Thursday, March 25, 2010

கம்பியின் நிலை.

கட்டுமானத்துறையில் கம்பியின் பங்கு என்பது இன்றியமையாதது.பல கட்டுமானங்கள் நிமிர்ந்து பல காலம் நிட்கவும் அதே சமயத்தில் முறையாக உபயோகப்படுத்தாததால் சரிந்து விழுவதும் அடிக்கடி நிகழ்கின்ற நிகழ்வுகள்.அதென்ன கம்பியை சரியாக பயண்படுத்தாத முறை??

நிறையவே இருக்கு,இடம் சூழல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொன்டு கான்கிரீட்டில் உள்ளிருக்கும் கம்பி வெளிப்புறத்தில் இருந்து எவ்வளவு தூரம் இருக்கனும் என்பதை பொறியாளர்களும் தரநிர்ணய கழகமும் சொலியிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு தஞ்சாவூரில் ஒரு கட்டிடம் என்றால் அதன் பீமின்(Beam) உள்ளே போடப்படும் கம்பி வெளியில் இருந்து 40mm இருக்கனும் அதுவே நாகப்பட்டினத்தில் கட்டப்படும் பீமில் 50 mm இருக்கனும்.உப்புக்காற்றின் தாக்கத்தை முன்னிட்டு இதை முடிவு செய்துள்ளார்கள்.முடிவு செய்வது எல்லாம் சுலபம் தான் ஆனால் பீம் கம்பி கட்டி கான்கிரீட் போடும் போது அது சரியான நிலையில் இருக்கிறதா என்பதை மேற்பார்வை செய்பவர்கள் கையில் தான் உள்ளது.என்ன தான் மேற்பார்வையாளர் பக்கத்தில் இருந்து கான்கிரீட் போட்டாலும் வேலை செய்பவர்களும் மற்றும் வேறு சில காரணங்களாலும் கம்பி அது உள்ள நிலையில் இருந்து விலக வழியிருக்கு.இந்த மாதிரி வழிகளை பல முறையில் அடைக்கலாம் என்றாலும் அது முழு பயணை பெரும்பாலான சமயங்களில் கொடுப்பதில்லை.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.

30 ஆண்டு பழமையான ஒரு கட்டிடத்தின் பகுதிகள் முக்கியமாக கூறையின் கீழ் பகுதி.





இங்கு என்ன நடந்துள்ளது? ஆதாவது கான்கிரீட்டின் அடிப்பகுதிக்கும் கம்பிக்கும் தேவையான தூரத்தை விடவில்லை.இதை ஒழுங்குபடுத்த கான்கிரீட் போடும் போது கம்பியின் கீழ் Cover Block என்று சொல்லப்படுகிற சிறிய கான்கிரீட் துண்டைவைத்து அதை கம்பியுடன் கட்டிவிடுவார்கள்,அதனால் கம்பி தன் நிலையில் இருக்கும்.இப்படி சொல்வது எளிதென்றாலும் கான்கிரீட் போடும் இடம் ஒரு போர்களம் அங்கு இதெயெல்லாம் தெளிவாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது.ஒன்றிருந்தால் போதும் என்ற இடத்தில் 3 வைப்பார்கள்.மேலே உள்ள படத்தில் இந்த மாதிரி Block இல்லாததால் கம்பி கீழே உள்ள சாரத்துடன் ஒட்டிக்கொண்டுவிட்டது,நாள் ஆக ஆக வெளிப்புற காற்றில் உள்ள ஈரப்பதம் கான்கிரீட் உள்ளோ போனதால் கம்பியும் ஆக்ஜிஜனும் சேர்ந்து வேதியல் மாற்றம் அடைய கம்பி துறு பிடித்து அதன் அளவில் விரிவடைய ஆரம்பித்திருக்கு அதன் மூலம் கீழிருக்கும் மெலிதான கான்கிரீட்டை தள்ள ஆரம்பித்திருக்கு.வலுவிழிந்திருக்கும் கான்கிரீட் கீழே விழுந்துவிட்டது.

சரி,இப்போது என்ன பண்ணுவது?30 வருடங்களுக்கு முன்பு போய் யாரையெல்லாம் காரணகர்தாவாக முடியும்? அதற்கு ஆகும் செலவுக்கு தேவையான மராமத்து வேலைகளை பார்த்து குடிபுகும் வழியை பார்பது தான் உசிதம்.மராமத்து பார்த்தால் சரியாகிவிடுமா?

இந்த கேள்விக்கு சரியான Test மூலமும் தேர்ந்த பொறியாளருமே விடை கொடுக்கமுடியும்.என்னென்ன சோதனை செய்வார்கள் அதை எப்படி ஒரு பொறியாளர் அனுகுவார் என்பன எனக்கு அவ்வளவாக தெரியாது அதனால் எப்படி இதை ரிப்பேர் செய்தார்கள் என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.

முதலில் இக்கம்பிகளை சுத்தப்படுத்துவார்கள் அதன் பிறகு ஒருவித ரசாயன கலவையை கொண்டு அதன் மீது பூசுவார்கள்.இது ஒரு வகை பெயிண்ட்.அதன் பிறகு அது காயும் வரை காத்திருந்து அதன் மீது கீழ்கண்ட படத்தில் உள்ள சிமிண்ட் கலவையை பூசுவார்கள்.இதன் மூலம் ஒன்று துறுபிடிப்பதை தவிர்த்தல் அடுத்து அக்கம்பிகள் வெளிக்காற்றுடன் உள்ள தொடர்பை கட்டுப்படுத்துதல் என்ற இருவித பணிகளை செய்கிறது.

4 comments:

கண்ணா.. said...

விளக்கங்கள் அருமை

வடுவூர் குமார் said...

நன்றி கண்ணா.

Anonymous said...

Thanks. I will contact you when i plan my house.

வடுவூர் குமார் said...

என்னால் முடிந்த அளவு உதவுகிறேன் சாய்தாசன்.