Sunday, October 09, 2011

புறா

மிக மிக சீக்கிரமாக வளரக்கூடிய பறவை இனம் என்றால் மிகையில்லை. தற்காத்துக்கொள்ளக்கூடிய திறமை குறைவாக இருப்பதால் என்னவோ மிக சுலபமாக வேட்டையாடபடுகிறது.சிங்கையில் இருந்த போது இதன் எச்சம் மகிழுந்துகளிலும் கட்டிடங்களையும் பொலிவிழக்கச்செய்வதால் இதனை கட்டுப்படுத்த நஞ்சு கலந்த உணவு வைத்து சாகடித்தார்கள்.புறாவுக்கு மட்டுமில்லாமல் காக்கையும் சேர்த்தே இதன் முடிவு தான்.

சென்னையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புறா கூட்டங்களை வீட்டுக்கு பக்கத்தில் பார்த்ததில்லை ஆனால் இப்போது இதன் அட்டகாசம் தாங்க முடியவில்லை.ஜன்னல் பக்கம் உட்கார்ந்துகொண்டு வீடு வெளிப்புறங்களை அசிங்கம் செய்துவிடுகிறது அதுவும் மழை பெய்தால் அதன் மூலம் வரும் நாற்றம் இன்னும் அதன் மீது வெறுப்பை வரவழைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பில் இருந்து எங்கள் வீட்டின் கழிவறை Exhaust Fan வைக்கும் இடம் வெற்றாக இருந்ததால் அதனுள் ஒரு புறா கூடு கட்டி வாழ்ந்து வந்தது.அப்போதிலிருந்து அது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாத்தால் நாங்களும் கவலைப்படவில்லை. சமீபத்தில் அவைகளுக்கு ஏற்பட்ட இட பிரச்சனை அவர்களின் கழிவு வீட்டை நோக்கி வரவழைத்து மிக அதிகமாக நாற்றத்தை ஏற்படுத்தியது அதோடில்லாமல் ஜன்னல் குளிர்விப்பான மேல் சம தளமாக இருப்பதனால் அதன் மீதும் உட்கார்ந்து தன் தொழிலை தொடர்ந்தது.இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஏதாவது வழி இருக்கா என்று நெட்டில் தேடிய போது மேற்கிந்திய நாடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து சொல்லியிருந்தார்கள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வன்பொருள் கடைகளில் கேட்ட போது Wire Mesh ஐ காண்பித்து அதை வையுங்கள் புறா வராது என்றார்கள்.எனக்கு நம்பிக்கை இல்லாத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் யோஜனையில் ஏதும் சரிப்பட்டு வரவில்லை.போன விடுமுறையில் மனைவி Loft மேல் இருக்கும் சில சாமான்களை எடுத்துகொடுக்ச்சொன்னார்கள் அப்போது ஒரு பெட்டியில் செயறகை அலங்கார பொருட்களை செய்ய உறுதுணையாக இருக்கும் ஒரு பொய் தங்க முலாம் பூசப்பட்ட ஒரு மெல்லிய கம்பியை பார்த்ததும் ஒரு ஐடியா தோனியது.புறாவை சாகாடிக்க கூடாது ஆனால் அது ஜன்னல் விளிம்பை உபயோகிக்க கூடாது. நான் செய்தது இது தான்.ஒரு பாலிஃபார்ம் எடுத்து அதன் ஒரு பகுதியில் இருந்து U வடிவில் அந்த மெல்லிய கம்பியை வெளிப்புறம் நோக்கியவாறு செலுத்த வேண்டும். இந்த பாலிஃபார்ம் ஜன்னலுடன் ஒட்ட வைக்க இருபுறமும் ஒட்டும் திறன் கொண்ட Tape மூலம் ஒட்டவைக்க வேண்டும்- அவ்வளவு தான். சுலபமாக புரிய கீழே உள்ளது படம். கடந்த 3 நாட்களாக புறா அங்கு வருவதில்லை.

No comments: