Friday, September 10, 2010

புதிய தொழிற்நுட்பம்-Hollw Core Slab.

போன பதிவில் ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்களை பற்றிய விளகங்களை சொல்கிறேன் சொல்லியிருந்தேன்.

மிக அதிக உயரமான கட்டிடமே ஐந்து மாடி தான்.ஒரு ஹோட்டல்,விளையாட்டாளர்கள் தங்கும் இடம்,பத்திரிக்கையாளர்கள் இருக்கும் இடம் மற்றொரு கட்டிடத்தில் உணவகம் மற்றும் கடைத்தொகுதி இருக்கிறது.வரும் நவம்பரில் விளையாட்டுகள் தொடங்கக்கூடும்.

விளையாட்டாளர்கள் தங்கும் கட்டிடத்தை தான் முதலில் பார்த்தேன்,நண்பர் அதில் செய்யப்பட்ட வேலைகளும் அதை எங்கிருந்து வரவழைத்தார்கள் அதன் சாதக பாதகங்களை விவரித்துக்கொண்டு இருக்கும் போது மேற் கூரையை பார்த்தேன்.அதன் Finishing அருமையாக இருக்கிறதே என்றேன்.
ஓ! அதுவா? இது தான் Hollow Core Slab என்றார்.இதை துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி போட்டு விற்கிறார்கள் என்றார்.ஆச்சரியமாக இருந்தது.நான் பார்த்த கூரை சுமார் 8.50 மீட்டர் நீளம்.இவ்வளவு Span இருக்கும் ஒரு இடத்தில் கான்கிரீட் கூரை போடனும் என்றால் நடுவில் ஒரு Beam வேண்டும் இல்லையென்றால் சிலாப் அதிக கணம் உள்ளதாக போடனும்.அதிக கணம் என்றால் அதற்கு தகுந்த கம்பி போடனும்.எந்த பொறியாளரும் அந்த அளவுக்கு போகமாட்டார்கள் ஏனென்றால் செலவு பிடிக்கக்கூடியது அதோடில்லாமல் அது சரியான கட்டுமான வேலையாக இருக்காது.
இவ்வளவு பெரிய Span யில் நடுவே ஒரு Beam கூட இல்லாமல் இருக்கும் இந்த Slab கணம் எவ்வளவு என்று கேட்டேன், அதற்கு 200 மி.மீட்டர் தான் என்றார் அதோடு இதன் உள்ளே வெறும் 8 அல்லது 9 கம்பிகள் மட்டுமே இருக்கிறது என்ற குண்டையும் போட்டார்.என்னால் நம்பவே முடியவில்லை. Slab அளவு 8.50 x1.2x0.2 மீட்டர், இதற்கு கம்பி வெறும் 9 தான்.படத்தை பாருங்கள்.தூணின் இரு பக்கத்திலும் Beam போட்டுவிட்டு அதன் மேல் இந்த Slab ஐ வைத்தால் முடிந்தது கூரை.

சில படங்கள் இணையத்தில் சுட்டவை..நன்றி: கான்கிரீட் டெக்.நன்றி:பிரிகாஸ்ட் ஒர்க்ஸ்இதன் அனுகூலங்கள்.

1.Building கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்துவிடலாம்.(Parellel Working), இதனால் நேரம் மிச்சமாகும்.
2.அருமையான Finishing அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை.
3.கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற Bar Bending வேலை இருக்காது.
4.வேண்டிய அளவுக்கு செய்துகொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும்.
5.Erection அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம் அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்கமுடியும்.
6.Form Work அல்லது செண்டரிங் என்ற வேலையே கிடையாது.
7.சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் Thermal Insulation கிடைக்கும்.
இன்னும் நிறைய இருக்கு.

பிரதிகூலங்கள்
அனுகூலங்கள் என்று இருந்தால் அதற்கு பிரதி என்று ஒன்று இருக்கும் அல்லவா!
1.இதை மேல் தூக்கிவைக்க பாரம் தூக்கி வேணும்.சென்னை மாதிரி குருகிய சாலையில் பாரம் தூக்கி நிறுத்த முடியாது.Tower Crane மூலம் இவ்வவளவு பாரம் தூக்க முடியுமா என்று தெரியவில்லை.
2.பெரிய பெரிய தொழிற்சாலைகளில் கடைசி நேர வேலையாக சில சமயம் துளை போட வேண்டிவரும் அது இதில் கஷ்டம்.
3.Slab களுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை.
4.Slab அளவுகளை நினைத்த நேரத்துக்கு மாற்ற முடியாது.
இன்னும் இருக்கலாம் அவ்விடத்தில் வேலை செய்தால் புரிபடும்.

கீழே உள்ள படங்கள்...முதலில் உள்ள படத்தில் சிகப்பு வட்டம் போட்டு காட்டியிருப்பது தான் கம்பியின் அளவு 4~6 MM இருக்கக்கூடும்.மற்றொரு படம் அந்த சைட்டில் எடுத்தது.

இதில் சிலாபின் Finish ஐ பார்க்கலாம்,இதில் மேற்பூச்சு இல்லை.அதோடு மின்சார பைப்புகள் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி போகிறது என்றும் பார்க்கலாம்.இதன் மூலம் எனக்கும்/உங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்துகொள்ள உதவிய என் நண்பனுக்கு நன்றி.

2 comments:

  1. குமார் எப்போ இதெல்லாம் நம்ம நாட்டுக்கு வரும்? இப்பல்லாம் லேபர் வெச்ச்சு கட்டுப்படியாறதில்லை. நல்ல கூலி கொடுக்க தயாரானாலும் ஆள் கிடைக்கறது சிரமம். ஒரேயடியா ஊருக்கு வரதானால் இப்படி ஏதேனும் தொ.நு கொண்டு வந்து புகுத்துங்க.

    ReplyDelete
  2. வாங்க திவா,ஊருக்கு திரும்பியாச்சு இனிமேல் மேல் நாட்டு வேலை இருக்காது என்று நினைக்கிறேன்.
    இத்தொழிற்நுட்பம் இங்கும் வந்துவிட்டது போல் தெரிகிறது.சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழியில் ஒரு மேம்பாலம்(Metro) வருகிறது... அன்னாந்து பார்த்தால் இத்தொழிற்நுட்பம் உபயோகித்து இரண்டு தூண்களுக்கு இடையே சிலாப் போட்டிருக்கார்கள்.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?