Saturday, August 30, 2008

நன்றாகப் பிறந்தவை

என்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்கே என்று பார்க்கிறீர்களா? இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?


“சுஜாதா”

என்று சுஜாதா தன்னுடைய “விமர்சனம்,விவாதங்கள்” என்ற புத்தகத்தில் 44 பக்கத்தில் உள்ளது।சுஜாதா என்பது பெண் பெயர் மட்டும் அல்ல என்று சொல்லி தலைப்பில் உள்ளதை சொல்லியுள்ளார்.இதுவும் ஒருவர் நீங்கள் ஏன் பெண் பெயர்களில் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலடியாக . கொடுத்துள்ளார்.

சுஜாதாவோட பல பத்தகங்களை படித்துள்ளேன் அதுவும் பொது இடங்களில் படிக்கும் போது படுஜாக்கிரதையாக இருக்கவேண்டும்,எப்போது வாய்விட்டு சிரிப்போம் என்று சொல்லமுடியாதபடி கதையின் நடுவில் ஒரு வரியை போட்டு அசத்திவிடுவார்।தண்ணீரில் இருந்து எழும் குமிழி போல் திடிரென்று வரும்।

இந்த புத்தகத்தை எடுத்து சில வரிகளை படிக்கும் போது முதலிலேயே படித்த மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டு மேலே படித்தேன்.இவருடைய பேட்டிகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என்று தொகுத்துவழங்கியுள்ளார்கள்.முதல் பதிவு 1985, பிறகு 1994 & 1998யில் வந்துள்ளது.அதில் ஒரு நாட்டுப்பாடல் நானும் எப்போதோ பாடிய ஞாபகம்.

தபால்காரரை விமர்சித்து பாடியது..

தபால் தபால் வீரப்பா
என்னெக்கிடா கல்யாணம்
மாசம் பிறக்கட்டும்
மல்லிகை மலரட்டும்
எம்.ஜி.ஆர். சண்டை
பார்வதி கொண்டை
கொளத்தில் கொக்கு
கோலப்பீயை நக்கு!

அடுத்து சினிமா விமர்சனத்தில் “காய் அவுர் கௌரி” விமர்சனம் தான் சூப்பராக இருந்தது.இந்த படத்தில் ஒரு பசு தான் கதாநாயகனுக்குரிய அந்தஸ்துடன் நடிக்குது போல் இருக்கு.அது செய்யாத ஒன்று “போன் பேசாதது” என்று தான் எழுதியிருக்கார்.

மற்றொரு இடத்தில் கற்பனையில்லாது எழுதப்பட்ட ஒரே புத்தகம்...

டெலிபோன் டைரக்டரி தானாம்.

இப்படி எல்லாம் நகைச்சுவையை தூவிவிட்டு...

இன்றும் இப்படி இருக்கா?பலதரப்பட்ட புத்தகங்களை படிப்பவர்கள் சொல்லுங்கள்।


Wednesday, August 27, 2008

அழகு “மதுரை”

ஒவ்வொரு தடவையும் ஊருக்கு போகும் போது மதுரை மீனாட்சியை பார்த்துட்டு அப்படியே “அய்யர்” கடையில் அல்வா சாப்பிட்டுவிட்டு முடிந்தால் இரவு தெருவோரக் கடையில் இட்லி சாப்பிட்டு விட்டு வரனும் ஆசைதான், ஆனால் அங்கு போனதும் எதிர்பார்க்காத வேலைகள் வந்துவிடும்,அதோடு சரி.சென்னையை விட்டு வெளியே போகமுடியாது.அதற்குள் விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பும் நாளும் வந்து ஆளை விரட்டி இங்கு கொண்டுவந்து போட்டுவிடும்.

நேற்று பிபிசி யின் இந்தியா பற்றிய விவரனையில் மதுரை காட்டினார்கள் அப்படியே மயங்கிட்டேன்,நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

மதுரையில் இருந்து நம்மிடையே பழம் வலைப்பதிவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,அவர்களுக்காகவும் என்னைப்போல் பார்க்காதவர்களுக்காவும் கீழே உள்ள சலனப்படம்.



நன்றி:பிபிசி.

Sunday, August 24, 2008

அதற்குள் தீபாவளியா??

சிங்கையில் வருடந்தோரும் தீபாவளிக்கு சிரங்கூன் சாலையை இந்த மாதிரி அலங்காரங்களை செய்து விளக்கு தோரனைகளுடன் அழகுபடுத்துவார்கள்।

அதை இவ்வளவு சீக்கிரம் பண்ணுவார்கள் என்று தெரியாது,நேற்று சிரங்கூன் சாலைக்கு போகும் போது கை தொலைபேசி மூலம் எடுத்த படம்।

Wednesday, August 20, 2008

சுப்பையா சாருக்காக...

நம்ம வலையுலக வாத்தியார் சுப்பையா சார் ஜோதிடம் பற்றிய பதிவுகளில் பிரபலம்,அதில் படம் போட்டிருக்கார் ஆனால் அது குறித்து நகர் படம் ஏதும் போட்டிருக்காரா என்று ஞாபகம் இல்லை.

அவர் பதிவுகளில் ஜோசியம் பற்றிய பதிவுகளை தொடர்ந்து படித்தாலும் ஒரு அளவுக்கு மேல் என் மண்டையில் ஏறவில்லை அதனால் நிறுத்திக்கொண்டேன்.

சற்று முன் இந்தியா பற்றிய பி பி சி யின் விவரனப்படம் (part 5 of 6) பார்க்கும் போது இந்த பகுதியில் அவர் ஞாபகம் வந்தது,அப்படியே எடுத்து போட்டுவிட்டேன்.

உங்கள் வகுப்பறை கண்மனிகளுக்கு உபயோகமாக இருக்கக்கூடும்.



நன்றி: பி பி சி

Monday, August 18, 2008

இவர்களுக்கு உதவலாமா?

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது இந்த காட்சி கண்ணில் படும் போது நெஞ்சை பிழியும்.நம்மில் பலர் சாலையில் போகும் போது காரிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அல்லது பேருந்திலோ போவோம்.நாம் சாலையில் இருக்கும் நேரம் மிகக்குறைவாகவே இருக்கும்.ஆனால் இப்பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலை நேரத்தை பெரும்பாலும் சாலையிலேயே கழிக்கிறார்கள்.



சென்னையில் மற்றும் பெரும் நகரங்களில் ஓடும் பல வண்டிகள் வயதுக்கு மீறி ஓடவைப்பதாலும் மற்றும் சரியான பராமரிப்பு செய்யாத்தாலும் கரும் புகையை அள்ளிக்கொட்டிக்கொண்டு போகும்.இந்த புகையை சுவாசிக்கும் மூக்குக்குள் மறு நாள் காலை அனிச்சியாக போகும் விரலோடு வெளியே வரும் போது அதன் வீரியம் தெரியும்.சாலையில் நாம் கழிக்கும் இந்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி என்றால் பல மணி நேரம் அங்கேயே நிற்க வேண்டிவரும் போக்குவரத்து போலீஸ்காரர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுக்கு என்ன நுறையீரல் மற்றும் உடல் உறுப்புகள் வேறு மாதிரியாகவா இருக்கு.இந்த காட்சியை பார்க்கும் போது இந்த மாதிரி நிலைமைக்கு யாரை குற்றம் சொல்ல? என்று மனது அசைபோட ஆரம்பிக்கும்.



சுமார் 50 வருடங்களுக்கு முன்பு இந்த அளவுக்கு புகைகக்கும் வண்டிகள் கிடையாது, சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சமிக்கை விளக்குகள் கிடையாது அதனால் இந்த மாதிரி போலீஸ்காரர்களை அதற்கென்று நியமிக்கவேண்டியிருந்தது.இன்று அந்த நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தாலும் இவர்களை அவ்வப்போது சாலைக்கு நடுவே ஒரு குடையின் (சில இடங்களில் மட்டும்) கீழே நிறுத்தி வாகன போக்குவரத்தை சமாளிக்கவிட்டு விட்டார்கள்.அவ்வப்போது பெரும் தலைகள் வரும் நேரத்தில் போக்குவரத்தை சமாளிக்கவும் இவர்கள் உதவுவார்கள்.

போன பதிவர் கலந்துரையாடலின் போது திரு அந்தோனிமுத்து அவர்களுக்கு சக்கர நாற்காலி கொடுப்பதை பற்றி திரு ஜோசப் பால்ராஜ் சொல்லி நாமும் அந்த பங்களிப்பில் கலந்துகொள்வோம் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.யாரும் மறுப்பு சொல்லவில்லை ஆனால் எங்கள் உதவி தேவைப்படாமல், அந்த முயற்சி மற்றவர்கள் மூலம் நடைந்தேறிவிட்டது.அதன் தொடர்ச்சியாக பொது நலனில் அக்கறை உள்ள நிகழ்வாக இந்த காவல்துறைக்கு ஊழியர்களுக்காக நாம் ஏன் பாதுகாப்பு சாதனம் கொடுக்கக்கூடாது?சில போக்குவரத்து ஊழியர்களுக்கு மூக்கை மட்டும் மூடும்படியான ஒரு காகித மூடி கொடுத்திருப்பார்கள் போலும்,சிலரை அந்த கவசத்துடன் பார்த்திருக்கேன்,அது ஒரு மணி நேரத்துக்குக்கூட பாதுகாப்பாக இருக்காது அதோடு விலையும் மிக மிக மலிவு.

அரசாங்கம், இவர்களுக்கு இம்மாதிரியான சாதனத்தை கொடுப்பதற்குப்பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இந்த பணியை விளக்கு சமிக்யையிடம் விட்டுவிட வேண்டும்.அப்படியே தேவைப்பட்டால் அவர்கள் உடல் நலத்துக்கு கேடுவிளைவிக்காமல் இருக்க இந்த மாதிரி முகக்கவசம் கொடுக்கவேண்டும்.அரசாங்கம் மூலம் நடக்கவேண்டும் என்றால் இவர்களை சென்றடைய இன்னும் பல காலங்கள் அதற்குள் அவர்கள் நலம் இன்னும் மோசமாகக்கூடும்.அதனால் செலவு குறைவாகக்கூடிய இந்த நற்பணியை தமிழ் வலைப்பதிவர்கள் ஏன் மேற்கொள்ளக்கூடாது?

முதலில் சென்னையில் ஆரம்பிக்கலாம்,பார்க்கும் மற்ற ஊர்காரர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வரும் பிறகு தேவையென்றால் அங்கும் விரிவுபடுத்தலாம்.

எவ்வளவு செலவாகும்?

சென்னையை மட்டும் எடுத்துக்கொண்டால் 500 யில் இருந்து 700 சந்திப்புக்கள் இருக்ககூடும் அதில் வேலை செய்யும் காவல்துறைகாரர்கள் இரண்டு பேர் இருக்கலாம்.அதிகபட்சமாக 1500 தேவைப்படும்.

இந்த கவசங்களில் இரு வகை உள்ளது,ஒன்று மூக்கை மட்டும் மூடக்கூடியது மற்றது மூக்கு & வாயையும் மூடக்கூடியது.முதல் வகை ஒரே ஒரு நாள் மட்டுமே உபயோகிக்க முடியும் ஆதாவது Use & Throw.விலையும் குறைவு.



இரண்டாவது நல்ல வகை ஆனால் விலை அதிகமாக இருக்கும் அத்தோடில்லாமல் அதன் பில்டர் எனப்படும் வடிகட்டியை சுமார் 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியிருக்கும்.இந்த வடிகட்டியின் விலையும் கொஞ்சம் அதிகம் தான்.




சென்னையில் இதன் விலை எவ்வளவு என்று தெரியவில்லை.அமெரிக்காவில் இது பிரபலமாக உள்ளது,அங்கிருந்து யாராவது வாங்கி அனுப்பமுடியும் என்றால் நல்லது.சிங்கையில் இது என்ன விலை என்பதை விஜாரித்து சொல்கிறேன்.

இதை வினியோகிக்கும் முன்பு காவல்துறையை ஆலோசித்துவிட்டு செய்தால் இன்னும் நல்லது.ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே.உதவி செய்யப்போய் ஒரு 5 வருடத்துக்கு நீங்களே கொடுப்பீர்களா? என்று கேட்டாலும் கேட்கக்கூடும்.இதிலும் சாதக பாதகங்கள் இருந்தாலும் நமக்காக அந்த புகையில் நிற்கும் நம் உடன் பிறவா சகோதரர்களுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்.இதை பார்த்தாவது அரசாங்கம் மற்றும் உயரதிகாரிகள் அவர்களுக்கு வேண்டியதை செய்யட்டும்.இது யாரையும் புண்படுத்துவதற்காக செய்வதல்ல,அஹிம்சை முறையில் மனிதாபித முறையில் செய்வோம்.

உங்கள் கருத்தை சொல்லவும் அதன் பிறகு ஆகவேண்டியதை பார்கலாம்.

Sunday, August 17, 2008

பார்த்து வையுங்கள்

சமீபத்தில் பி பி சி, இந்தியா பற்றிய விவரனத்தொடர் ஒன்றை பார்க்க நேர்ந்தது அதன் ஒரு பகுதி நகர்படம்.



நன்றி: பி பி சி

Saturday, August 16, 2008

நாடு எப்ப திருந்தும்??

நம்ம விஜயகாந்தின் பழைய பேட்டியை ஆனந்தவிகடனில் படிக்க நேர்ந்தபோது இது கண்ணில் பட்டது.
எனக்கும் இது தான் சரியாக இருக்கும் போல் தோனுகிறது.


நன்றி:ஆனந்த விகடன்

Thursday, August 14, 2008

தி.நகர் புதிய பாலம்.

சற்று முன் திறப்புவிழா கண்ட தி.நகர் பாலம்..



Wednesday, August 13, 2008

மரத்துக்கு முடிதிருத்தம்.

மனிதனுக்கு மட்டும் முடி திருத்தமா?
மரத்துக்கு பண்ணால் எப்படி இருக்கும்??
படத்தை பாருங்கள் ஒவ்வொரு மரத்தின் முடியை கீழே குமித்துவைத்துள்ளார்கள்.இன்று சாயங்காலம் வீடு திரும்பும் நேரத்தில் எடுத்தது.
பெரிதாக்கிப்பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

இது தான் சிங்கப்பூர்!!

சொன்னா ஒழுங்காக கேட்கனும் அப்படியிலாவிட்டால், படத்தை பார்த்துக்கொள்ளவும்.
மின்சார ரயில் ஏறும் இடத்தில் ஒடியிருக்கிறார்கள்.
இது ஒரு உதாரணம் மட்டுமே, இன்னும் நிறைய இப்படி கூடாததுகள் இருக்கு.

Tuesday, August 12, 2008

கட்டுமானத்துறை பத்திரிக்கை

கீழே உள்ள படத்தை பாருங்கள் “பில்டர்ஸ்” என்று பெயருடன் தமிழகத்திலிருந்து வெளிவருகிறது,ரூபாய் 15 தான்,மாதம் ஒரு முறை வெளியிடுகிறார்கள்.



கூடிய வரையில் தமிழ் மொழியை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.புதிய தொழிற்நுட்பம்,கட்டுமானத்துறை பொருட்களின் விலைப்பட்டியல்,தொழிலாளர் பிரச்சனை மற்றும் குத்தகைக்காரர்களின் பேட்டி என்று பல வேறு பகுதிகளை கொண்டதாக இருக்கிறது.
15 ரூபாய்க்கு மலிவு என்றே தோன்றுகிறது.
என்ன! சில விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள்/படங்கள் எல்லாம் அவ்வப்போது திரும்பத்திரும்ப வருவதை பார்க்கும் போது கொஞ்சம் எரிச்சல் பட வைக்கிறது.

வேலை வாய்ப்பு விவரங்கள் மற்றும் எந்த தொழிலாளர்களுக்கு இப்போது தேவை இருக்கிறது என்ற விபரங்களை கொடுத்துள்ளார்கள்.சட்ட ஆலோசனை மற்றும் வாஸ்து போனற விபரங்களை கொடுத்து பல ஜன எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய முயன்றிருக்கிறார்கள்.

வரவேற்போம் இவர்கள் முயற்சியை.

பார்த்து மகிழுங்கள்.

சிங்கை வாழ் நண்பர்களுக்காக.. இப்புத்தகம் ஜுரோங் நூலகத்தில் கிடைக்கிறது.

இது என்ன பூ?

சாயங்கால வேளையில் மெது நடைபோகும் வழியில் இருக்கும் இப்பூவை பார்த்ததும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.அடுத்த படத்தை பார்க்காமல் இது என்ன பூ? என்று சொல்லமுடியுமா?



ரோடு ஓரத்தில் இப்படி பல பலா முசுக்கள் காய்த்துதொங்கிக்கொண்டு இருக்கு.பலா இனத்தை சார்ந்திருந்தாலும் இது அளவில் சிறியதாகவும் நீட்டு வாக்கில் இருக்கிறது.



இது பழுத்தவுடன் இதன் சுளைகள் மிகவும் சுவையாக இருக்கும்.3 சுளைகளுக்கு மேல் ஒரு தடவை சாப்பிட்டுவிட்டு இரவு நான் பட்ட அவஸ்தை சொல்லிமாளாது.

Tuesday, August 05, 2008

நான்கரை லட்சம்

தொலைப்பேசி அழைத்தது,அழைக்கும் நபரின் பெயரையும் காண்பித்தது.
என்ன? அவர் சென்னையில் நான் திருச்சியில்.பேச்சு தொடர்ந்தது.

ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பித்தது.

”ஒரு நான்கரை லட்சம் தேவைப்படுது உன்னிடம் கேட்டால்,புரட்ட எவ்வளவு நாள் ஆகும்?”

பண முடை உள்ள நண்பனும் அல்ல அப்படியே இருந்தாலும் நண்பர்களிடம் கேட்கும் ஆளுமல்ல ,அவன்.
என்னடா,இப்படி கேட்கிறாய்.இங்கு அவ்வளவு தேறாதே அதுவும் இப்போது.சிங்கைக்கு போய் இருப்பதை எடுத்தாலும் உடனடியாக அவ்வளவு தேறுவது கஷ்டம் என்றும்,ஒருவேளை துபாய் போனால் முடிந்தவரை மிச்சம் பிடித்தாலும் எப்படியும் 5 அல்லது 6 மாதம் ஆகுமே? என்றேன்.

அவன் சிரித்துக்கொண்டே “துபாய் வேலையை தூக்கி எறி” என்றான்.உங்கள் வீட்டிலோ இங்கு வந்து வேலை பார்க்கச்சொல்கிறார்கள்,குடும்பமோ இங்கிருக்கும் போது நீ ஏன் அங்கு தனியாக வேலை செய்யவேண்டும்? என்றான்.அப்போது அவன் பேசியதின் அர்த்தம் புரிந்தது.

இன்னும் சில நாட்களில் சேரப்போகும் நிறுவன முதலாளி எனக்காக இரண்டு மாதம் காத்திருக்கிறேன் என்று சொல்லி எனக்கு உதவியிருக்கார்,அவரிடம் போய் எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு வருகிறது அதனால் சென்னையில் இருக்கப்போகிறேன் என்று சொல்லமுடியும் என்று எதிர் கேள்வி கேட்டேன்.
சரி,நீ சென்னை வா மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம் என்றான்.அதற்கு முன்பே, என்னிடம் ஒரு வேலை வந்திருக்கு அதை நான் செய்ய இஷ்டப்படவில்லை,நீ எடுத்து பண்ணு என்றான்.அதன் தொடர்ப்பில் நாம் போய் அந்த ஓனரை பார்த்து பேசுவோம் அதற்கு பிறகு வேலை செய்வதைப்பற்றி முடிவு செய்வோம் என்றான்.நானும் பார்ப்போம் என்றேன்.

மச்சினர் குடும்பத்துடன் இந்த விஷயத்தை கலந்துரையாடினேன்,அவர்களும் நண்பனின் யோஜனைக்கு ஆதரவாகச்சொன்னார்கள் ஆனால் எனக்கு மட்டும் அவ்வளவாக உடன்பாடு இல்லை.முதலில் துபாய் பார்டிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாது,இரண்டாவது என்னுடைய நடவடிக்கைகளில் இருக்கும் உண்மை பெரும்பாலும் மறைந்துவிடுமோ என்ற அச்சம்.காலை எழுந்தது முதல் படுக்கும் வரை வகை தொகையில்லாமல் பொய் சொல்லவேண்டும்,சொல்லிச்சொல்லியே நான் அப்படியே எதிர்மறையாக மாற நிறையேவே சான்ஸ் இருக்கிறது போல் எனக்கும் பட்டது,படுகிறது.

மறு நாள் சென்னை திரும்பியவுடன் கலந்து பேசி அந்த ஓனரை சாயங்காலம் 41/2 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்துகொண்டோம்.

வீட்டுக்கு வந்து காரில் இருவரும் ஒன்றாக சென்றோம்,அப்போதே வேலைவிபரங்கள் மற்றும் வேலை ஆட்களை எப்படி வைத்துக்கொள்வது போன்ற யோஜனைகளை சொல்ல ஆரம்பித்தான்.எல்லாம் முடிந்து அந்த வேலை செய்யப்போகும் வீடு வந்து இறங்குவதற்கு முன்பு “இந்த வேலை கிடைத்தால் துபாய் வேலையை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டான்.அவர்களிடம் கேட்டு தான் முடிவெடுக்கமுடியும் என்று சொன்னேன்.

உள்ளே போனோம் வீட்டின் முதலாளியை பார்த்து பேசி 100% சதவீதமாக இருந்த பணி கடைசியாக 30% க்கு வந்து நின்றது.பண விபரம் ஒப்புக்கொண்ட பிறகு எப்போது வேண்டுமானலும் வேலையை ஆரம்பிக்கலாம் என்றார்.மற்ற விபரங்கள் பேசி முடித்து வெளியில் வந்தோம்.

திரும்பவும் பேச்சு துபாய் நிறுவனத்தைப்பற்றி வந்தது.அவனே ஒரு யோஜனையையும் சொன்னான்.உன்னுடைய வருங்கால முதலாளி தான் நல்லவர் என்கிறாயே அவரிடமே போய் நிலைமை இப்படி இருக்கு உங்கள் Suggestion என்ன? என்று மெயில் கொடு என்றான்.அவர் பதில் மூலம் அவருடைய மனஓட்டத்தையும் கம்பெனி நிலவரத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்றான்.ஒரே கல்லில் இரு மாங்காய்.இதுக்கு பேர் தான் குயுக்த்தி என்பது இதெல்லாம் எனக்கு அவ்வளவு சீக்கிரம் வராது.

இந்த யோஜனை நன்றாக இருந்ததால் அன்றிரவே அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

மறுநாள் காலை அவரிடம் இருந்து பதில் கீழ்கண்டவாறு.

Dear Kumar,
There are limitless oppurtunities, especially so when the world that we are working in is 'growing'. In fact one will never know whether a correct route has been chosen until one looks back years down the road.

This is life, which should be guided by one's set of values.(வாழைப்பழத்தில் ஊசி)

We had waited for you and if you do not show-up, this will greatly affect our resource planning. This, ultimately has to be your choice.

சிகப்பில் கோடிட்டு காண்பித்துள்ளதை படித்தவுடன் ஆடிட்டேன்.மறு பேச்சிலாமல் , நான் சொன்ன தேதியில் வந்து Join பண்ணுகிறேன் என்று பதில் மின்னஞ்சல் கொடுத்தேன்.

Monday, August 04, 2008

பெரியார் = மணியம்மை

எங்கள் பாலிடெக்னிக் என்று ஒரு குழுமம் இருக்கு அதில் வெகுநாட்களுக்கு முன்பு ஒருவர் போட்ட பின்னூட்டம் இது.

எங்கள் முதல் வருட Physics வாத்தியார் திரு வாஞ்சிநாதன் என்பவர் சொல்லிக்கொடுக்கும் முறையே அலாதியாக இருக்கும்.அதுவும் 36 வருடங்கள் கழித்து ஒரு மாணவர் ஞாபகம் வைத்துக்கொண்டு போட்ட இந்த பின்னூட்டம் தான் அவருக்கும் அவர் சொல்லிக்கொடுத்ததற்கும் மரியாதை.



இப்படிப்பட்ட வாத்தியார்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.