.காண கண் கோடி வேண்டும்.பிப்ரவரி மாதங்களில் நடக்கும்.

ஜந்தர் மந்தர்:வான்வெளி சாஸ்திரத்தைப்பற்றியது.விருப்பம் உள்ளவர்கள் போய் பார்கலாம்.

மிச்சத்தை இங்கே போய் பாருங்க
சில நாட்கள் சேர்ந்தார் போல் விடுமுறை கிடைத்ததால் ஹரித்துவார்,ரிஷிகேஸ் என்று போய் வந்தோம்.மற்றொருமுறை ஆக்ரா,தாஜ்மகால் என்று அந்த பக்கத்தையும் அளந்துவிட்டு வந்தோம்.

சித்தப்பா கொஞ்சம் பெரிய இடத்தில் இருந்ததால் அவரின் உதவியுடன் பாராளுமன்றம் செல்ல அனுமதிகிடைத்து அதையும் போய் பார்த்தேன்.அவ்வப்போது வந்து விழும் ங்கிலத்துக்கு நடுவே மொத்தமாக ஹிந்தியில் தான் பேசினார்கள்.என்னுடைய ஹிந்தி புலமையில் என்ன பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

இப்படி அப்படி என்று ஒரு வழியாக 3 மாதங்களை கழித்தபின்பு டெல்லியை விட்டு கிளம்பினேன்.சென்னை அலுவலகத்தில் report செய்யச்சொன்னதால் சென்னை வந்தேன்.
சென்னை வந்ததும்,என்னை அடுத்த வேலைக்காக மேட்டூர்க்கு போகச்சொன்னார்கள்.வேலை மேட்டூர் அணையில் இல்லை அதற்கு பக்கத்தில் உள்ள Thermal Power Stationயில்.எங்களுடைய Clientபொதுபணித்துறையின் மறு பக்கமாக விளங்கும் தமிழ்நாடு மின்துறை கழகம்.இவர்கள் அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை பல சமயங்களில் நிரூபித்தார்கள்.அவர்களிடையேயும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்தது.அதை பிறகு பார்ப்போம்.

இங்கு எங்களுக்கு 2 வேலைகள் இருந்தன,
1) கூலிங் டவர் (அதாவது மின்சாரம் தயாரிக்க உதவும் போது சில மெசின்களை குளிர்விக்க இந்த தண்ணீர் உதவும்)
2) 220 மீட்டர் உயரத்துக்கு ஒரு சிமினி.அப்போதைக்கு இது தான் முதன் முதலில் கட்டப்பட இருக்கின்ற உயரமான சிமினி.கட்டுமான ஒப்பந்தம் 24 மாதங்கள் மட்டுமே.

ஏற்கனவே எனக்கு அனுபவம் இருந்த்தால் என்னை இதில் போட்டார்கள்.
வாழ்வின் வசந்த காலங்கள் இங்கிருந்து தான் தொடங்கின...

மீதி அடுத்த பதிவில்..

4 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி

///வாழ்வின் வசந்த காலங்கள் இங்கிருந்து தான் தொடங்கின...///

ஏரியாவில அழகான பொன்னு ஏதாவது இருந்ததா என்ன ? :))

9.27 21.8.2006

துளசி கோபால் said...

//வாழ்வின் வசந்த காலங்கள் இங்கிருந்து தான் தொடங்கின...//

ஆஹா.......... இனி எல்லாம் சுபமே?

வடுவூர் குமார் said...

வாங்க செந்தழல் ரவி
அழகான பொண்ணுங்க இல்லாத இடம் எங்க இருக்கு??
அதைப்பற்றி கடைசியாக போடலாம் என்றுள்ளேன்.

வடுவூர் குமார் said...

துளசி
அவ்வளவு சீக்கிரமா "சுபம்" சொல்லிடமுடியுமா?கல்லு,கம்பி & சிமின்ட் தவிர பக்கத்தில் நிறைய இருக்கு பார்க்க!!
என்ன இப்பதான் கொஞ்சம் டைம் கிடைத்தது.