Friday, March 05, 2010

சுத்தமான காத்து

ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்தனியே விதிமுறைகள்,வேலை செய்ய வந்துவிட்டால் வேறு வழியின்றி அனுசரித்து தான் போக வேண்டும்.இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இங்கு இணைய இணைப்புக்கு (Nawras) 48 மணி நேரத்துக்கு இரண்டு ரியால் வசூலிக்கிறார்கள்.மிக அதிகபட்சமாக நீங்கள் 2 ஜிபி வரை உபயோகிக்கலாம்.இந்த இணைய இணைப்பில் பலான/அனுமதிகப்படாத பக்கங்கள் என்று அவர்கள் நிர்ணயத்திர்கிற பக்கங்களை பார்க்க முடியாது.வேறு வழி மூலம் பார்க்கலாம் என்றாலும் விதியை அனுசரிப்பது நல்லது என்பதால் அந்த வழி முறையை சொல்லவில்லை.சரி,பிள்ளைகளை காப்பாற்ற தேவையான வழி என்பதால் அதில் குறை காணமுடியாது ஆனால் இந்த VOIP என்று சொல்லப்படுகிற இணையம் மூலம் தொலைப்பேசி முறையை மூடி வைத்துள்ளார்கள்.இது UAE யிலும் நடைமுறையில் உள்ளது.இதை தடை செய்ய பிள்ளையார் சுழி போட்டது Skype என்று ஓரிடத்தில் படித்தேன் ஆதாவது இந்த மென்பொருள் மூலம் செலுத்தப்படும் பாக்கெட்கள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லாத்தாலும் மற்றும் கட்டமைப்பை சேதப்படுத்தும் முறையில் இருப்பதால் இதை தடை செய்துவிட்டார்கள் என்று.கணினியில் ஒன்று போனால் என்ன அதே போல் 100 இருக்கே என்ன செய்வது என்று யோசித்து எல்லாவற்றையும் மூடிவிட்டார்கள்.பக்கத்து நாடுகளில் உள்ள முறையை அப்படியே காப்பி அடிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

ஆமாம் இப்படி VOIP ஐ மூடுவதால் அப்படி என்ன பெரிதாக சாதிக்கப்போகிறார்கள் என்று முதலில் தோனினாலும் இதன் உள்ள இருக்கும் சூட்சமம் அதன் வீரியம் அதனால் இங்குள்ள தொலை தொடர்பு துறை சந்திக்க நேரிடும் இழப்புகள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கிறது.இந்த காரணத்தையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம் அதைவிட்டு இணையத்துக்கு பணம் கட்டிய பிறது கணினி - கணினி தொடர்பில் செய்யப்படும் குரலுக்கும் ஆப்பு வைக்கிறார்கள்.உதாரணமாக MSN,Yahoo மற்றும் Gtalk மூலம் நண்பர்களுக்கிடையே செய்யப்படும் ஆடியோவையும் அவ்வப்போது மூடிவிடுகிறர்கள்.

வீட்டில் திறந்தால் 2 ரியால் கொடுக்கவேண்டி வரும் என்று Internet Cafe க்கு போன வாரம் போனேன்.35 நிமிடங்களாக Hello வை தவிர ஒன்றும் பேசவில்லை,தெண்டமே என்று 300 பைசா கொடுத்துவிட்டு வந்தேன்.நேற்று காலை வீட்டில் இருந்து மனைவியுடன் பேச முற்படும் போதும் இதே பிரச்சனை ஆனால் நகர்படத்தில் பிரச்சனையில்லை.நகர்படம் போக வர இருக்கும் பேண்ட் விட்த் ஆடியோவுக்கு இல்லை என்றால் என்ன அர்த்தம்?அ தை மூடியிருக்கிறார்கள் என்றே தெரிகிறது.அதன் பிறகு கூகிளில் தேடிய போது மேற்சொன்ன பல விபரங்கள் வந்துவிழுந்தது.இப்படி கெடுபிடி இருப்பதாலே பல Internet cafe யில் மலிவு விலையில் தொலைபேசி அழைப்புகளை கள்ளத்தனமாக செய்கிறார்கள்.

காலையில் செய்ய முடியாத குரல் வழி பேச்சு மாலையில் கிடைத்தது - என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

வழக்கம் போல் மாலையில் பக்கத்தில் இருக்கும் கடற்கரைக்கு மெது நடை போகும் போது சில அருமையான காட்சிகள் காண கிடைத்தது அது அப்படியே கீழே போட்டிருக்கேன்.

சூரியன் தண்ணீரை தொடும் வரை காணக்கிடைத்தால் காற்றும் வளி மண்டலமும் தூசு இல்லாமல் இருக்கு என்று வைத்துக்கோள்ளலாம்.









கடைசி படத்தில் நம்மக்கள் மூவர் நின்று ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.படத்தை பெரிதாக்கி பார்க்க அதன் மீது சொடுக்குங்கள்.
அனைத்தும் சோனி எரிக்ஸன் w880i எடுத்தது.

13 comments:

Unknown said...

போட்டோகளை பார்த்தால் இப்ப செல்போன் நல்லா வேலை செய்யுது போல?

வடுவூர் குமார் said...

அப்படித்தான் இப்போது தெரிகிறது இது இன்னும் எத்தனை நாட்களுக்கோ!

Unknown said...

போட்டோகளை பார்த்தால் இப்ப செல்போன் நல்லா வேலை செய்யுது போல?

ஜெய்லானி said...

//இந்த VOIP என்று சொல்லப்படுகிற இணையம் மூலம் தொலைப்பேசி முறையை மூடி வைத்துள்ளார்கள்.இது UAE யிலும் நடைமுறையில் உள்ளது///

35 dhaக்கு ஏழு மணிநேரம் பேசலாம் .இப்பவும் இருக்கு சார்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜெய்லானி,அப்படியா? இதுவரை கேள்விப்பட்டதில்லை.சில நாட்களுக்கு முன்பு கூட கல்ப் நியீஸில் VOIP முறையை அனுமதிக்கப்போவதாக செய்தி வெளியிட்டிருந்தார்களே!

கண்ணா.. said...

ஆமாம் இங்கு துபாயில் 70 திர்ஹாம்ஸ்க்கு 19 அவர்ஸ் கூட கிடைக்குது. ஆனால் எல்லாம் எத்தனை நாளைக்குன்னு தெரியாது.. கிடைக்குற வரை யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.

ஓமனில் உள்ள என் நண்பனும் உங்களை போன்றுதான் கூறினான்.

வடுவூர் குமார் said...

வாங்க‌ க‌ண்ணா
துபாயில் இருந்த‌ போது இது கூட‌ தெரியாம‌ போச்சே!
இங்கும் ப‌ல‌ வ‌ழிக‌ள் இருக்கு,ப‌ல‌ர் அதைத்தான் மாற்று வ‌ழியாக‌ உப‌யோகித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.சில‌ ச‌மய‌ம் இப்ப‌டி செய்ப‌வ‌ர்க‌ளை மோப்ப‌ம் பிடித்து ஊருக்கு போகும் ச‌மய‌ம் வ‌ட்டியும் முத‌லுமாக‌ வ‌சூலிப்ப‌தாக‌ வ‌த‌ந்தி.

ஹுஸைனம்மா said...

இன்னும் இவ்ளோ சிரமமா ஓமன்ல நெட் கனெக்‌ஷன்?

வடுவூர் குமார் said...

ஆமாங்க‌ ஹுசைன‌ம்மா அதுவும் ப‌ல‌த‌ர‌ க‌ட்டுப்பாடுக‌ளின் கீழ் வ‌ழ‌ங்குகிறார்க‌ள்.மீறுகிற‌ வ‌ழியும் இருக்கு.

பத்மநாபன் said...

2 ரியாலுக்கு 48 மணி நேரம் கிடைக்கும் என்றிருந்தேன் .. இதில் 2 ஜிபி வரையறை வேறு உண்டா ? சுதாரிக்க வேண்டும் .
கடலோடு சூரியக்காட்சிகள் அருமை ... '' ஓமனின் ஆஸ்தான தமிழ் பதிவர் '' பட்டம் உங்களுக்கு தரவேண்டும் ..அவ்வப்பொழுது
ஓமன் குறிப்பாக மஸ்கட் படங்களை வெளியிடுவதற்காக..

வடுவூர் குமார் said...

வாங்க‌ ப‌த்ம‌நாப‌ன்
ப‌ட்ட‌மா? அதெல்லாம் என‌க்கு வேண்டாங்க‌. :‍)
கைக்கு அட‌க்க‌மாக‌ அலைபேசி கேமிராவுட‌ன் இருப்ப‌த‌ன் சௌக‌ரிய‌ம் இது தான்.

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்... படங்கள் அருமைங்க பாராட்டுகள் நண்பா

வடுவூர் குமார் said...

ந‌ன்றி ஞான‌சேக‌ர‌ன்.