Sunday, January 23, 2011

இது தான் தலைமை பண்பு.

இயக்குனர்களின் 40 ஆண்டு கால விழாவில் திரு ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று

உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?

யோசிக்க கூட நேரமில்லாமல் சொன்ன பதில் “ லி குவான் யு” சிங்கப்பூரின் மதியுரை அமைச்சர்.

அப்படியே கீழே உள்ள லிங்கில் போய் மேற்கொண்டு படிங்க.

http://news.asiaone.com/News/AsiaOne%2BNews/Singapore/Story/A1Story20110122-259636.html

என்ன ஒரு நிதர்சன அறிவு அதோடு தன் நாடு என்ற நிலைப்பாடு. You are simply GREAT Mr Lee Kuwan Yew.

இப்படி ஒரு தலைவர் நம் நாட்டுக்கு வேண்டிய கட்டாயம் ரொம்பவுமே கட்டாயப்படுத்த வேண்டிய நிலமையில் உள்ளோம்.

5 comments:

துளசி கோபால் said...

இப்படி ஒருதலைமையா?


கனவு காணச்சொல்லி இருக்கார் கலாம் ஐயா. (பகல்)கனவு காண வாரீர்!

sury siva said...

ரஜினியின் பதில் என்னையும் மிகவும் கவர்ந்தது. இது பற்றி நான் ஒரு பதிவு
எழுதலாமென்றிருந்தேன்.
21ம் நூற்றாண்டின் ஒரு அரசுக்கு முக்கியமான பணிகள் என்ன?
பொங்கி எழும் பிரச்னைகள் என்ன என்பதெல்லாம் ஒரு நாட்டுக்கு நாடு
மாறுபடும் எனினும் சில பணிகள் அத்தியாவசியமானவை. அவற்றில் முதற்கண்
முழுமூச்சுடன் விருப்பு, வெறுப்பு, காய்தல், உவத்தல் இன்றி, செயல்படவேண்டியது
நாட்டின் தலைவனது கடமை.
முதல் பணி, சுகாதாரம். ( நல்ல தண்ணீர்) நாட்டின் நகரங்களின் கிராமங்களின்
வீதிகள் அவவப்பொழுது பராமரிக்கப்பட்டு, சுத்தமாக இருக்கச்செய்யவேண்டும் நல்ல மருத்துவ வசதி எளிதில்
கிடைக்கவேண்டும்.
இரண்டாவது பணி, சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்துதல்.
மூன்றாவது மக்களின் கல்வியறிவை உயர்த்துதல். அதன் மூலம் அவர்க்ளுடைய‌
ஈட்டும் திறனையும், தன்னம்பிக்கையையும், சுய மரியாதையையும் வளர்த்தல்.
நான்காவது, அரசின் வரவும் செலவும் அற வழியில்
இருக்கவேண்டும்.

மக்கள் நலன் மட்டுமே ஒன்று மட்டுமே கருத்தில் கொண்டு, பாரபட்ச மன்றி,
மனு நீதிச்சோழன் போன்று மன நிலையில் செயல்படும் எந்த அரசனும் மக்கள்
மனதில் நிற்க இயலும். நமது துரதிருஷ்டம், நமது தலைவர்கள் ( எந்த மா நிலத்தையும்
குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. எல்லா மா நிலங்களுமே, மத்திய அரசு உட்பட)
குறுக்கு வழிகளிலே மக்கள் கவனங்களைத் திருப்பி, நீண்ட கால நன்மையைப்
பின்னுக்குத் தள்ளி விடுவது தான்.
அண்மையில் பீஹார் (மிகவும் பின் தங்கிய மா நிலம் ) தேர்தல் நடந்தபொழுது
மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கவேண்டும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

வடுவூர் குமார் said...

வாங்க துளசி, பகல் கனவு ஆகிவிடக்கூடாதே என்று பகலில் கனவு காண்கிறேன். என்னத்த சொல்ல!! பெரு மூச்சுதான் வருது.

வடுவூர் குமார் said...

சுப்பு ஐயா சூப்பராக சொல்லி இருக்கிறீர்கள். இன்றும் பசுமையாக இருக்கு, சிங்கையில் அமைச்சர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்ட போது அதை ஞாயப்படுத்த ”இப்படி கொடுத்தால் தான் முற்றிலும் லஞ்சம் இல்லாத மக்கள் பிரதிநிதியை” தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றார்கள்.இதெல்லாம் நம்மூருக்கு சரியாக வருமா என்று தெரியவில்லை.

Anonymous said...

அரசியல்வாதிகளின்மேல் எந்த தறவும் இல்லை அனைத்து தவறும் அரசு அதிகாரிகளிதான் செய்கிறார்கள்