Thursday, October 01, 2009

சிவன் கோவில் படங்கள்.

புது வீட்டுக்கு போக இன்னும் சாவி கிடைக்காமல் ஆர்டர் செய்யத வீட்டு சாமான்களை உள்ளே கொண்டு போக முடியவில்லை.பல கடைகள் ஏறி இறங்கி விலை விஜாரித்து எது நமக்கு சரிப்பட்டு வரும் என்று பொழுது போக்கிக்கொண்டிருக்கிறோம்.

மகிழுந்து நடத்துனரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மஸ்கட்டிலும் ஒரு ஹிந்து கோவில் இருக்கு என்ற விபரம் சொன்னார்,ஆச்சரியமாக இருந்தது.அது என்ன கோவில் என்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை.மஸ்கட்டில் பார்க்க இன்னொரு இடம் கிடைச்சிருக்கு என்ற சந்தோசத்துடன் அதற்கு முன்னேற்பாடு செய்தோம்.

பழைய மஸ்கட் பக்கத்தில் உள்ளது இந்த கோவில். வாகனங்கள் மிக மெதுவாகவே போக முடிந்தது.நாங்கள் போன அன்று சனி பெயர்ச்சியாம் அதனால் பல வாகனங்கள் குருகிய சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை.வட இந்திய ஸ்டைலில் கோவில்கள் இருந்தன.



இரண்டு சன்னதிகளிலும் சிவன் & பார்வதி படங்களுடன் பளிங்கு சிலைகள்.அர்சனை செய்பவர் உள்ளிருந்து எல்லோருக்கும் “பூ” பிரசாதமாக கொடுத்துக்கொண்டிருந்தார்.காளி சன்னதியில் கூட்டம் வழிந்துகொண்டிருந்தது.



திடிரென்று ஒரு இஸ்லாமியர் சன்னதிக்குள் ஹிந்தியில் யாரோ வாகனம் வழியை மறித்துக்கொண்டு இருப்பதாகவும் எடுக்குமாறும் கத்திச்சொன்னர்.இப்படி அவர் வருவதை அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நம்மவரும் வித்தியாசமாக பார்க்கவில்லை.இந்த மாதிரி அன்னியோன்யம் எல்லா ஊரிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.கோவில் அப்படியே துபாயை காப்பி அடித்தது மாதிரியே இருந்தது அல்லது துபாய் காப்பி அடிச்சிருக்கோ என்னவோ!

கடவுளுக்கு வெகு அருகில் இருந்தாலும் அவருடன் அலை பேசியில் தான் பேசனுமோ?



சன்னதியை விட்டு வெளியே வந்தால் பலரும் கையில் தட்டை வைத்துக்கொண்டு பிரசாதமாக வழங்கப்பட்ட இனிப்புடன் தயிர்சாதத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.வேறு ஒன்றும் ஸ்பெஷலாக இல்லாததால் அன்று இதை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினோம்.

3 comments:

ஆயில்யன் said...

//ஒரு ஹிந்து கோவில் இருக்கு என்ற விபரம் சொன்னார்,ஆச்சரியமாக இருந்தது.///

முதன் முதலாக இச்செய்தியினை கேள்விப்படுகின்றேன்!

வடுவூர் குமார் said...

வாங்க ஆயில்யன்,நலமா?
இப்போதைக்கு ஊர் சுற்றுகிற வேலை தான் இருக்கு அதனால் தான் இண்டு இடுக்கெல்லாம் போய்கொண்டிருக்கிறோம்.

கோவி.கண்ணன் said...

கோபுரங்கள் வெளியே தெரிந்தால் அவங்க சாமிக்கு குத்தம் ஆகிடுமா ? கோபுரங்களை மறைக்கும் அளவுக்கு மதில் சுவர்களில் அரசு தலையீடுகள் அப்பட்டமாக தெரிகிறது. அங்கெல்லாம் மத நல்லிணக்கும் என்பது குறைவு போல் தெரிகிறது