Sunday, January 30, 2011

சோலிங்கர்

ஜனவரி 26 - குடியரசு தினம் மிக முக்கியமாக அது விடுமுறை நாள்.இந்தியா வந்த பிறகு இந்த சனிக்கிழமை வேலை பல காரியங்களை அலுவலக நேரத்திலேயே பார்க்கவேண்டிய கட்டாயத்துக்கும் அதோடு ஞாயிறு நாளை மிகவும் திட்டமிடவேண்டிய நிலமைக்கு தள்ளுகிறது.இச்சூழ்நிலையில் தேர்ந்தடுத்தது தான் சோலிங்கர் பயணம்.
முதல் நாள் இரவே கூகிளில் தேடிய போது அரகோணம் போய் அங்கிருந்து போவது தான் சுலபம் என்று போட்டிருந்தார்கள்.என்னுடைய புரிதல் படி திருப்பதி திருப்பத்தில் போய் அதன் வழியே அரக்கோணம் போவது தான் சரி என்ற நிலையில் இருந்தேன்.மகிழுந்து வாங்கி என்னுடைய நெடுஞ்சாலை பயணத்தை முதலில் காஞ்சிபுரம் போய் தயார்படுத்திக்கொண்ட பிறகு இது இரண்டாவது பயணம்.
கோயம்பேடு வழியாக “அண்ணா நகர்” என்று போட்டிருக்கும் திருப்பத்தில் திரும்பினால் பெங்களூர் நெடுஞ்சாலை வரும்.நம்மூர் சாலை வழிகாட்டிகள் ஆட்டோ ஓட்டுனரும் சாலை ஓரத்தில் நிற்கும் மனிதர்கள் தான்.இந்த அண்ணா நகர் திருப்பத்தில் பெங்களூர் நெடுஞ்சாலை என்று போட்டிருந்தால் எவ்வளவு சௌகரியமாக இருந்திருக்கும்!! முதல் கொடுமையை விட்டுத்தள்ளிவிட்டு திருப்பதி சாலையை நோக்கி பயணித்தோம்,ஓரளவு முன்பே தெரிந்திருந்தாலும் திருப்பதி சாலை திருப்பத்தை காண்பிக்கும் அறிவிப்பு பலகையில் பாதியை காணோம், “திருப்” மட்டுமே இருந்தது.ஏற்கனவே திருத்தணி போயிருந்த மணைவி இவ்வழியை காட்டிலும் காஞ்சிபூரம் தாண்டி வலது கை பக்கம் திரும்பினால் இன்னும் சுலபமாக இருக்கும் என்றார்,உடனே வழியை மாற்றி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வண்டியைவிட்டேன்.பாதிவழி போகும் போது அவருக்கும் சந்தேகம் வர அங்கு சாலை ஓரம் நிற்பவர்களிடம் வழி கேட்டோம். வருகிற வலது திருப்பத்தில் திரும்பி மறுபடி வரும் சாலையில் இடது பக்கம் திரும்பி போனால் அரக்கோணம் சாலை வரும் என்றார்கள். மோசமான சாலை 40 கி.மீட்டருக்கு மேல் போகவிடாமல் செய்தது.வந்த ஒரே பெரிய ஊர் சாலை ஓர டிக்கடையில் டீ சாப்பிட்ட படியே கடை முதலாளியிடம் பேச்சு கொடுத்தோம்.எங்களுக்கு சரியான வழியை சொல்லிவிட்டு திரும்ப வரும் போது பானாவரம் மற்றும் காவேரிபட்டினம் வழியாக வந்தால் நெடுஞ்சாலை வந்துவிட்டும் என்றார். மனதில் குறித்துக்கொண்டேன்.
காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 9.50 க்கு சோலிங்கர் வந்து சேர்ந்தோம்.பெரிய மலை யில் இருக்கும் நரசிம்மர் மற்றும் சின்ன மலையில் இருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிகளை தரிசித்தோம்.1305 + 400 படிகளை ஏறி இறங்கினோம்.மொத்தம் 2.30 மணி நேரம் ஆனது.





கீழே உள்ள கோவிலை ஏன் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.



கையில் கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மதியம் 1 மணிக்கு கிளம்பினோம்.வழியை விஜாரித்துக்கொண்டு பானாவரம் மற்றும் காவேரிப்பட்டினம் வழியாக நெடுஞ்சாலைக்கு 1.30 மணிக்கு வந்தோம்,அருமையான சாலை அவ்வளவு போக்கு வரத்தும் இல்லை.நெடுஞ்சாலை பிடித்த பிறகு 80 ~ 90 என்று வந்து வீட்டுக்குள் வரும் போது 3.15 PM.என்ன தான் நெடுஞ்சாலை என்றாலும் சாலை ஓரத்தில் நிற்கும் இந்த கண்டெய்னர் லாரிகள் ஒருவித சிக்னலும் கொடுக்காமல் சாலைக்குள் வந்து விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் அப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டது நல்ல வேளையாக சரியான நேரத்தில் பிரேக் போட்டு சமாளித்தேன்.
போகும் போது 99 கிமீ ஆனது வரும் போது 115 கிமீட்டர் ஆனது.

எல்லை பிரச்சனை


கைபையை சோதனை போடும் குரங்கு

8 comments:

 1. ரொம்ப நாளா மனசில் இருக்கும் இடம். இன்னும் வாய்க்கலை. வழி எல்லாம் குறிச்சு வச்சுக்கிட்டேன்.

  செக்கிங் இன்ஸ்பெக்டர் உஷாரா இருக்கார் போல:-)))))))

  ReplyDelete
 2. காவேரி பாக்கம் வழியாகவே போங்கள், சௌகரியமாக இருக்கும்.

  ReplyDelete
 3. கூகுள் மேப்ஸ் லேயா பாத்தீங்க குமார்? அது 3 பாதைகள் காட்டியது. நானாக இழுத்துவிட்டு 4 வது பாதையை கண்டு கொண்டேன். காவேரி பாக்கம் வழிதான் அது! பானாவரம் என்கிறது ரிசர்வ் பாரெஸ்ட் இல்லையா? ம்ம்ம் அது இல்லை. நான் போட்ட வழி வாலாஜா வழியாகவே.

  Sholingur, Tamil Nadu India National Highway 4/NH 4
  123 km
  1. Head toward State Highway 61/SH 61 south on Unknown road 1.2 km
  2. Continue straight onto State Highway 61/SH 61 13.1 km
  3. Turn right toward National Highway 4/NH 4 10.5 km
  4. Sharp left at National Highway 4/NH 4 Pass by Bharat Petroleum (on the right in 46.5 km) 90.0 km
  5. Slight left at Bypass Rd/NH 4 Continue to follow NH 4 Pass by Poonamalle Telephone Exchange (on the left) 7.9 km
  6. Turn right at Mettukuppam Rd 150 m
  7. Take the 3rd right to stay on Mettukuppam Rd 280 m
  Mettukuppam Rd

  ReplyDelete
 4. எல்லைப்பிரச்சினை என்னது?

  ReplyDelete
 5. இம்மாதிரி சுற்றுலா தளங்களை பிரபலபடுத்த கண்ணுக்கு தெரியும் வகையில் பெரிதாக போர்டு வைக்கவேண்டும் அதோடு கூட சுமார் 300 மீட்டர் முன்னதாகவாது இருந்தால் வண்டியில் சமிக்கை போட்டு திருமப வசதியாக இருக்கும்.
  கோயம்பேடில் இருந்து போக 2.15 மணி நேரம் தான் ஆகிறது.
  பானாவரம் ரிஸர்வ்ட் பாரெஸ்ட் தான் இருந்தாலும் அப்படி ஒன்றும் தெரியவில்லை.விவசாயம் தான் நடந்துகொண்டிருக்கு.

  ReplyDelete
 6. எல்லை பிரச்சனை படத்தை அப்படியே ஜூம் பண்ணி பாருங்க இரண்டு குரங்குகள் தங்கள் எல்லை பிரச்சனைக்காக சண்டை போடுவதை...

  ReplyDelete
 7. நானும் போன மாதம் போய் வந்தேன்,மிக அருமையான கோவில் ,பராமரிப்பு தான் இன்னும் தேவை,வரும் போது திருத்தணியும் கவர் செய்திருக்கலாமே?

  ReplyDelete
 8. அட! அப்படி கூட செய்திருக்கலாமே!! அடுத்த முறை பார்ப்போம்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?