Thursday, April 29, 2010

வாழ்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் பல தொடக்க நிலை பள்ளிகளில் படிக்கும்(5ம் வகுப்பு) மாணவர்களுக்கு 2வது பாட தமிழ் படிக்க தெரியவில்லை என்ற செய்தி போட்டிருந்தார்கள்,இதற்கான ஆதார காரணம் ஒரு பக்கம் போதிக்கும் ஆசிரியர்களை நோக்கி விரல் நீட்டினாலும் பெற்றோர்களில் பங்கு இதில் இல்லாமல் இல்லை.நிலமை இப்படியே போனால் தமிழை கீழே உள்ள சுவற்றில் உள்ள மாதிரி தான் காணநேரிடுமோ என்று தோனுகிறது.

இப்படம் நேற்று ஒரு வீட்டு விஷேத்துக்கு போன போது சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் சுவரில் யாரோ எழுதி பார்த்திருக்கிறார்கள்.


4 comments:

நாடோடி said...

அருமையான‌ விள‌க்க‌ம்.... எட்டாத‌ இட‌த்தில்...

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி நாடோடி.

sury siva said...

தமிழகத்திலே திறனுக்குத் தகுந்த வேலை கிடைக்காதபொழுது,
திரை கடலோடியும் திரவியம் தேடு என்னும் மூதுரைக்கேற்ப,
பிற நாடுகளுக்குச் சென்று தமது தகுதிக்கேற்ப ஊழியம் செய்து
ஊதியம் பெறும் நிலையில், தமது மொழி மற்றும் மண்ணின் மரபு, பண்புகளிலிருந்தும்
நாம், நமது சுற்றத்தார் வெகுவாக விலகிச்செல்லும் நிலை உள்ளதென்பது வேதனைக்குரியதே.
வெளி நாடுகளில் பிறந்த குழந்தைகள் கணினி மூலமாக தமிழை நன்கு கற்க இயலும். ஆயினும் கற்றபின், தமது குழந்தைகளுடன் தமிழிலேயே பேசுவோம் என்ற உறுதி காணப்படுவது இல்லை. நான் இங்கு பல குடும்பங்களில்
பார்க்கும்பொழுது அவரவர் தமது தாய்மொழியிலேயே அளவளாவும் நிலையில் தமிழ் மக்கள் மட்டும் ஆங்கிலத்தில்
பேசிக்கொள்கின்றனர். நீங்கள் தமிழ் நாடா என்று கேட்டாலும் எஸ் என்று பதிலளித்துப் பின் ஆங்கிலத்திலேயே
பேச்சினைத் தொடர்கிறார்கள்.

சுப்பு ரத்தினம்.
(தற்சமயம்) தோஹா.

வடுவூர் குமார் said...

சூரி ஐயா
நீங்கள் சொல்லிய நிலமை உள்நாட்டிலேயே பல குடும்பங்களில் வந்துவிட்டது.பேசப்படாத மொழி நிலைப்பதில்லை.