Wednesday, May 31, 2006

கணிணி அனுபவம்-2

கணிணி அனுபவம்-2 (அனுபவம்--1 இங்கே சொடுக்கவும்)


என்ன இது அந்த பெண் ஏதோ Shut Down என்று சொன்னாள் எங்கு போவது என்று தெரியாமல் கொஞ்சநேரம் முழித்துவிட்டு "Powerஐ" மொத்தமாக Off செய்துவிட்டேன்.இதே போல் சில நாட்கள் சென்றன.எனக்கும் எப்படி செய்வது என்று கேட்க வெட்கம் மற்றும் யாரும் எதுவும் சொல்லாததால் நான் செய்வது சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஒரு நாள் காலை அந்த பெண் காலை வந்தவுடன் கொஞ்சம் சத்தமாக பேச ஆரம்பித்து பிறகு நேற்று யார் Computerஐ shutdown செய்தது என்று விஜாரித்து பிறகு எனக்கு சொல்லிக்கொடுத்தாள்.

"Start" என்று ஒன்று இருப்பதும் அதன் மூலம் தான் எல்லாம் ஆரம்பம் ஆகிறது என்று தெரிந்து கொண்டேன்.அதன்பிறகு MS Office மற்றும் softwareஐயும் கற்றுக்கொண்டேன்.

MS Windows என்ன என்பது புரிவதற்கு எனக்கு பல காலம் பிடித்தது.

2000ம் ஆண்டு வரை எனக்கு ஒரு கனிணி அவசியம் என்று தெரியவில்லை.அவசியம் வரவில்லை.

என்னுடன் தங்கியிருந்த நண்பர் ஒருவர் தான் ஒரு கணிணி assemble பண்ணப்போவதாகவும் என்னையும் வேண்டுமானால் join செய்யுமாறு அழைத்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு Pentium 2 கணிணி assemble செய்தோம்.எல்லாம் செய்த பிறகு தான் அவர் சொன்னார் தனக்கு Operating System எப்படி நிறுவுவது தெரியாது என்று.அப்படியே 2 மாதங்கள் CPU மூடியே கிடந்தது.

ஒரு நாள் அந்த நண்பர் தான் தெரிந்துகொண்ட Operating System installationஐ எனது systemத்திலும் நிறுவினார்.வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.அதை முடித்தவுடன் சில காலம் உபயோகப்படுத்தியவுடன்...நம்ம கை சும்மாகயில்லை.அவர் சொல்லிக்கொடுத்த Format,partition முதலியவற்றை முயற்சிக்க தொடங்கினேன்.

ஆரம்பித்தது வினை..முதல் சில தடவைகள் சரியாக வந்து பிறகு காலை வாரிவிட்டது.Concept புரிந்து கொள்ளாமல் செய்தால் இப்படித்தான் என்று தெளிந்து கொண்டு மேலும் அந்த நண்பரின் உதவியுடன் மீண்டும் நன்றாக தெரிந்துகொண்டேன்.

இந்த சமயத்தில் மிக முக்கியமாக நினைவுகூற வேண்டியது, அப்போது சிங்கப்பூரில் ஒவ்வொறு செவ்வாய் கிழமையும் வெளிவரும் "Computer Times" என்ற துணை ஆங்கில இதழ் தான்.இதில் வரும் பல கட்டுரைகள் புதியவர்களுக்கு எளிமையாக புரியுமாறு கொடுத்திருப்பார்கள்.மற்றும் சிங்கப்பூர் நூலகம்--இதன் மூலமும் என்னுடைய Knowledgeஐ வளர்த்துக்கொண்டேன்.

தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்,முயற்சியும் நல்ல பலன்களை கொடுக்கும்.முயன்று கொண்டே இருங்கள்.

இப்போது எனது கணிணியில் இப்போது ஒரு Window,2 linux (Fedora 5 and Suse 9.3) மற்றும் சில Partitions உள்ளது.இவை எல்லாம் ஒரே Harddiskயில்.

நான் XOSL-Boot loader போட்டுள்ளேன்.மிக அருமையான software.ஒரே ஒரு harddisk உள்ளவர்கள் முயற்சித்துப்பார்கலாம்.புது disk ஆக இருந்தால் நல்லது.
QT parted live cd உள்ளது,இதுவும் ok தான்.

Fedora Core 5-தமிழ் fontsஐ அழகாக கையாள்கிறது.Mozillaவில் தமிழ் unicode நன்றாக தெரிகிறது ஆனால் Windows இல் தமிழ் Unicode fonts Mozilla சரியாக காண்பிக்க தவறுகிறது.
Win98 & MEயில் தான் இந்த பிரச்சனையா என்று தெரியவில்லை.Latha fonts, winxp தவிர மட்டவற்றில் சரியாக தெரியவில்லை.

7 comments:

துளசி கோபால் said...

குமார்,

இப்படிக் கையைக் கொடுங்க முதல்லே!

கணினி கைநாட்டு ன்னு சொல்லிக்கிட்டு இருக்கற நான் உண்மையாவே உங்களைப் பாராட்டறேன்.

நல்லா இருங்க.

வாழ்த்து(க்)கள்.

மஞ்சூர் ராசா said...

ஆரம்பத்தில் எல்லோருக்கும் இப்படித்தான். தவறுகளிலிருந்து தான் கற்றுக்கொள்ள முடியும். உங்கள் ஆர்வமும் விடா முயற்சியும் தான் உங்களை கணினி வல்லுனர் ஆக்கியுள்ளது.
வாழ்த்துக்கள்.

மகேஸ் said...

குமார் சார்,
என்னுடைய மடிக்கணிணியில் Windows-XP-SP2 உள்ளது. நான் Linuxம் நிறுவ நினைக்கிறேன்.
என்னுடைய எல்லா HDD drive ம் NTFS. இந்தச் சூழ்நிலையில் நேரடியாக Linux நிறுவ இயலுமா?
எனக்குத் தெரிந்தவரை, HDD Partion ஐ delete செய்துவிட்டு Linux partion செய்து, Linux நிறுவிவிட்டு பின்னர் Windows-XP நிறுவுவதுதான் ஒரே வழி.
வேறு ஏதேனும் உங்களுக்குத் தெரிந்து WIndows XP ஐ அழிக்காமல் Linux நிறுவ வழிகள் உள்ளனவா?

Linux ல் எந்த நிறுவனத்தின் Linux உபயோகிப்பவர்களுக்கு எளிதாக(User friendly) இருக்கும். சிறிது சிறிதாக Windows ஐ விட்டு வெளியே வர நினைக்கிறேன்.

வடுவூர் குமார் said...

திரு மகேஷ்
Fedora core 5-simply super.ஏனென்றால் நான் ரெட் ஹாட் 7 யில் இருந்து உபயோகிக்கிறேன்.
Mepis also good but very simple.
நீங்கள் சிங்கையில் இருந்தால் FC5 நான் கொடுக்கமுடியும்.

மகேஸ் said...

குமார் சார்,
நான் இருப்பது லண்டனில். ஏதாவது வெப்சைடில் இருந்து இறக்கம் செய்துகொள்ள இயலுமா?

வடுவூர் குமார் said...

திரு மகேஸ்
Linux install பண்ணும் போதே கேட்கும் நீங்கள் Existing partition உபயோகப்படுத்தப் போகிறீர்களா அல்லது free spaceஐ பயன்படுத்த போகிறீர்களா என்று.அப்போது நீங்கள் முடிவெடுக்கலாம்.

முழுவதுமாக மாறுவதற்கு முன்பு "Linux Live cd" உபயோகித்துவிட்டு மாறுவது நலம்.Webcam & Wireless support முழுமையாக இல்லை.

Resizing / Changing file system நான் முயற்சித்ததில்லை.

உங்கள் dataவை சேமித்த பிறகு "slip streeming" முறைப்படி உங்கள் winxpஐ cd/dvd யில் சேமித்தபிறகு உங்கள் researchஐ தொடங்குவது உசிதம்.

www.fedoraforum.orgக்கு போனால் அங்கு எல்லாம் விபரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மகேஸ் said...

தகவல்களுக்கு நன்றி குமார் சார்.