Friday, October 23, 2009

எனக்கு தான் முதல் Lane.

போன வாரம் மகிழுந்துவில் வேலூர் வரை போய் திரும்பிய போது விரைவுச்சாலையில் வித்தியாசமான ஒன்றை காண நேர்ந்தது.பல நாடுகளில் விரைவாக போக கூடிய வாகனங்கள் முதல் லேனில் பயணிக்கும் மற்றவை அதற்கடுத்த லேனில் பயணிக்கும்.நம்மூரில் அதுவும் தமிழ் நாட்டில் மணல் மற்றும் அதிக எடையுள்ள மற்றும் வேகம் குறைவாக பயணிக்க வேண்டிய வண்டிகள் முதல் லேனிலும் மற்றவை அதற்கடுத்தடுத்த லேன்களிலும் பயணிக்கின்றன.படம் பார்க்க.





ஒரு விதத்தில் இம்முறை பாதுகாப்பானது (சாலை ஓரத்தில் பயணிக்கும் மிதி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள் அடிவாங்காமல் தப்பிக்கும்) என்றாலும் ஏதேனும் வாகனம் தறிகெட்டு போனால் முழு சாலையும் அடைபடும் சாத்தியம் அதிகமாகவே இருக்கும்.

எந்த வகை வாகனம் எவ்விடத்தில் பயணிக்கனும் என்ற விதிமுறை நம்மூரில் கிடையாதா? அல்லது அவையெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருப்பதற்காக உருவாக்கப்பட்டவையா?

6 comments:

நிகழ்காலத்தில்... said...

120 கிமீ வேகத்தில் செல்லும் காரும், 30 கிமீ வேகத்தில் செல்லும் ஆட்டோவும் ஒரே லேனில்தான் கோவை ரோடில் :))

வடுவூர் குமார் said...

வாங்க நிகழ்காலம்,கோவையில் ஒரே லேன் தான் இருக்கா!! அப்படியென்றால் இன்னும் கொடுமை தான்.

துளசி கோபால் said...

Slowவாப் போறது லெஃப்ட் லேன் & ஃபாஸ்டா( ஸ்பீட் லிமிட் கடைப்பிடிக்கணும்) right lane போகணும் என்பதுதானே போக்குவரத்து விதி.(அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட லேன் இருந்தால்)

இங்கே சென்னையில் ஓவர்டேக் பண்ண லெஃப்ட் லே இருந்து வர்றாங்க.

ஸீப்ரா க்ராஸிங்லே நிறுத்தாம இன்னும் வேகமாப் போறாங்க. ரெட் லைட் முடியும்முன்பே வண்டி சீறிப்பாயுது(-:

வடுவூர் குமார் said...

ஸீப்ரா கிராசிங்கில் நின்னா நீங்க தான் அடி வாங்கனும் (பின்னால் இருந்து வரும் வண்டியின் மூலம்).
சாலை தான் இங்கு Training Ground.

நாஸியா said...

ஐயோ ஐயோ.. லேன் அ பத்தி எல்லாம் நம்ம நாட்டுல குறை சொல்றதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகும் ... அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமில்ல இது.. விளங்கிச்சா?

வடுவூர் குமார் said...

வாங்க நாஸியா,சரி தான் ஆனா வண்டி ஓட்டும் போது தான் பயமாக இருக்கிறது அதுவும் வெளி நாடுகளில் வண்டி ஓட்டிவிட்டு இங்கு ஓட்டுவதற்கு கொஞ்ச காலமாகும்.