Thursday, September 02, 2010

Footing- அஸ்திவாரம்

அஸ்திவாரங்களில் பல வகைகள் இருந்தாலும் பல கட்டிடங்கள் இந்த மாதிரி Footing போட்டு அதன் மீது தூண் எழுப்பி தான் செய்கிறார்கள்.நாங்கள் இப்போது இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு மசூதியை இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள் அவ்வப்போது மெது நடை போகும் போது எட்டிப்பார்த்துவிட்டு போவேன் அதிலிருந்து சில படங்கள் கீழே.

கான்கிரீட்டை பாதுகாக்க ஏதோ கருப்பு கலர் பெய்ண்ட் அடித்து இருக்கிறார்கள்.படத்தின் மீது சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்தால் இன்னும் பல விபரங்கள் தெரியும்.

கீழே உள்ள படம் துபாயில் எடுத்தது,இந்த மாதிரி Footing தரை முழுவதும் வருமாறு இருக்கும் அதன் மீது தூண்கள் வரும்.இப்படி Footing போடுவதால் அதையே கார் நிறுத்தும் இடமாகவும் உபயோகிக்க முடியும்.இப்படம் இணையத்தில் கிடைத்தது.என்னை பொருத்தவரை மோசமான உதாரணம்.தூண்,அஸ்திவாரத்தின் நடுவில் இல்லாதது ஒரு பெரும் குறையல்ல ஆனால் இதில் மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.மசூதியின் அஸ்திவாரம்.இன்னும் அருகே..

12 comments:

 1. \மண்ணை தோண்டுவதற்கு பதில் தோண்டிய மண்ணுக்காக அஸ்திவாரம் போடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.//

  பார்வைக்கு திடமற்ற மண்ணாக தோன்றுகிறது என சொல்ல வருகிறீர்களா? அல்லது மண்ணுக்குள் இன்னும் ஒரு அடியாவது அந்த சதுரபரப்பு இருக்காது என சொல்கிறீர்களா ?

  ReplyDelete
 2. இல்லை நிகழ்காலம்,தோண்டிய மண் சதுரம்/செவ்வகம் கொஞ்சம் தள்ளிப்போய்விட்டது அதற்கு தகுந்த மாதிரி அஸ்திவாரத்தை போட்டு,தூணை மாத்திரம் தேவையான இடத்தில் வைத்துவிட்டார்கள்.தூண் பீமை தாங்கவேண்டும் என்பதால் அதன் இடத்தை மாற்றமுடியாது.Unnecessary ex centric load to the footing.

  ReplyDelete
 3. இடப்பற்றாக்குறை அல்லது போதிய இடம்விட இயலாமல் மூலைகளில் வரும்போது சில இடங்களில் இந்த மாதிரி அமைப்பதையும் பார்த்திருக்கிறேன்....

  ReplyDelete
 4. இதுக்குப்பெயர்தான் ஃபுட்டிங்கா?

  பெஸண்ட் நகரில் நாம் இருந்தப்பப் பக்கத்துலே நிலத்துலே பெரிய பில்டிங் கட்ட ஆரம்பிச்சு இப்படித்தான் அங்கங்கே போட்டுக்கிட்டு இருந்தாங்க. மண்ணை இங்கே மாத்தி அங்கே அங்கே மாத்தி இங்கேன்னு வாரிப்போட்டு ஒருவழியா ஏகப்பட்டது 22 என்னமோ போட்டாங்க. படம் எடுத்து வச்சுருக்கேன்:)

  ReplyDelete
 5. வாங்க துளசி
  ha!ha!
  இடப்பற்றாகுறையாக இருக்கும்.மண்ணை வெளியில் போட்டு திரும்ப போட்டு நிரப்ப கொண்டுவரனும் என்பதால் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள்...என்ன அதற்குள் மழை வராமல் இருக்கனும்.

  ReplyDelete
 6. குமார்,
  மிக நல்ல பதிவு,
  மேலே உள்ளது ஸ்ட்ரிப் ராஃப்ட் முறை தானே?
  இது தான் இங்கே அதிகம் பின்பற்றப்படுகிறது,இதன் அடியில் தாங்குமாந்த்துக்காக,பைல் ஃபவுண்டேஷனும் போடப்படும்.

  ===
  இங்கே சப் ஸ்ட்ரக்ட்சர்கள் செய்வதற்கே அதிக கவனமும் நாட்களும் எடுத்துக்கொள்கின்றனர்.கறுப்பு பெயிண்ட் வாட்டர் ப்ரூஃபிங்,இது போல நம்மூரில் மால்களில்,ஐடி பார்க்களில் செய்கின்றனர்.ரேட் எங்கேயோ போகும்,இங்கே அதிகம் பயப்படுவது மழைக்கும்,ஓதத்துக்கும் தான் என்றால் மிகையில்லை,ஃபவுண்டேஷனிலும்,ரூஃபிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அப்படி இருக்கும்,இல்லையென்றால் கட்டி முடித்து ஹாண்டோவர் செய்தபின் காண்டராக்டரும் ப்ராஜக் மேனேஜரும் தூங்கவே முடியாது.அப்படி ஒரு நெருக்குதல் இருக்கும் என படித்ஹ்டுள்ளேன்.,;)

  ReplyDelete
 7. geethappriyan
  water proofing for column and footing? quite strange!!
  Thanks for your comment.

  ReplyDelete
 8. //கறுப்பு பெயிண்ட் வாட்டர் ப்ரூஃபிங்//
  நாங்களும் இதுபோல மொட்டை மாடியில் ஏற்பட்ட விரிசலுக்காக வாட்டர் ப்ரூஃபிங் ஒரு காலத்தில் அடித்த நினைவு உண்டு...
  ஆனால், நீங்கள் சொல்லுவதுபோல், அஸ்திவாரத்திற்கு...? ஸ்ட்ரேஞ்ச்!
  மழை வந்தால் கான்க்ரீட்டுக்கு நல்லதுதானே!

  ReplyDelete
 9. வாங்க‌ ஜீவா,கான்கிரீட்டுக்கு கூட‌ முத‌ல் ஒரு வார‌ம் தான் த‌ண்ணீர் மிக‌ அவ‌சிய‌ம்,தொட‌ர்ந்து த‌ண்ணீர் இருந்தால் அத‌ற்கு என்று த‌னி கான்கிரீட் இருக்கு.ம‌ஸ்க‌ட்டில் எப்போதாவ‌து தான் ம‌ழை பெய்யும் அதுவும் சில‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டுமே கொஞ்ச‌ம் தேங்கும் ம‌ற்ற‌ப‌டி இது காஞ்ச‌ பூமி தான்.
  இங்கு அந்த‌ பெயிண்ட் அடிக்கிறார்க‌ள் என்றால் யோசிக்க‌வேண்டியிருக்கு.

  ReplyDelete
 10. அஸ்திவாரத்திலிருந்து ஆண்டெனா வரை வரைபடமாக்கி தொடங்கும் இந்தக் கட்டிடக்கலை கொஞ்சம் அற்புதமான கலைதான்.

  ReplyDelete
 11. Anonymous3:54 PM

  thanks

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?