Monday, August 31, 2009

திரு பா.ராகவன்

ச‌ரித்திர‌ம் என்று சொல்லும் போதோ அல்லது அந்த‌ வார்த்த‌யை பார்க்கும் போதோ என‌க்கு என் ப‌ள்ளி ஞாப‌க‌ம் தான் அதிக‌மாக‌ வ‌ரும்.இதிலென்ன‌ ப‌ல‌ருக்கும் அது தானே வ‌ரும் என்கிறீர்க‌ளா? ஓர‌ள‌வு உண்மை தான் ஆனாலும் அவ‌ர‌வ‌ர் அதை எதிர்கொண்ட‌ வித‌த்தில் மாறுபாடு இருக்கும் அல்ல‌வா?


நான் ப‌டித்த‌ நாகப்பட்டினம் தென்னிந்திய‌ திருச்ச‌பை உய‌ர்நிலைப் ப‌ள்ளியில் ச‌ரித்திர‌ வ‌குப்புக‌ள் எப்போதும் ம‌திய‌ம் அதுவும் சாப்பாட்டுக்கு பிற‌கு இருக்கும்.என்ன‌ தான் ப‌ழ‌ங்கால‌ க‌தை என்றாலும் சாப்பாட்டுக்குப் பிற‌கு எந்த‌ வ‌குப்பாக‌ இருந்தால் என்ன‌? க‌ண்க‌ள் த‌ன்னால் இழுக்க‌ ஆர‌ம்பித்துவிடும்.ப‌ல‌ரை மிர‌ட்டியே எழுப்பும் வேலை ஆசிரிய‌ருக்கு வ‌ந்துவிடும்,பாவம்.நான் 7 வ‌து ப‌டிக்கும் போகும் வ‌ந்த‌ ச‌ரித்திர‌ ஆசிரிய‌ர் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌வ‌ர் (பெய‌ர் ட‌பாலென்று ஞாப‌க‌ம் வ‌ர‌மாட்டேன் என்கிற‌து),நெடிய‌ உய‌ர‌ம், ப‌ழைய‌ கால‌த்து ம‌னித‌ர்க‌ள் உழைத்த‌ கை போல் ந‌ர‌ம்புக‌ள் வெளி தெரிய‌ கொஞ்ச‌ம் முர‌ட்டுத்த‌ன‌மாக‌ தோற்ற‌ம‌ளிப்ப‌வ‌ர்.வ‌ந்து இருக்கையில் உட்கார்ந்தால் பிரிய‌ட் முடியும் வ‌ரை எழுந்திருக்க‌மாட்டார்,கையில் க‌டிகார‌ம் இருக்காது ஆனால் அவ்வ‌ப்போது ச‌ரியான‌ நேர‌ம் சொல்லி அச‌த்துவார்.பாப‌ர்,அசோக‌ர் என்று சொல்லி அதை நாங்க‌ளும் ம‌னப்பாட‌ம் செய்து தேறிவிட்டோம்.இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஞாப‌க‌ங்க‌ள் ச‌மீப‌த்தில் த‌ண்ணீர் குமிழி போல் வெளிவ‌ந்த‌து அத‌ற்கு கார‌ண‌ம் நான் ப‌டித்த‌ ஒரு ச‌ரித்திர‌ தொட‌ர்.

செய்திக‌ள் கேட்ப‌து என்ப‌து என் வேலை நாட்க‌ளில் ஒரு தொட‌ர் நிக‌ழ்வு.தொலைக்காட்சி வ‌ந்திராத‌ நாட்க‌ள்,நக‌‌ர‌ங்க‌ளை விட்டு வெகு தொலைவில் வேலைக‌ள் என்ப‌தால் நாட்டு ந‌ட‌ப்புக்கு வானொலி செய்திக‌ளே ஒரே ஆதார‌ம்,அப்ப‌டி கேட்டுகொண்டிருந்த‌ நாட்க‌ளில் யூத‌ர்,பால‌ஸ்தினிய‌ர்,அர‌பிய‌ர்க‌ள்,அர‌பாத்,ஃபாதா & இஸ்ரேல்‍‍ ச‌ண்டை என்ப‌து காதில் விழும்.இது அத்த‌னையும் என்னை பாதிக்காத‌ நிக‌ழ்வுக‌ள் அத‌னால் இத‌ன் ஆதார‌த்தை தேடிப்போக‌வில்லை.யாரையும் கேட்டும் தெரிந்துகொள்ள‌வில்லை.


அர‌பாத் இற‌ந்த‌ போது கூட‌ இவ‌ருக்கும் இஸ்ரேலுக்கும் என்ன‌ ச‌ண்டை,இஸ்ரேல் எத‌ற்கு த‌ன்னை த‌னிதேச‌மாக‌ ஆத‌ரிக்க‌வேண்டும் என்று இவ‌ர்க‌ளிட‌ம் கேட்கிற‌து? அமெரிக்காவுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்,பால‌ஸ்தீனிய‌ர்க‌ளை கொசு மாதிரி ஏவுக‌ணை போட்டு கொன்றாலும் ஏன் திரும்ப‌ திரும்ப‌ அவ‌ர்க‌ள் ம‌னித‌ வெடிகுண்டுக‌ளாக‌ இஸ்ரேலுக்குள் போய் சாகிறார்க‌ள் என்று புரியாம‌ல் இருந்த‌து.ஜெருச‌லேம் என்ற‌ இட‌த்தை ஏன் கைப்ப‌ற்ற‌ இரு குழுக்க‌ளும் இப்ப‌டி பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள்? கேள்வி கேள்வி எல்லாமே கேள்வியாக‌ இருந்த‌து இர‌ண்டு வார‌த்துக்கு முன்பு வ‌ரை.

இது எல்லாவ‌ற்றையும் தெளிவுப‌டுத்த‌ ஒரே ஒரு க‌ட்டுரை அதுவும் த‌மிழில் ப‌டித்த‌ போது சொல்ல‌வொன்னா துய‌ர‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியிருந்த‌து.என்னை மாதிரி உங்க‌ளும் ச‌ந்தேக‌ம் இருந்தால் இங்கு போய் ப‌டித்துப் பாருங்க‌ள்.


திரு பா.ராக‌வ‌னின் "நில‌மெல்லாம் ர‌த்த‌ம்" தொட‌ர் 2005 யில் ரிப்போர்ட‌ரில் எழுதியிருந்தது.ப‌டிக்கும் போதே,க‌ண்முன் காட்சி சொல்லாம‌ல் விரிகிற‌து.ப‌ட‌ப‌ட‌க்கும் இதய‌த்துட‌னே ஒவ்வொரு நாளும் முடிக்க‌ வேண்டிவ‌ரும்.எவ்வளவு உயிர்கள்! அதன் மதிபே இல்லாமல் சும்மா வாழை மரத்தை வெட்டுவது போல் வீசி சாகடிக்கிறார்கள்,அதெல்லாம் விட விஷவாயு மூலம் ஓரினத்தை அழிக்கும் ஹிட்லர் என்று சோகத்தை மொத்தமாக படிக்கும் போது கையெல்லாம் நம்மை கேட்காமலே ஆடுது!! சில வருடங்களுக்கு முன்பு ஸ்கேண்டலர்’ லிஸ்ட் படம் பார்க்கும் போது கூட அதன் பின்புல விபரீதங்கள் புரிபடவில்லை.இத் தொடரை படிக்கும் போது தான் அதன் வீரியம் புரிந்தது.எழுத்துக்க‌ளுக்கிடையே ப‌ட‌மே இல்லாவிட்டாலும் எழுத்துக‌ளிலேயே அதை கொடுத்துவிடுவ‌தால் கொஞ்ச‌ம் கூட‌ அய‌ர்சியே தெரியாம‌ல் செய்துவிடுகிற‌து,இவ‌ரின் எழுத்து ந‌டை.

முழுவ‌தும் ப‌டித்து முடித்துவிட்டாலும் இன்று வ‌ரை அப்பிர‌ச்ச‌னைக்கு விடிவு வ‌ர‌வில்லையே என்ற‌ ஆத‌ங்க‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியுள்ள‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்.ச‌ரித்திர‌த்தை மொத்த‌மாக‌ மூடி ம‌றைத்து புதிதாக‌ எழுதி அத‌ற்கு விலையாக‌ இன்றும் ம‌னித‌ உயிர்க‌ள் செத்துக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌து தான் உண்மை.

Saturday, August 29, 2009

Universe

வான்வெளி சாஸ்திரத்தில் ஆர்வமா? தலகானி அளவில் இருக்கும் புத்தகங்களை படிக்க இஷ்டமில்லையா?

அப்படியென்றால் நீங்கள் பார்க்க வேண்டிய DVD இது தான்.ஒரு DVD யில் 2 ~ 3 மணி நேரம் பார்க்க வேண்டிய அளவில் விபரங்கள் இருக்கு.இத்தொகுப்பில் மொத்தம் 4 DVD யில் உள்ளது.

மிக மிக விரிவாக பல தரப்பட்ட வின்வெளி ஆய்வுகளையும் விளக்கியுள்ளார்கள்.



நீங்கள் சிங்கையில் இருந்தால் இத்தொகுப்பு நூலகத்தில் இருக்கு, வாங்கிப்பார்த்து மகிழுங்கள்.

Wednesday, August 26, 2009

நூலகத்தில் பதிவர்கள்.

போன ஞாயிறு எப்போதும் போவது போல் Choa Chu Kang நூலகத்துக்கு போய் தமிழ் நூல்கள் இருக்கும் இடத்தில் அப்படியே தேடிக்கொண்டிருக்கும் போது நமது பதிவர்கள் இருவர் புத்தகங்கள் காண கிடைத்தது.

ஒன்று நமது பதிவர் உலகத்தில் “தல” என்றழைக்கப்படும் பால பாரதியின் “அவன் - அது= அவள்”, இரண்டாவது டி பி ஆர் என்றழைக்கப்படும் திரு ஜோசப் ஐயாவின் ”சந்தோஷமாக கடன் வாங்குகள்” என்ற புத்தகம். இவ்விரண்டு புத்தகங்களும் நான் எதிர் பார்க்காமல் கிடைத்தது.




பல பதிவுகள் இவ்விரு புத்தகங்களை அலசிவிட்டதால் அதைப் பற்றி திரும்பவும் சொல்லப்போவதில்லை.

முதல் புத்தகம் என்னை மாதிரி 45 வயதை கடந்தவர்களுக்கே இதுவரை புரிபடாத விஷயங்களை புரியவைத்தன.நல்ல எழுத்து நடை இன்னும் மிளிர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு தேவையானவற்றை கையில் வைத்துக்கொண்டு பேங்குக்கு போனால் 90% லோன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.பலதரப்பட்ட மக்களை மனதில் வைத்து அனைவருக்கும் பயனளிக்கும் படி கொடுத்துள்ளார்.

Saturday, August 22, 2009

Winsor Probe சோதனை

இந்த சோதனை,ஏற்கனவே போட்டு முடிந்த கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க நடத்தப்படும் சோதனைகளில் ஒன்று.எளிமையானது மட்டுமில்லாமல் மிக விரைவில் இதன் முடிவை அறிந்துகொள்ளலாம்.பழைய கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க பல சோதனை கருவிகள் இருக்கு அதில் இதுவும் ஒன்று.

சோதனை செய்யப்போகும் கான்கிரீட்டில் Firing Gun (கட்டுமானத்துறைக்கு மட்டும்) உள்ளே ஒரு ஆணியை போட்டு அதை கீழே உள்ள படத்தில் இருக்கும் படி Fire பண்ணுவார்கள்.அந்த ஆணி எவ்வளவு ஆழம் கான்கிரீட்டில் போகிறதோ அதை வைத்து அதன் தரத்தை நிர்ணயம் செய்யப்படும்.



இடத்துக்கு தகுந்த மாதிரி ஒரு ஆணியோ அல்லது மூன்று ஆணிகளோ Fire செய்யப்படும்.மூன்று ஆணிகள் ஆனால் அதை சதவீத அடிப்படையில் கணக்கிடுவார்கள்.இதில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் துப்பாக்கி மூலம் அதிக விசையுடன் ஏற்றப்படுவதால் அடுத்த பகுதியில் யாரும் இல்லாமல் இருப்பது நல்லது.
பூச்சுடன் இருக்கும் கான்கிரீட்டின் தரத்தை கண்ணால் அளவிட முடியாது என்பதால் இந்த எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது தரையில் உள்ள கான்கிரீட்டை சோதனை செய்வது.



ஆணி அடித்து முடித்தவுடன்..



கான்கிரீட்டின் உள் எவ்வளவு தூரம் போயுள்ளது எனபதை அளக்கிறார்கள்.ஆணியின் அளவு தெரியும் அதனால் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் அளவை பார்த்து அதை முழு நீளத்தில் இருந்து கழித்தால் கான்கிரீட் உள்ளே போன நீளம் தெரிந்துவிடும்.



அளவுகளை எடுத்த பிறகு அந்த ஆணியையும் எடுத்துவிடலாம்.ஆணியை எடுத்த இடம்.



கான்கிரீட்டின் தரத்தை சோதிக்க மற்றொரு முறையும் இருக்கு அது அடுத்த பதில் போடுகிறேன்.

Wednesday, August 19, 2009

சிங்கப்பூர் பிரம்மா.

என்னை கவர்ந்த பல படங்களில் இந்த படமும் ஒன்று, அதுவும் இந்த காட்சி.. இந்தியன் என்ற உணர்வுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் சாட்டை கொண்டு அடிக்கும் படி கூறப்பட்ட வசனம்.பார்க்கும் அனைவரையும் எங்கேயே இழுத்துப்போகும்.அதுவும் சிங்கப்பூரில் இருந்துகொண்டு இதை பார்க்கும் போது வரும் ஆற்றாமையை சொல்லில் வடிக்க முடியாது.




நன்றி:igentertinement

மேலே உள்ள படத்தில் சிங்கபூரைப் பற்றி சொல்லியிருப்பார்கள்.இந்த முன்னேற்றம் ஏதோ ஒரு நாளில் நிகழ்தது அல்ல, அதற்கு அடித்தளம் போட்ட பிரம்மாவின் பேச்சுகளை கேட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கீழேயுள்ள நகர் படத்தில் பார்க்கவும்.
இது 1963 இல் நடந்த தேசிய தினமாம்.



இப்படம் திரு லீ குவான் யூ (எப்போதோ பேசியது யூடூபில் கிடைத்தது).கேட்கும் போதே சும்மா ஜிவ் என்று ரத்தம் ஏறுதல்ல? அதான் “தல”.



இது இங்கு தேசிய நாளன்று பெரிய திரையில் காண்பித்தார்கள்.




யூடூபில் தேடினா இன்னும் நிறைய கிடைக்கும்.

பிரம்மாவுக்கு நான்கு தலை ஆனால் நம்மால் இதுவரை 3 தலைகளை மட்டுமே பார்க்க முடிந்தது,நான்காவது தலையை அவர்களே தேடிக்கிட்டு இருக்கிறார்களாம். :-)

Tuesday, August 18, 2009

2000 வெள்ளிக்கு இரண்டு முத்தம்!!

பொழுது விடிந்து சற்று நேரம் தான் ஆனது அந்த ராஜூ ரமேஷ் க்கு ஆனால் அதுவே அவருக்கு விடிவில்லாத பொழுதானது அதுவும் சிங்கையில்.ரமேஷ் கனிணித்துறையில் பணி செய்பவர்.

சாலையில் நடந்து போய்கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஒரு 40 வயது மாதை கட்டிப்பிடித்து கண்ணத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுத்துள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காமல்(இதெல்லாம் எதிர்பார்க்கமுடியுமா என்ன?) அந்த மாது அவனிடம் இருந்து விடுவித்துக்கொண்டு கூச்சல் போட்டுள்ளார்.இதை கேட்ட நிரந்தரவாசி ரமேஷ் ஓட்டம் பிடித்துள்ளார்.தெருவில் போனவர்கள் ஓடி அவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இப்படி செய்தவரை நீதிமன்றம் விசாரித்த போது தான் அவரை விலை மாது என்று நினைத்து செய்துவிட்டேன் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லியுள்ளார் அதோடு தனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கப்போவதாகவும் சொல்லியுள்ளார்.(என்னப்பா அவசரம்??)



இதையெல்லாம் கேட்ட நீதிமன்றம் அவருக்கு 2000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.இந்த 2000 வெள்ளியை யாருக்கு கொடுப்பார்கள்? வழக்கறிஞருக்கே பத்தாதே! இது என் சந்தேகம் தான்.

2 முத்தம் = 2000 வெள்ளி.

50 வெள்ளிக்கு முழு சாப்பாடு கிடைக்கும் போது 2000 வெள்ளி க்கு டீ குடிச்சமாதிரி இருக்கு.:-))

Sunday, August 16, 2009

பின்னூட்ட பெட்டி கீழ வரனுமா?

நானும் கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனையில் மாட்டிக்கிட்டு முழித்துக்கொண்டிருந்தேன் இன்று தான் விடிவு காலம் பிறந்தது.

என்னுடைய வலைப்பூ டெம்பிளேட்டை மாற்றப்போய் பின்னூட்ட பெட்டி பதிவுக்கு கீழே வராமல் அடம் பிடித்தது.கோவியாரிடம் கேட்டால் என் பதிவுலும் அந்த பிரச்சனை என்றார்.எங்கெங்கோயோ தேடியும் ஒன்றும் பிடிபடாமல் சற்று முன் இந்த பக்கத்தில் பார்த்த போது அவர்கள் சொன்ன மாதிரி செய்தேன், சரியாகிவிட்டது.

தேவைப்பட்டவர்கள் இங்கு போய் பார்த்து முயற்சிக்கலாம்.

இன்னும் ஒன்று தான் பாக்கியிருக்கு ஆதாவது பின்னூட்டம் இட்டவர்கள் பெயர் தெரியாமல் ஏதோ ஒரு பெட்டி ஐகான் தெரிகிறது இதை சரி செய்ய உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். மிக்க நன்றி.

Friday, August 14, 2009

சிங்கப்பூர் பெண்களுக்கு என்ன வேண்டும்?

இந்த மாதம் 4ம் தேதி இப்படி கேள்வி கேட்டு ஒரு பதிவை இணையத்தில் உள்ளூர் பத்திரிக்கை பக்கத்தில் படிக்க நேர்ந்தது.விஷயம் சாதாரணமாக இருந்தாலும் ஆண்கள் பொங்கி எழுந்திட்டாங்க....

இங்கு படிங்க

Show all 107 Comments என்பதை சொடுக்கி படிச்சி பாருங்க .நீயா? நானா? என்ற போட்டி தோற்றுவிடும். செம காமெடி.

தமிழ் ஆசிரியைக்கு சிறை!!

தமிழ் விடைத்தாள்களை தவறாக திருத்தி அமைத்ததற்காக தமிழ் ஆசிரியைக்கு 8 வார சிறை தண்டனை கொடுத்துள்ளது சிங்கை நீதிமன்றம்.இதன் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கும் பாடம்/எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனலாம்.

இவரது குடும்ப நிலமையை வைத்து இவருக்கு மிகக்குறைந்த தண்டனை வழங்கவேண்டும் என்று பிரபல வழக்குறைங்கர் வாதாடி 8 வார சிறை வாங்கிக்கொடுத்துள்ளார்.

மேல் விபரங்கள் இங்கு.

Wednesday, August 12, 2009

எப்படி இதெல்லாம் ...இவர்களால்??

கொஞ்ச வருடங்களுக்கு முன்ன்னால் உலகத்தில் 3 வது பெரிய போர் ஏற்பட்டால் அது குடிநீருக்காகத்தான் என்று ஆரூடம் சொன்னார்கள், அது இன்றளவிலும் சரியாகத்தான் இருந்தாலும் ஒரு நாட்டின் குடி நீர் தேவை எப்படி நிர்வகித்து முறைபடுத்துகிறார்கள் என்பதை கீழ் கண்ட சுட்டியை சொடுக்கி பாருங்கள்.

மேலிருந்து பார்த்தால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு புள்ளி தான் சிங்கப்பூர் ஆனால் சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து பலவற்றுக்கும் அடுத்த நாட்டை நம்மியிருக்க வேண்டிய கட்டாயம் அப்போது ஆனால் இன்று நிலமை வேறு.உதாரணத்துக்கு குடி நீர் .மலேசிய வழங்க வேண்டும் அதை சிங்கை குடிநீராக மாற்றிக்கொள்ள வேண்டும் அப்படி மாற்றிய குடி நீரை ஒரு அளவு மலேசியா வாங்கிக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தத்தில் 2061 ஆண்டு வரை இரு நாடுகளும் கையொப்பம் இட்டிருந்தது.

இன்னும் 50 ஆண்டுகள் இருக்கின்றதே என்று சிங்கை அரசாங்கம் மெத்தனமாக இல்லாமல் தன் தேவைக்கு என்னென்ன செய்யலாம் என்று மிகப்பெரிய திட்டத்தை வரைந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஒரு சின்ன உதாரணத்துக்கு .... வீணாக போய்கொண்டிருந்த கழிவு நீரை எப்படி சுத்தப்படுத்தி அதை மறு சுழற்சி செய்கிறார்கள் என்று பாருங்கள்.இது முழு சிங்கப்பூர் நீளத்துக்கும் செய்திருக்கிறார்கள்.

இங்கே சொடுக்குங்கள்

HATS OFF SINGAPORE.




இப்பக்கத்தை ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பிய என் நண்பனை உங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

போன மாதத்தில் ரமேஷ் என்ற பதிவர் தன் மேன்ஷனில் நீருடன் கழிவு நீரும் சேர்ந்து வருவதை எதிர்க்க எப்படிப் பட்ட போராட்டதையெல்லாம் மேற்கொண்டார் என்ற பதிவை படிக்கும் இப்பக்கம் தான் ஞாபகம் வந்தது.நம்முடைய பெரு நகரங்களில் அத்தியாவசமான கட்டமைப்புகள் இல்லை.இப்படியே போய்கொண்டிருந்தால் எப்போதுமே செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.மேலே உள்ள சுட்டியில் சொன்ன மாதிரி நம்நாட்டில் இருந்திருந்தால் ரமேஷ் போன்றவர்கள் இந்த அளவுக்கு பாடுபடவேண்டாம்.

நம் தலைவர்கள்/அரசாங்கம் சீக்கிரம் முழித்தால் எல்லோருக்கும் நல்லது.

Sunday, August 09, 2009

44 வயது சிங்கைக்கு

முப்பதாம் வயதில் இருக்கும் போது சிங்கைகு வந்தது,கனவு போல் 14 வருடங்கள் ஓடிவிட்டது.சிங்கை இன்று தனது 44 லாவது தேசிய நாளை கொண்டாடுகிறது.நாளுக்கு நாள் மாற்றங்கள்,எண்ணங்களில் மாற்றம், தேசிய தலைமையில் மாற்றம்......மாற்றம் மாற்றம் ஒன்று தான் கொள்கை என்ற அளவில் தினமும் தேசத்ததை ஓட்டி ஒரு குட்டியூண்டு நாடு உலகத்தையே எட்டி பார்க வைத்துள்ளது.எட்டிப்பார்க்க வைத்ததற்கு உதாராணமாக பல தேசத்துக்கு மக்களை MRT என்று சொல்லப்படுகிற ரயிலில் வேலைக்கு சென்று வருவதை சமீபத்தில் பார்க்கமுடிகிறது.

தேசிய நாளை ஒவ்வொரு முறையும் பிரமாதப்படுத்திவிடுகிறார்கள்.கடலில் மிதக்கும் மேடையை இதற்கு என்று ஒதுக்கிவிட்டுவிட்டார்கள் போலும்.இங்கு சென்று பார்க்க குலுக்கல் முறையில் நுழைவுச்சீட்டு கொடுக்கப்படுகிறது.நிகழ்ச்சியின் கடைசியில் நடக்கும் வானவேடிக்கை மட்டும் காண பலர் அங்கு கூடுவது அந்நிகழ்ச்சியின் பிரபலத்தை காட்டுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் இந்த மாதிரி போஸ்டர் வைத்து அசத்துகிறார்கள்.





இது மக்கள் தங்கள் கட்டிடங்களை அலங்கரித்துள்ளதின் மூலம் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்களிப்பு தெரிகிறது.



இந்த 14 ஆண்டுகளில் சிங்கைக்கு வந்த நெருக்கடிகள் மூலம் அதை எப்படி கடப்பது என்ற இவர்கள் நடவடிக்கைகள் ஆச்சரியப்படவைக்கின்றன.கற்றுக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அதுவும் அதை பொதுவில் விவாதிக்கும் போது மக்களின் பங்களிப்பை பெற்று இந்த கட்டிடம் மாதிரி உயர்ந்து நிற்கின்றது.



என்ன தான் பிரச்சனை வந்தாலும் முடிவில் இருக்கும் வெளிச்சததை நோக்கி வீறு நடை போடும் சிங்கப்பூரை நாமும் வாழ்த்துவோம்.

Friday, August 07, 2009

புலவ் உபின் (2) படங்கள்

அங்கு ஒரு பார்வை கோபுரம் சுமார் 5 ~ 6 மாடி உயரத்தில் கட்டிவைத்துள்ளார்கள் அதுவும் மரத்தில்.ஒரே சமயத்தில் 20 பேர் மட்டும் தான் இங்கு இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கிருந்து எடுத்த சில படங்கள் கீழே



P1010037

எண்ணெய் எடுக்கிறார்களா என்ன?


P1010038

மரத்தின் இலைகள்

P1010036

குழுவினரின் ஒரு பகுதி

P1010035

ஒரே ஒரு தென்னை

P1010034

சாங்கியில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கும் விமானம்.

P1010032

தீவின் ஒரு பகுதி

P1010031

நிறைய நடக்க வேண்டி கரை ஓரமாக கடலின் உள்ளே நடை பாதை அமைத்துக்கொடுத்துள்ளார்கள்.அதன் ஒரு பகுதி கீழே

P1010026

எல்லாம் முடிந்து வழியனுப்பும் போது வாழ்த்தி அனுப்புகிறார்கள்.

P1010016

சத்தியமாக இதெல்லாம் நான் தான் எடுத்தேன் நிரூபிக்க... :-))

P1010013

Sunday, August 02, 2009

புலாவ் உபின்

என்ன தலைப்பே ஒரு மாதிரி இருக்கு என்று பார்க்கிறீர்களா? வேறு ஒன்றும் இல்லை இது உபின் என்கிற தீவு,சிங்கப்பூருக்கு சொந்தமானது அதை கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலா தளமாக்கி வருகிறார்கள்.

எங்கள் நிறுவனம் அவ்வப்போது இந்த மாதிரி சுற்றுலா போட்டு மக்களை வேலை டென்ஷனில் இருந்து கொஞ்சம் வெளியே கொண்டு வர அழைத்துப்போவார்கள்.இந்த தடவை நான் இங்கு இருக்க நேரிட்டதால் ”வருகிறேன்” என்று சொல்லியிருந்தேன்.காலை அலுவலக வாசலில் இருந்து பேருந்து சற்று தாமதமாக கிளம்பினாலும் சாங்கி(இடப்பெயர்) படகுத்துறைக்கு சுமார் 9 மணிக்கு போய் சேர்ந்தோம்.அங்கிருந்து படகு எடுத்து போக வேண்டும். நாங்கள் மொத்தம் 30 பேர் என்பதால் ஒவ்வொரு படகிலும் 12 (அதிக பட்ச அளவு) பேராக கிளம்பி போனோம்.சாங்கியில் இருந்து 15 நிமிடங்களுக்குள் புலாவ் உபினுக்கு போய்விடலாம்.

சாங்கி படகுதுறை முனையம்.

Changi Ferry Point

சிங்கையில் இருந்து புலாவ் உபின் தீவு.

DSC00509

கடல் அவ்வளவு ஆர்பரிப்பு இல்லாத்தால் படகில் போகிறோம் என்ற உணர்வே இல்லாமல் போய் சேர்ந்தோம்.மற்றவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்,வந்ததும் அங்குள்ள தகவல் நிலையத்தில் பொதுவான விபரங்களை சொன்னார்கள்.இந்த தீவை சுற்றி வர கால நடையை விட மிதிவண்டி தான் சரியான தேர்வு என்பதால் அங்கு பல கடைகளை காண முடிந்தது.குடும்ப அளவுக்கு தகுந்த மாதிரி மிதிவண்டி கிடைக்கிறது.சைக்கிள் கிடைத்ததும் குழு "தலை" அங்கிருந்து எப்படி போக வேண்டும் என்று தகவலை சொன்னவுடன் நானும் என் நண்பன் அவர் குடும்பமும் சேர்ந்து கிளம்பினோம்.

மேட்டில் சைக்கிள் மிதிப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவ்வப்போது Gear மாற்றி ஒரு மாதிரி சமாளித்து போனோம்முடியாத இடத்தில் தயங்காமல் கீழிறங்கி தள்ளிக்கொண்டு போய் பிறகு மிதித்து போனோம்.

வெய்யில் அவ்வளவு இல்லாத்தால் சீக்கிரம் களைப்படாமல் போனோம்.வழி எங்கும் மரங்கள் என்று சூழ்நிலை அட்டகாசமாக இருந்தது.

DSC00512

பாதையின் இருமருங்கிலும் மரங்கள்.

DSC00514

தீவிலும் தனிவீடு அதன் மின்சாரத்துக்கு Solar Panels.

DSC00513

என்னுடன் வந்த குழுவினரின் ஒரு பகுதி.

DSC00511

மாங்குரோவ் காடுகள் கூட இருக்கு ஆனால் இப்பகுதில் ஏதோ ஒரு கெமிகல் வாசம் மூக்கை துளைத்தது.

P1010044

நிப்பா என்ற ஒரு மலர் - வித்தியாசமாக இருந்தது.

P1010043

இன்னும் மிக அருகில்

P1010042


இன்னும் நிறைய படங்கள் இருப்பதால் இப்பதிவின் மீதி அடுத்த பதிவில் வரும்.

Saturday, August 01, 2009

கப்பல்

கடல்/கப்பல் என்றாலே எனக்கு ஒரு தனியீர்ப்பு.விட்ட குறை தொட்ட குறை என்று சொல்லப்படுவது போல் நம் மனித இனம் கடலில் இருந்து தான் தோன்றியதாக ஒரு பேச்சு இருக்கிறதே அதன் மிச்சம் மீதி இருப்பதால் கூட இருக்கலாம்.அப்படி இல்லாவிட்டால் கடல் உள்ள ஊரில் இளமைக் காலத்ததை கழித்ததால் கூட இருக்கலாம்.எது எப்படியோ, ஆனால் இன்று புலாவ் உபின் (தீவு) க்கு போய் திரும்பும் போது எங்கள் படகை எச்சரிக்கை ஒலிப்பானை அழுத்தி சொல்லிவிட்டு போன கப்பல் இது தான்.



புலவ் உபின் படங்கள் கூடிய விரைவில் வரும்.