இன்று சுமார் 11.45 க்கு நண்பரின் வேண்டுகோளுக்காக அங்கு போயிருந்தேன். பக்கத்தில் இருந்த கார் ஷோரூம் அவர் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருக்க என்னுடைய பார்வை அந்த மேம்பாலம் பக்கம் போனது.
இந்த படத்தை பாருங்கள்
வெள்ளை அம்புக்குறியிட்ட இடத்தில் ஒரு சிறிய இடைவெளி தெரிகிறதா? இது எதற்கு என்றால் மேம்பாலத்தில் வண்டி போகும் போதோ அல்லது சீதோஷ்ண நிலை மாறுபடும் போது ஏற்படும் நீள வேறுபாடுகள் சாலையை பாதிக்காமல் இருக்க கொடுக்கப்படும்.இதே முறை தான் ரயில் தண்டவாளங்களிலும் இருக்கும்.இதை சரியாக செய்த நெடுஞ்சாலைத்துறை அந்த பீம் மேல் கட்டியிருக்கும் சுவருக்கு அந்த இடைவெளி கொடுக்காமல் விட்டுவிட்டது.இதனால் கீழே உள்ள பீம் இடையே உள்ள இடைவெளி அர்த்தமற்று போய்விட்டது. அந்த இடைவெளி அர்த்தமற்று போய்விட்டதால் அந்த பீம் உட்கார்ந்து இருக்கும் Bearing ஒரு தெண்டச்செலவு. இதே மாதிரி பல அரசாங்க கட்டுமானமே முன்மாதிரி இல்லாதது கவலையளிக்கிறது.இத்துறையில் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்தே அனுமதிக்கிறார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? பொறியாளர்களுக்கு தெரியாது என்று சொல்லமுடியவில்லை ஏனென்றால் மேம்பாலத்தில் மறுபக்கத்தில் உள்ள இந்த படத்தை பாருங்கள்.இந்த இடைவெளி எப்படி இருக்கவேண்டும் என்பதை அதை சரியாக கடைபிடித்திருப்பதையும் சொல்கிறது.
4 comments:
அதெல்லாம் சரியா செஞ்சாங்கன்னா நாடு எப்பவோ முன்னேறியிருக்கும் நண்பா.
வாங்க காந்தி. இது வெறும் உதாரணம் தான் இன்னும் நிறைய இருக்கும்.
முதல் அம்புக்குறியிட்ட பக்கத்திலும் இடைவெளியை சுவரிலும் தந்து அது மேல்பூச்சில் மறைந்திருக்குமோ? டவுட்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார், அப்படியிருந்திருந்தால் அங்கு ஒரு வெடிப்பு கட்டாயமாக தெரியும், அது கூட வராமல் கட்டுமானம் செய்யும் அளவுக்கு அவர்கள் வளரவில்லை. :-)
Post a Comment